இந்த இந்திய கோவிலில் 700 ஆண்டுகளாக அணையாமல் இருக்கும் அகண்ட தீபம் - எங்கே?

பிரதாப ருத்ருடு அரசருக்கு பிறகு, அந்த பகுதியை ஆண்ட மற்ற மன்னர்களும் தீபம் அணையாமல் பாதுகாத்தனர். தீபத்திற்கு எண்ணெய் வாங்க, அரசர்கள் வசூலித்த வரிப்பணத்தில் ஒரு பகுதியை பயன்படுத்தப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன
இந்த இந்திய கோவிலில் 700 ஆண்டுகளாக அணையாமல் இருக்கும் அகண்ட தீபம் - எங்கே? என்ன காரணம்?
இந்த இந்திய கோவிலில் 700 ஆண்டுகளாக அணையாமல் இருக்கும் அகண்ட தீபம் - எங்கே? என்ன காரணம்?twitter
Published on

இந்து மத வழிபாட்டு வழக்கங்களில் கடவுளுக்கு விளக்கு ஏற்றுவது ஒரு முக்கிய சடங்காகும். நம் வீடுகளிலும் சரி, கோவில்களிலும் சரி, காலை மாலை பூஜைகள் செய்து விளக்குகள் ஏற்றுவோம்.

எண்ணெய், நெய் போன்றவை பயன்படுத்தி நாம் விளக்கள் ஏற்றுவோம், ஒவ்வொரு விதமான விளக்கிற்கும் ஒரு முக்கியத்துவம் இருக்கிறது.

அந்த வகையில், அகண்ட தீபம் என்ற ஒன்றையும் நாம் ஏற்றுவோம். சிலர் வீடுகளில் நவராத்திரி போன்ற சமயங்களில் ஏற்றுவார்கள், கோவில்களில் அகண்ட தீபம் ஏற்றுவது வழக்கம்.

இந்த அகண்ட தீபம் என்பது, அணையாமல் எப்போதுமே எரிந்துகொண்டிருக்கும். இதை அணையாமல் பத்திரமாக பார்த்துக்கொள்வது இந்து மதத்தில் அவசியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

தெலங்கானாவில் அமைந்துள்ள இந்த கோவிலில் சுமார் 700 ஆண்டுகளாக அகண்ட தீபம் ஒன்று எரிந்துகொண்டு இருக்கிறது

தெலங்கானா மாநிலம், கரீம்நகர் மாவட்டத்தில் கம்பீராவ் பேட்டா என்ற இடத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ சீதா ராமர் கோவில்.

இந்த கோவிலை 1314ஆம் ஆண்டு பிரதாப ருத்ருடு என்ற காகதீய வம்சத்தை சேர்ந்தவர் கட்டியெழுப்பினார். இது குறித்த ஆதாரங்கள் அந்த கோவில் மணியில் எழுதப்பட்டு இருக்கிறது.

அப்போது இருந்து இந்த கோவிலில் அகண்ட தீபம் அல்லது நந்தா தீபம் ஏற்றப்பட்டு, அணையாமல் பாதுகாக்கப்படுகிறது. பிரதாப ருத்ருடு அரசருக்கு பிறகு, அந்த பகுதியை ஆண்ட மற்ற மன்னர்களும் தீபம் அணையாமல் பாதுகாத்தனர். தீபத்திற்கு எண்ணெய் வாங்க, அரசர்கள் வசூலித்த வரிப்பணத்தில் ஒரு பகுதியை பயன்படுத்தப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன

இந்த இந்திய கோவிலில் 700 ஆண்டுகளாக அணையாமல் இருக்கும் அகண்ட தீபம் - எங்கே? என்ன காரணம்?
பீகார் மகாபோதி கோவில்: நூற்றாண்டுகள் பழமையான இந்திய பாரம்பரிய தலத்தின் சிறப்புகள் என்ன?

கோவிலின் அர்ச்சகரான வேணுகோபால சாரி, கூறுகையில், மன்னர்களின் ஆட்சிக்காலம் முடிவடைந்த பிறகு, ஊர் மக்கள், நன்கொடையாளர்கள் இந்த விளக்கிற்கு எண்ணெய் வழங்கியதாக தெரிவித்தார்.

மேலும் கம்பீராவ் பேட்டையில் வசிக்கும் ராமுலு - பிரமிளா என்ற தம்பதியினர், தங்கள் வாழ்நாள் முழுவதிலும் இந்த அகண்ட தீபத்திற்கு எண்ணெய் வழங்குவதாக வாக்குறுதி கொடுத்துள்ளனர்.

ஆண்டுதோறும் இந்த கோவிலில் ஸ்ரீ ராம நவமி பண்டிகை விமர்சியாக கொண்டாடப்படுகிறது. இந்த கோவிலில் இருக்கும் 16 தூண்கள் கொண்ட பிரம்மாண்ட மண்டபத்தில் ராமருக்கும் சீதாவுக்கும் நடைபெறும் திருக்கல்யாணத்தை காண பக்தர்கள் குவிகின்றனர்

இந்த இந்திய கோவிலில் 700 ஆண்டுகளாக அணையாமல் இருக்கும் அகண்ட தீபம் - எங்கே? என்ன காரணம்?
குஜராத்: 11ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மோதேரா சூரிய கோவில் - இதன் சிறப்புகள் என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com