செந்திலாண்டவர் டு சாளுக்கிய சிவன்: இந்தியாவில் நிச்சயம் பார்க்க வேண்டிய பழமையான கோவில்கள்

தென்னிந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் பழமையான கோவில்கள் உள்ளன. அது குறித்து இங்கு காணலாம்.
Oldest temples in each state of South India that you must visit
Oldest temples in each state of South India that you must visitTwitter
Published on

வரலாறு மற்றும் கலாச்சாரம் பற்றிய புரிதலில் இந்தியாவில் உள்ள கோவில்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியா 2 மில்லியனுக்கும் அதிகமான கோவில்களைக் கொண்ட நாடு.

ஒவ்வொரு ஆண்டும், பல நூற்றாண்டுகளாக இருக்கும் கோயில்களைப் பற்றி புதிதாக கண்டுபிடிப்பதால் அந்த எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கிறது.

பழமையான கோவில்கள் இந்தியாவில் பல காணப்படுகின்றன. குறிப்பாக தென்னிந்தியாவில் உள்ள பழமையான கோவில்கள் பற்றி காணலாம்.

செந்திலாண்டவர் கோவில் - தமிழ்நாடு

செந்திலாண்டவர் கோவில் தமிழ்நாட்டின் பழமையான கோவில் என்று கூறப்படுகிறது. கி.பி 1ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக நம்பப்படும் இக்கோவில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என்று கூறப்படுகிறது.

இது தூத்துக்குடியில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் திருச்செந்தூரில் அமைந்துள்ளது. கிழக்கு வாசல் இல்லாத ஒரே இந்து கோவில் இது தான். இக்கோயில் முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

பரசுராமேஸ்வர சுவாமி கோவில் - ஆந்திரப் பிரதேசம்

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள பழமையான கோயிலாகவும், சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பழமையான கோயிலாகவும் நம்பப்படும் இந்தக் கோயிலுக்குப் பின்னால் நிறைய வரலாறுகள் உள்ளன.

இக்கோயிலில் உள்ள சிவலிங்கம் கிமு 3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கூறப்படுகிறது. திருப்பதியில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குடிமல்லம் கிராமத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.

சாளுக்கிய சிவன் கோவில் - கர்நாடகா

இந்தியாவின் பழமையான கோயில்களில் நன்கு அறியப்பட்ட சாளுக்கிய சிவன் கோயில் 5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இந்த கோவில் முதலில் விஷ்ணுவுக்காக அர்ப்பணிக்கப்பட்டது.

இருப்பினும், அதன் முக்கிய சன்னதியில் இப்போது நந்தியுடன் கூடிய சிவலிங்கம் உள்ளது. பாகல்கோட் நகரத்திலிருந்து 37 கிலோமீட்டர் தொலைவில் இக்கோவில் உள்ளது.

Oldest temples in each state of South India that you must visit
திருநெல்வேலி முதல் திருவனந்தபுரம் வரை - வியப்பளிக்கும் 8 இந்தியக் கோவில்கள்

ஆலம்பூர் நவபிரம்மா கோயில்கள் - தெலுங்கானா

"நவ-பிரம்மா" என்ற பெயர் இருந்தாலும், இந்த கோவில்கள் சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டவை. அவை 5 ஆம் நூற்றாண்டில் பாதாமி சாளுக்கியர்களால் கட்டப்பட்டன.

இந்த கோவில்கள் தெலுங்கானாவில் உள்ள பழமையான கோவில்கள் என்று அறியப்படுகிறது. ஜோகுலாம்பா கட்வால் மாவட்டத்தில் உள்ள ஆலம்பூர் நகரில் இந்த கோயில்கள் அமைந்துள்ளன. ஹைதராபாத்தில் இருந்து ஆலம்பூர் 215 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

வைக்கம் சிவன் கோவில் - கேரளா

இந்த பட்டியலில் சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட மற்றொரு கோயில் இதுவாகும். வைக்கம் ஸ்ரீ மஹாதேவ் கோயில் 1594 இல் கட்டப்பட்டது. துறவி பரசுராமரால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கோவிலை சுற்றி பல சுவாரஸ்யமான புனைவுகள் உள்ளன.

வைக்கம் எர்ணாகுளம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கொச்சியிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

Oldest temples in each state of South India that you must visit
திருப்பதி முதல் சபரி மலை வரை: இந்தியாவின் பணக்கார கோவில்கள் என்னென்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com