Porn: ரயில் நிலைய இலவச wifi-ல் ஆபாச படங்களை ட்வுன்லோட் செய்யும் பயணிகள்- அதிர்ச்சி தகவல்

ரயில் நிலையங்களில் வழங்கப்படும் இலவச வைஃபையில் பயணிகள் ஆபாசப்படங்களைத் தரவிறக்குவதாக தகவல் வெளிவந்துள்ளது.
Railway Station
Railway StationTwitter
Published on

ரயில் பயணிகளின் உபயோகத்திற்காக ரயில்வேத் துறை பல முன்னெடுப்புகளைச் செய்து வருகிறது. ரயில்களை லைவாக கண்காணிப்பது முதல் ரயில் நிலையங்களின் அட்டவணை வரை அனைத்தையும் மொபைலில் அறிய முடியும். இதற்காக இலவச இன்டெர்நெட் வசதியும் ரயில்வே துறை வழங்குகிறது.

ஆனால் இந்த இலவச வைஃபை பல இடங்களில் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்று வைஃபை வழங்கும் ரயில்டெல் நிறுவனம் கூறுகிறது. அதிலும் ரயில் நிலைய வைஃபையில் நிர்வாணப்படங்களைத் தரவிறக்கும் பட்டியலில் தெலுங்கானாவைச் சேர்ந்த செகந்திராபாத் ரயில் நிலையம் முதல் இடத்தில் இருக்கிறது.

ஆபாசப்படங்களை ரயில் நிலையத்தில் பார்ப்பது மற்றும் பதிவிறக்கம் செய்வது போன்ற செயல்களில் பயணிகள் ஈடுபடுகின்றனர். செகந்திராபாத்தைத் தொடர்ந்து ஹைதராபாத், விஜயவாடா மற்றும் திருப்பதி இரயில் நிலையங்கள் இந்த பட்டியலில் உள்ளன.

Watching Porn
Watching PornTwitter

RailWire வைஃபையை வழங்கும் ரயில்டெல் நிறுவனம் கூறுவதுப்படி, ஒட்டுமொத்த ரயில்நிலைய ஆபாசப்படங்களில் 35% செகந்திராபாத் மற்றும் விஜயவாடா நிலையங்களில் தரவிறக்கப்படுகிறது.

Railway Station
கத்தாரை வீழ்த்திய இந்தியா : எதில் தெரியுமா? - இந்தக் கட்டுரையை படியுங்கள்

இந்த வைஃபை 30 நிமிடங்கள் மட்டுமே இலவசமாக வழங்கப்படும். 30 நிமிடங்களைத் தாண்டும் போது, பணம் செலுத்தவேண்டும். இந்த 30 நிமிடத்துக்குள் 350 MB அளவு செலவழிக்கும் பயணிகளில் 90% பேர் ஆபாசப் படங்களுக்காகச் செலவழிப்பதாக ரயில்டெல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய ரயில்வே இன்னும் 588 நிலையங்களுக்கு வைஃபை சேவையை விரிவுபடுத்தும் நிலையில் ஆபாசப்படங்களைப் பார்ப்பதால் இணைய வேகம் குறையும் குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

Railway Station
விமான நிலையத்தில் ஒளிபரப்பான ஆபாச வீடியோ - பயணிகள் முகச்சுளிப்பு

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com