பிரேசில் விமான நிலையத்தில் விமானங்கள் வருகை குறித்த தகவல்களை அறிவிக்கும் திரையில் திடீரென ஆபாச படங்கள் வந்ததால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமை பிரேசிலின் ரியோ - டி - ஜெனிரோ விமாநிலையத்தில் பயணிகள் முகம் சுளிக்கும் விதமாக இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இதனால் பயணிகள் அசௌகரியமடைந்தனர்.
பலர் தங்கள் கண்களை மூடிக்கொண்டனர். குழந்தைகளுக்கு அந்த படத்தை மறைக்க முயன்றனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின. அதில் பயணிகள் அந்த படங்கள் திரையானதும் விழுந்து விழுந்து சிரிப்பது தெரிந்திருக்கிறது.
இந்த சம்பவத்தில் ஹேக்கர்கள் ஈடுபட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இது குறித்து விமான நிலைய அதிகாரி இன்ஃப்ரேரோ காவல்துறையில் புகார் தெரிவித்திருக்கிறார்.
ஆபாச வீடியோ ஒளிபரப்பாவதற்கு காரணமான தகவல் வழங்கும் சேவையானது தனியார் நிறுவனத்துக்கு அவுட்சோர்ஸ் செய்யப்பட்டது எனக் கூறப்பட்டுள்ளது.
அந்த நிறுவனம் தான் திரையில் வெளியான வீடியோவுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்று இன்ஃப்ரேரோ கூறியுள்ளார். இந்த சம்பவம் நடந்த உடனே விமான தகவல் அளிக்கும் திரைகள் அணைக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust