பெங்களூரூ: வாடகைக்கு வீடு கிடைக்கவில்லை - ஜெயில் ரூமையே வீடாக மாற்றிய நபர்

புகைப்படத்தை பார்த்த இணையவாசிகள் அது ஒரு சிறைச்சாலை அறை என்பதை கண்டறிந்ததலில் இருந்து அவரது பதிவு வைரலாகி வருகிறது. பலரும் தங்கள் வீடுகளுடன் ஒப்பிடுகையில் இந்த அறை நல்ல வசதியுடனே இருக்கிறது என்று கமெண்ட் செய்து வருகின்றனர்
பெங்களூரூ: வாடகைக்கு வீடு கிடைக்கவில்லை - சிறைச் சாலையை வீடாக மாற்றிய நபர்
பெங்களூரூ: வாடகைக்கு வீடு கிடைக்கவில்லை - சிறைச் சாலையை வீடாக மாற்றிய நபர்ட்விட்டர்

வாடகைக்கு, நம் வசதிகளுக்கு ஏற்றவாறு வீடு கிடைப்பது இப்போதெல்லாம் மிகவும் கடினமாகிவிட்டது. அதுவும் பெங்களூரு, சென்னை போன்ற நகரங்களில் வீடு தேடி அலைபவர்களின் கதைகள் பல சமூக வலைதளங்களில் நாம் படித்திருப்போம்.

இங்கும் பெங்களூருவில் ஒருவர் வாடகைக்கு வீடு கிடைத்துவிட்டதாக பகிர்ந்திருந்த பதிவு கவனம் ஈர்த்து வருகிறது

மந்தன் குப்தா என்ற நபர் தன் ட்விட்டர் பக்கத்தில் தன் வீட்டின் புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருந்தார். ஒரு குறுகிய அறையில், மெத்தையுடனான கட்டில், ஒரு சிறிய மேஜை மற்றும் ஒரு கப்போர்ட் வைக்கப்பட்டிருந்தது.

சிறை (Representational)
சிறை (Representational)Canva

அங்கு கைக்கழுவ ஒரு வாஷ் பேஷனும் இருந்தது. அந்த அறையில் ஜன்னல், வாசல் கதவுகள் எல்லாம் இரும்பு கம்பிகளால் செய்யப்பட்டுள்ளது.

ஒரு நபர் மட்டுமே நிற்கக்கூடிய அந்த இடத்தின் புகைப்படத்தை பகிர்ந்தவர், “பெங்களூருவில், இறுதியில் ஒரு fully furnished வீட்டை கண்டுபிடித்துவிட்டேன். இங்கு 24x7 பாதுகாப்பு கிடைக்கும்” என்ற கேப்ஷனுடன் பதிவிட்டிருந்தார்.

பெங்களூரூ: வாடகைக்கு வீடு கிடைக்கவில்லை - சிறைச் சாலையை வீடாக மாற்றிய நபர்
நரேந்திர மோடி: இந்திய பிரதமருடன் பானி பூரி சாப்பிட்ட ஜப்பான் பிரதமர் | Viral Video

புகைப்படத்தை பார்த்த இணையவாசிகள் அது ஒரு சிறைச்சாலை அறை என்பதை கண்டறிந்ததலில் இருந்து அவரது பதிவு வைரலாகி வருகிறது. பலரும் தங்கள் வீடுகளுடன் ஒப்பிடுகையில் இந்த அறை நல்ல வசதியுடனே இருக்கிறது என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

அதில் ஒருவர், “சிறை ஒரு மனிதன் மாற நல்ல அனுபவங்களை கொடுக்கும், அது அவர்களுக்கு ஒழுக்கத்தை கற்றுக்கொடுத்து, ஒரு சீரான பாதையில் இட்டுச்செல்ல வழிவகுக்கும். நிஜத்தில், மக்கள் தாமாக முன்வந்து சிறை அறைகளை வாடகைக்கு எடுத்து தங்க யாராவது வழி செய்ய வேண்டும்” என்று கமெண்ட் செய்திருந்தார்

பெங்களூரூ: வாடகைக்கு வீடு கிடைக்கவில்லை - சிறைச் சாலையை வீடாக மாற்றிய நபர்
’வாவ்... க்யூட்’ - பெண் வேடமிட்டு கடவுளை வழிபடும் விநோத திருவிழா: வைரல் புகைப்பட பின்னணி?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com