சாணி திருவிழா: புத்தாண்டில் கிராமத்தினர் கொண்டாடும் வினோத விழா - என்ன காரணம்?

மாட்டு சாணத்தை ஒருவர் மீது ஒருவர் வீசியெறியும் பிடாகலா சமரம், அல்லது பிடாகலா போர் ஆந்திரா மாநிலம் கர்னூலில் நடக்கிறது. இந்த சடங்கானது, தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி நாளுக்கு அடுத்த நாள் நடக்கிறது.
சாணி திருவிழா: புத்தாண்டில் கிராமத்தினர் கொண்டாடும் வினோத விழா - என்ன காரணம்?
சாணி திருவிழா: புத்தாண்டில் கிராமத்தினர் கொண்டாடும் வினோத விழா - என்ன காரணம்?ட்விட்டர்
Published on

இந்தியாவில் கொண்டாடப்படும் விழாக்களில் பல விதமான சடங்குகள் பின்பற்றப்படும். இவற்றிற்கு பின்னால் அறிவியல் ரீதியாவகவும் காரணங்கள் இருக்கும், சில சமயங்களில் வரலாற்றுக் கதைகள் இருக்கும்.

அப்படி தான் இந்தியாவின் இந்தப் பகுதியில் கொண்டாடப்படும் சாணிப் போர் சடங்கும்.

பெயரை சரியாகத்தான் படித்தீர்கள். மாட்டு சாணத்தை ஒருவர் மீது ஒருவர் வீசியெறியும் பிடாகலா சமரம், அல்லது பிடாகலா போர் ஆந்திரா மாநிலம் கர்னூலில் நடக்கிறது. இந்த சடங்கானது, தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி நாளுக்கு அடுத்த நாள் நடக்கிறது.

புது வருடப்பிறப்பு ஆங்கில காலண்டரின்படி, ஜனவரி ஒன்றாம் தேதி பின்பற்றப்படுகிறது. அதை தவிர்த்து, இந்தியாவில் தமிழ் வருடப்பிறப்பான, சித்திரை ஒன்றாம் நாள், மற்றும் தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிக்காரர்கள் கொண்டாடும் யுகாதியும் பின்பற்றப்படுகிறது.

இது அறுவடை காலம் நிறைவடைவதையும், ஏராளமான பயிர்கள் விற்பனைக்கு தயாராக இருப்பதையும் குறிக்கிறது.

இந்த நாளில் புத்தாடைகள் அணிந்து, கோவில்களுக்கு சென்று, அந்த வருடம் நன்றாக அமையவேண்டும், நல்ல விளைச்சல், லாபம், மற்றும் வளர்ச்சி காணவேண்டும் என சிறப்பு பூஜைகள் செய்கின்றனர்.

இவற்றை தவிர்த்து ஆந்திர பிரதேசம் மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் அமைந்துள்ள கைருப்பாலா என்ற கிராமத்தில், ஒரு வினோத திருவிழா நடக்கிறது.

முதல் நாள் யுகாதி அன்று, வீட்டின் வாசலில் கோலமிட்டு, மாவிலை, வேப்பிலை தோரணங்கள் கட்டி அலங்கரித்து, பூஜைகள் நடக்கின்றன. பின்னர் குடும்பத்துடன் இணைந்து கோவிலுக்கு சென்று, சமைத்த அறுசுவை உணவை உற்றார் உறவினரோடு அருந்தி மகிழ்கின்றனர்.

மறுநாள் வரை இந்த கொண்டாட்டங்கள் தொடர்கின்றன. அடுத்த நாள் கொண்டாட்டத்தில் ஒரு போர் நடக்கிறது. கிராமத்தினர் இரு பிரிவுகளாக பிரிந்து, ஒருவர் மீது ஒருவர் சாணி அடித்துக்கொள்ளும் போர் அது.

இதனை பிடாகலா சமரம் என்று அழைக்கின்றனர்

சாணி திருவிழா: புத்தாண்டில் கிராமத்தினர் கொண்டாடும் வினோத விழா - என்ன காரணம்?
இரண்டாவது திருமணமா? அடுத்தவர் மனைவி தான் மணப்பெண்- வினோத வழக்கம் பின்பற்றும் பழங்குடியினர்

எதனால் தொடங்கியது இந்த சாணி போர்?

கதைகளின்படி, இந்து மதக் கடவுள்களான, பத்ரகாளி மற்றும் விதர்பரின் திருமணத்திற்கு முன் நடந்த சம்பவம் தான் இதற்கு வழிவகுத்துள்ளது.

விதர்பர் பத்ரகாளியை பின் தொடர்ந்து வந்து தொல்லைகள் கொடுத்துள்ளார். கோபமடைந்த பத்ரகாளி, ”இனியும் என் பின்னால் வந்தால் சாணத்தை எடுத்து உன்னை அடிப்பேன்” என்று மிரட்டியுள்ளார்.

இதனை மீறி விதர்பர் மறுநாள் பத்ரகாளியை திருமணம் செய்துகொள்ள தனது உறவினர்களோடு வந்து சேர்ந்தார். பத்ரகாளி, தன் கிராமத்தினரிடம் கூறி, வந்தவர்கள் மீது சானத்தை வீசச் சொன்னார். இரு தரப்பும் ஒருவர் மீது ஒருவர் இவ்வாறு சாணத்தை அடிக்க, அது ஒரு போராக மாறியது.

பின்னர் கிராமத்தின் தலைவர்கள் குறுக்கிட்டு, இரு தரப்பினரையும் சமாதானம் செய்து, பதர்காளிக்கும், விதர்பருக்கும் திருமணம் செய்து வைத்தனர்.

இது காலப்போக்கில் சடங்காக மாறியுள்ளது. இவ்வாறு ஒருவர் மீது ஒருவர் சாணத்தை அடிப்பதால் சுகாதாரம் மேம்படுகிறது என்றும், வளங்கள் பெருகி, கிராமத்தில் அதிகபடியான மழை பொழியும் என்றும் இவர்கள் நம்புகின்றனர்

சாணி திருவிழா: புத்தாண்டில் கிராமத்தினர் கொண்டாடும் வினோத விழா - என்ன காரணம்?
Malcha Mahal: இந்திய தலைநகரில் அமைந்திருக்கும் இந்த அமானுஷ்ய மாளிகை பற்றி தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com