Pitbull: 5 கிராமங்களில் 12 பேர் காயம்; அடங்காத நாயை கொலை செய்த இராணுவ வீரர்- என்ன நடந்தது?

டாங்கோ ஷா கிராமத்தில் இருந்து சுஹான் கிராமம் வரை சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தை சுற்றி வந்த நாய், வழியில் செல்லும் மக்களை தாக்கியது.
pitbull
pitbullTwitter
Published on

5 கிராம மக்களை தொடர்ந்து தாக்கி வந்த பிட்புல் நாயை ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ஒருவர் தற்காப்புக்காக கொன்றனர்.

பஞ்சாபின் குர்தாஸ்பூரில் உள்ள 5 கிராமங்களில் 12 பேரை பிட்புல் வகை தாக்கியதில் அவர்கள் பலத்த காயமடைந்தனர்.

டாங்கோ ஷா கிராமத்தில் இருந்து சுஹான் கிராமம் வரை சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தை சுற்றி வந்த நாய், வழியில் செல்லும் மக்களை தாக்கியது.

pitbull
pitbullTwiotter

டாங்கோ ஷா கிராமத்திற்கு அருகே இரண்டு தொழிலாளர்களை நாய் முதலில் கடித்தது.

அதன் கழுத்தில் சங்கிலியை வீசி இருவரும் தங்களை காப்பாற்றிக் கொண்டனர். எனினும், நாய் கிராமத்திற்குள் புகுந்தது. வீட்டில் அமர்ந்திருந்த 60 வயதான திலீப் குமார் என்பவரை அந்த நாய் கடித்தது.

அவர் நாயின் கழுத்தைப் பிடித்துத் தடுக்க முயன்றார். ஆனால் நாய் திலீப் குமாரை இழுத்துச் சென்றது. பின்னர் அவரது அண்ணன் உயிரைக் காப்பாற்றினார்.

இதைத் தொடர்ந்து, சானி கிராமத்திற்கு ஓடிய பிட்புல் அங்கு தூங்கிக் கொண்டிருந்தவர்களை கடித்தது. காலை நடைபயிற்சி செய்பவர்களை தாக்கி காயப்படுத்தியது.

pitbull
Pitbull, Rottweiler நாய்களுக்கு தடை விதித்த மேயர்- காரணம் என்ன?

பின்னர் சுஹான் கிராமத்தை நோக்கி ஓடிய பிட்புல், வயல்வெளியில் நடந்து கொண்டிருந்த கேப்டன் சக்தி சிங் என்ற ஓய்வுபெற்ற ராணுவ வீரரை தாக்கி அவரது கையில் பலத்த காயம் ஏற்பட்டது.

பின்னர் கிராம மக்கள் அவரை காப்பாற்ற வந்தனர். சிங் மற்றவர்களுடன் சேர்ந்து அந்த நாயை தற்காப்புக்காக கொன்றனர்.

காயமடைந்தவர்கள் தினாநகர் மற்றும் குர்தாஸ்பூர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

pitbull
தெருநாய் தொல்லை : துப்பாக்கி ஏந்தி மகள்களுக்கு பாதுகாப்பு அளித்த தந்தை

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com