Odisha: டேரிங்பாடி முதல் டிப்ரிகார் வரை - சுற்றுசூழல் சுற்றுலா செல்ல 10 இடங்கள்!

இங்கிருக்கும் செழிப்பான காடுகள் பல வகையான வன உயிரினங்களுக்கு வாழ்விடங்களாக இருக்கின்றன. தனித்துவமான தாவரங்கள், விலங்குகள், பறவைகளை இங்கு பார்க்க முடியும்.
Odisha: டேரிங்பாடி முதல் டிப்ரிகார் வரை - சுற்றுசூழல் சுற்றுலா செல்ல 10 இடங்கள்!
Odisha: டேரிங்பாடி முதல் டிப்ரிகார் வரை - சுற்றுசூழல் சுற்றுலா செல்ல 10 இடங்கள்!Twitter

ஆசியாவிலேயே மிகப் பெரிய உப்பு ஏரி, இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய சதுப்பு நிலக் காடு, அழகிய பள்ளத்தாக்கு என இயற்கை ஆர்வலர்கள் கண்டுகளிக்க பல இடங்கள் உள்ளன.

சுற்றுச்சூழல் சுற்றுலா சென்று இயற்கையைப் பற்றி தெரிந்துகொள்ள சிறந்த இடமாக ஒடிஷா இருக்கும். 

இங்கிருக்கும் செழிப்பான காடுகள் பல வகையான வன உயிரினங்களுக்கு வாழ்விடங்களாக இருக்கின்றன. தனித்துவமான தாவரங்கள், விலங்குகள், பறவைகளை இங்கு பார்க்க முடியும்.

ஒடிசாவின் பல்லுயிர் தன்மையை பிரதிபலிக்கும் சுற்றுசூழல் சுற்றுலா செல்லக் கூடிய இடங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.

டேரிங்பாடி

ஒடிஷாவில் குளிர்காலத்தில் பனிப்பொழிவு நிகழும் ஒரே இடம் இந்த பைன் மரங்கள் சூழ்ந்த மலைப் பகுதிதான்.

பருவ மழைப் பொழியும் காலத்தில் பசுமை சொர்க்கம் போல இந்த இடம் இருப்பதைக் காணலாம். 

இங்கு சுற்றுசூழல் மட்டுமல்லாமல் பழங்குடி சுற்றுலாவும் மேற்கொள்ளலாம். பிரிட்டிஷ் காலத்தில் இந்த பகுதியை ஆங்கிலேயர்கள் உல்லாசமாக நேரத்தைக் கழிக்க பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. 

பைன் மற்றும் காபி விவசாயம் இங்கு பெருமளவில் நடைபெற்று வருகிறது. புதுடி நீர்வீழ்ச்சி, கருப்பு மிளகு மற்றும் மஞ்சள் தோட்டங்கள் மற்றும் பெல்கர் சரணாலயம் ஆகிய இடங்கள் பிரபலம். 

பெட்னாய்

ஒடிஷாவின் கன்ஜம் (Ganjam) மாவட்டத்தில் உள்ள  சிறிய கிராமம் தான் பெட்னாய். இங்கு மிகவும் அருகிவரும் கருப்பு மான்களைப் (Antelope cervicapra) பார்க்கலாம்.

இந்த கிராமத்தில் உள்ள ஒவ்வொருத்தரும் இந்த மான்களை பாதுகாப்பது தங்களின் கடமை எனக் கருதி அவற்றுக்காக பல முன்னெடுப்புகளை செய்து வருகின்றனர்.

குல்தியா வனவிலங்கு சரணாலயம் (Kuldiha Wildlife Sanctuary)

இந்த செழிப்பான காட்டில் நாம் சிறுத்தைகள், யானை மந்தைகள் மற்றும் ராட்சத மலபார் அணில்கள் பல்வேறு வகையான வனவிலங்குகளில் உள்ளன.

இந்தக் காடு வளமான தாவர மற்றும் விலங்கினங்களைக் கொண்டுள்ளது.  சால், ரோஸ்வுட், ஷிமுல் மரங்கள் மற்றும் ஏராளமான ஒட்டுண்ணி மரங்கள் இங்கு இருக்கின்றன.

அருகில் உள்ள ரிசியா அணைப் பகுதியில் சென்றால் பலவகையான பறவைகளைக் காணலாம். இங்கு செல்வதற்கு முன்னனுமதி பெற வேண்டியது அவசியம்.

சிமிலிபல் 

இங்கு பலவகையான உயிரினங்கள் இருக்கின்றன. ராயல் பெங்கால் புலிகள், 304 வகையான பறவைகள் மற்றும் தாவரங்கள், இந்த சரணாலயம் பல்லுயிர் வளம் மிகுந்தது.

ஜூன் முதல் நவம்பர் மாதங்களில் இங்கு செல்ல முடியாது. 

நந்தன்கானன் உயிரியல் பூங்கா

இந்த பூங்காவுக்கு கடவுளின் தோட்டம் என்ற பெயரும் இருக்கிறது. வனவிலங்கு பிரியர்கள் நிச்சயமாக இதனை பார்வையிடலாம்.

சடபடா

அழிந்துவரும் உயிரினமான ஐராவதி டால்பின்களை இங்குள்ள சிலிகா ஏரியில் காணலாம். சிலிகா ஏரி வங்காள விரிகுடா கடலை சந்திக்கும் இடத்தில் அழகிய தீவு ஒன்றும் உள்ளது. இங்குள்ள உள்ளூர் மீன் உணவுகளுக்கு மவுசு அதிகம்.

சட்கோசியா

ஒடிஷாவில் இருக்கும் அழகான பள்ளத்தாக்கு பகுதி இதுவாகும். மகாநதி ஆறு 22 கிலோமீட்டர் இங்கு பாய்கிறது. இங்கும் பல வகையான உயிரினங்களைப் பார்க்கலாம், அவற்றில் முக்கியமானவை புலிகள்.

பிதர்கனிகா தேசிய பூங்கா (Bhitarkanika National Park)

இந்தியாவின் இரண்டாவது பெரிய சதுப்புநில காடு இதுதான். பிராமணி, பைதராணி, தம்ரா மற்றும் படாசாலா நதிகள் இங்கு ஓடுகிறது. இங்கு நிறைய முதலைகள் இருப்பதைக் காணலாம்.

முதலைகள் மட்டுமல்லாமல்  மான், ஹைனாக்கள், காட்டுப்பன்றிகள் போன்ற பலவகையான விலங்குகளையும் உலகின் பல பகுதிகளில் இருந்து வரும் பறவைகளையும் இங்கு காணலாம். இங்கு 8 வகையான மீன்கொத்தி பறவைகளைக் காணலாம்.

Odisha: டேரிங்பாடி முதல் டிப்ரிகார் வரை - சுற்றுசூழல் சுற்றுலா செல்ல 10 இடங்கள்!
Himachal Pradesh : குளிர் காலத்தில் சுற்றிப் பார்க்க வேண்டிய 10 அட்டகாச இடங்கள்

டிப்ரிகார் (Debrigarh Wildlife Sanctuary)

இந்த சரணாலத்தில் எளிதாக விலங்குகளைக் காணலாம். குறிப்பாக இந்திய காட்டெருமை, காட்டுப்பன்றிகள், சாம்பார் (ஒரு வகை மான்) மற்றும் மயில்கள் அதிகமாக தென்படும்.

நான்கு கொம்புகள் கொண்ட மான் அல்லது சௌசிங்காவை இங்கு காணலாம்.  இந்த சரணாலயம் 40 வகையான பாலூட்டிகள், 234 வகையான பறவைகள், 41 வகையான ஊர்வன, 12 வகையான நீர்வீழ்ச்சிகள், 42 வகையான மீன்கள், 39 வகையான தும்பிகள், 85 வகையான பட்டாம்பூச்சிகள் மற்றும் சர்வதேச அளவில் குறிப்பிடத்தக்க விலங்குகளின் எண்ணிக்கை காரணமாக முக்கியத்துவம் வாய்ந்தது.

சிறுத்தை, காட்டெருமை மற்றும் சௌசிங்கா. இந்த சரணாலயம் அற்புதமான நீர்வீழ்ச்சிகளுக்கும் பெயர் பெற்றது.

Odisha: டேரிங்பாடி முதல் டிப்ரிகார் வரை - சுற்றுசூழல் சுற்றுலா செல்ல 10 இடங்கள்!
இமாச்சல் : மம்மி சங்கா முதல் காந்த மலை வரை - அவிழ்க்க முடியாத 5 மர்ம முடிச்சுகள் !

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com