பாலியல் தொழில் குற்றமல்ல - டிவிட்டர் டிரெண்டிங்கில் #prostitution

பாலியல் தொழிலாளிகளின் வேலையை ஒரு தொழிலாக அங்கீகரித்த உச்சநீதிமன்றம் சட்டப்படி ஒரு இடத்தில் பாலியல் தொழிலாளர்கள் கூடி தொழில் செய்வதைக் குற்றமில்லை எனக் கூறவில்லை, மாறாக பாலியல் தொழிலாளிகளை இந்தியாவில் கண்ணியத்தோடு நடத்துவது தொடர்பான பிரச்சனையில் உச்ச நீதிமன்றம் சில உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
Supreme court
Supreme courtTwitter
Published on

பாலியல் தொழிலாளர்களை மரியாதையுடனும், சமமாகவும் நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவில் செக்ஸ் வொர்க்கர்ஸ், பாலியல் தொழிலாளர்கள் நலன் சார்ந்த முக்கியமான வழிகாட்டல்கள் வெளியானது.

அதில்

  • பாலியல் தொழிலும் ஒரு தொழிலே ஆகும்.

  • ஒரு மனிதனும் மனிதாபிமானத்துடனும் கண்ணியமாகவும் நடத்தப்பட வேண்டும்.

  • ஆர்டிகல் 142 படி பாலியல் தொழில் செய்யும் பெண்களை காவல்துறையினர் மரியாதையாகவும் கண்ணியத்துடனும் நடத்த வேண்டும்.

  • பாலியல் தொழிலைத் தனது விருப்பத்துடன் செய்யும் எந்த பெண்ணும் பொதுவெளியில் அவமானப்படுத்தப்படக்கூடாது.

sex work
sex workTwitter
  • ஒரு பிரச்சனை என்று புகார் கொடுக்க வந்தால் அந்த புகாரை ஏற்று முறைப்படி விசாரிக்க வேண்டும்.

  • பாலியல் தொழில் செய்யும் பெண்களைக் குறித்த செய்திகள் வெளியாகும்போது அவர்களின் பெயர் வெளியிடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

  • பாலியல் தொழில் செய்வதாக குற்றச்சாட்டு வந்தால் தாமாக விரும்பி செய்யும் பெண்களை கைது செய்யவோ காவலில் வைக்கவோ கூடாது.

  • பாலியல் தொழில் பெண்களிடமிருந்து அவர்களின் குழந்தைகளைப் பிரிக்கக்கூடாது.

Supreme court
சிறுநீரிலிருந்து தயாரிக்கப்படும் ‘பீர்' - எங்கு தெரியுமா?
Law
LawTwitter
  • பாலியல் தொழில் செய்யும் பெண்களுடன் வாழ்ந்தாலே அவர்கள் பாலியல் தொழில் செய்பவர்கள் எனப் பார்க்கக்கூடாது.

  • அவர்களுக்கு சட்ட பாதுகாப்பும் அனைத்து குடிமக்களுக்கும் கிடைக்கும் வண்ணம் கிடைக்க வேண்டும்.

  • இந்த தீர்ப்பு இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

Twitter trend
Twitter trendTwitter

பாலியல் தொழிலாளிகளின் வேலையை ஒரு தொழிலாக அங்கீகரித்த உச்சநீதிமன்றம் சட்டப்படி ஒரு இடத்தில் பாலியல் தொழிலாளர்கள் கூடி தொழில் செய்வதைக் குற்றமில்லை எனக் கூறவில்லை, மாறாக பாலியல் தொழிலாளிகளை இந்தியாவில் கண்ணியத்தோடு நடத்துவது தொடர்பான பிரச்சனையில் உச்ச நீதிமன்றம் சில உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

இதனையடுத்து டிவிட்டர் டிரெண்டிங்கில் #prostitution உள்ளது.

Supreme court
மலானா: மர்மங்களால் சூழப்பட்ட ஒரு இமயமலை திகில் கிராமம் - ஒரு விசிட்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com