ஒரு உணவகத்தின் அமைப்பு அங்கு வழங்கப்படும் உணவுகள் அனைத்தையும் கடந்து நாம் சிறப்பாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது விருந்தோம்பலை தான்.
எவ்வளவு சிறப்பான உணவையும் வேண்டா வெறுப்பாக ஒருவர் கொண்டு வந்து கொடுத்தால் அனுபவித்து சாப்பிட முடியாது. சிறந்த விருந்தோம்பலுக்கு அன்பான பணியாளர்கள் வேண்டும்.
புனேவில் உள்ள இந்த அமைதியான உணவகம், அப்படியான பணியாளர்களால் நிறைந்திருக்கிறது. இங்கு இருக்கும் யாருக்கும் காது கேட்காது. அவர்களால் பேசவும் முடியாது.
டெர்ராசின் (Terrasinne) என்ற உணவகம் புனேவில் இயங்கி வருகிறது. இங்கு வரும் வாடிக்கையாளர்களும் கூட சைகை மொழியிலேயே தங்கள் விருப்ப உணவுகளை கேட்டுப் பெற்றுக்கொள்கின்றனர்.
அங்கு இருக்கும் மெனு கார்டில் சைகை மொழியில் எந்தெந்த உணவுகளை எப்படி கேட்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
அதனைப் பின்பற்றி தேவையானவற்றை கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம். சாப்பிட்டு முடிந்த உடனே உணவகப் பணியாளர்கள் சாப்பாடு எப்படி இருந்தது என்றும் கேட்டுத் தெரிந்துகொள்கின்றனர்.
இன்ஸ்டாகிராம் பயனர் ஒருவர் இந்த உணவகம் பற்றிய வீடியோவைப் பகிர்ந்திருக்கிறார்.
ஒரு பெண் அந்த உணவகத்துக்குள் நுழைந்ததும் மரியாதையும் அன்பும் பெற்றுக்கொண்டு அத்துடன் உணவையும் வாங்கி சுவைக்கிறார் அந்த வீடியோவில்.
இந்த வீடியோ 7 லட்சத்துக்கும் அதிகமானோரால் லைக் செய்யப்பட்டிருக்கிறது. வீடியோ தலைப்பில் உணவுகள் ருசியாக இருந்ததாகவும் விரைவாக வழங்கப்பட்டதாகவும் கூறியுள்ளனர்.
அத்துடன் இந்த ஹோட்டல் லண்டனில் உள்ள விருந்தோம்பல் கவுன்சிலில் சிறந்த விருந்தோப்பலுக்கான விருதையும் பெற்றுள்ளதாம். இந்த உணவகத்தில் வாடிக்கையாளர்கள் பேசினாலே தவிர சத்தமே இருக்காது அல்லவா...!
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust