மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த பெண் ஒருவரை அவரது கணவர் மற்றும் கணவரின் குடும்பத்தினர் நிர்வாணமாக மக்கள் முன்னிலையில் குளிக்க வற்புறுத்தியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொழிலதிபரை திருமணம் செய்துகொண்ட 30 வயதான பெண் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் துன்புறுத்துவதாக புகார் அளித்துள்ளார்.
புகாரில், கடந்த 2013ஆம் ஆண்டு முதல், வரதட்சணை கேட்டும், தனக்கு ஆண் குழந்தை பிறக்காததற்காகவும் மாமியார் தன்னை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்துவதாக கூறியுள்ளார்.
இதற்கிடையில் அந்த பெண்ணிற்கு ஆண் குழந்தை இல்லை என்று கணவர் குடும்பத்தார்கள் பல சமயங்களில் சாமியார்கள் சொல்வதை கேட்டு சில சடங்குகளைச் செய்து வந்துள்ளனர்
சமீபத்தில் கோலாப்பூரைச் சேர்ந்த ஒரு மாந்திரீகரிடம் அந்த பெண்ணின் கணவருக்கு பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக மாந்திரீகரிடம் அழைத்துச் சென்று அங்கு அந்த பெண்ணுக்கு சூனியம் போன்ற மாந்திரீக பரிகாரங்களை செய்ததாகக் கூறப்படுகிறது.
மேலும் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறக்க ஆலோசனை கேட்டுள்ளனர். அதற்கு அந்த சாமியார் அவர் அந்த பெண்ணை பொதுவெளியில் ஒரு நீர்வீழ்ச்சியின் கீழ் நிர்வாணமாக குளிக்கச் சொன்னார். அவ்வாறு செய்தால் அவருக்கு ஆண் குழந்தை பிறக்கும் என்று உறுதியளித்தார்.
இதனை தொடர்ந்து அந்த பெண் ராய்காட் மாவட்டத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சடங்குகளைப் பின்பற்றி அந்தப் பெண்ணை முழு நிர்வாணமாக பொது மக்கள் பார்வையில் குளிக்க வற்புறுத்தினர். இதனையடுத்து அந்த பெண் போலீசில் புகாரளித்துள்ளார்.
அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில் புனே காவல்துறை கணவர், மாமியார், உறவினர்கள் மற்றும் மவுலானா பாபா ஜமாதர் என்ற மந்திரீகவாதி உட்பட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust