Putulbari: கொல்கத்தாவில் இருக்கும் நிஜ ‘சந்திரமுகி’ மாளிகை - அமானுஷ்ய பின்னணி என்ன?

இந்த மாளிகையின் சொந்தக்காரருக்கு மகள் ஒருவர் இருந்தார். அவருக்கு பொம்மைகளின் மீது அலாதி பிரியம் இருந்ததால், நிறைய பொம்மைகளை சேகரித்தார்.
Putulbari: ’பொம்மைகளின் வீடு’ -  கொல்கத்தா ‘சந்திரமுகி’ மாளிகையின் அமானுஷ்ய பின்னனி என்ன?
Putulbari: ’பொம்மைகளின் வீடு’ - கொல்கத்தா ‘சந்திரமுகி’ மாளிகையின் அமானுஷ்ய பின்னனி என்ன?Twitter
Published on

இந்தியா எப்படி இங்குள்ள கோவில்களுக்காக அறியப்படுகிறதோ, அதே போல இங்குள்ள அமானுஷ்யங்கள் நிறைந்த இடங்களுக்காகவும் அறியப்படுகிறது.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும், நம்மை கதிகலங்கவைக்கும் இடங்கள் நிறைந்திருக்கின்றன.

அந்த வகையில், மகிழ்ச்சியின் நகரமாக கருதப்படும் கொல்கத்தாவிலும் ஒரு பயங்கரமான பழங்காலத்து மாளிகை இருக்கிறதாம்.

இந்த மாளிகையின் பெயர் புதுல்பரி. இந்த புதுல்பரி மேன்ஷனின் மர்மமான பின்னணி என்ன? வாருங்கள் தெரிந்துகொள்ளலாம்

நகர மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் இந்த மாளிகை வடக்கு கொல்கத்தாவில் அமைந்துள்ளது. இதனை பொம்மைகளின் வீடு ( House of Dolls) என்றும் அழைக்கின்றனர்.

இதனை பேய் வீடு என்றும் அழைக்கின்றனர். அதற்கு இரண்டு கதைகளை கூறுகின்றனர்.

முன்பொரு காலத்தில் வடக்கு கொல்கத்தாவில் இருந்த சோவாபஜார் வணிகத்திற்கு பெயர்பெற்றிருந்தது. இந்த சோவாபஜாரில் இருந்த ஒரு பிரம்மாண்ட மாளிகை தான் புதுல்பரி.

இப்பகுதியில் வணிகம் செழித்தோங்கியதால், அங்கிருந்த மேல் தட்டு மக்கள் பெரிதும் பயனடைந்தனர், தாழ்த்தப்பட்டவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தப்பட்டது.

இந்த தாழ்த்தப்பட்டவர்களாக கூறப்படும் மக்கள் இங்கிருந்த பணக்காரர்களின் வேலைக்காரர்களாக இருந்தனர். இதனால், இந்த குடும்பத்து பெண்கள், பணக்காரர்களால் வன்புணர்வு செய்யப்பட்டனர் எனவும், இவர்களில் சிலர் கொலை செய்யப்பட்டனர் எனவும் கூறப்படுகிறது.

புதுல்பரி மேன்ஷனில் பணியாற்றிய பெண்களின் கதியும் இது தான். இதனால் இவர்களின் ஆவிகள் இந்த மாளிகையை ஆட்கொண்டது

மேலும், இந்த மாளிகையின் சொந்தக்காரருக்கு மகள் ஒருவர் இருந்தார். அவருக்கு பொம்மைகளின் மீது அலாதி பிரியம் இருந்ததால், நிறைய பொம்மைகளை சேகரித்தார்.

இந்த பெண் மர்மமான முறையில் உயிரிழந்தார். இவரது ஆன்மா புதுல்பரி மேன்ஷனில் உலாவி வருகிறது என்று அங்கு சென்றவர்கள் கூறுகின்றனர். இரவு நேரத்தில் யாரோ அழுவது போன்ற சத்தம் கூட கேட்கிறது.

மேலும், இந்த மேன்ஷனுக்கு தங்குவதற்காக சென்ற மக்கள், சந்திரமுகி படத்தில் சொல்வது போல,

“இங்க இருக்க பொருளெல்லாம், திடீர் திடீர்னு உடையதாம், சாயுதாம்” என்பது போன்ற அனுபவத்தை பெற்றுள்ளனர்

தவிர ராத்திரி நேரத்தில் சலங்கைகள் அணிந்து மாளிகையில் நடனமாடுவதையும் சிலர் பார்த்துள்ளனர்.

Putulbari: ’பொம்மைகளின் வீடு’ -  கொல்கத்தா ‘சந்திரமுகி’ மாளிகையின் அமானுஷ்ய பின்னனி என்ன?
13ஆம் நூற்றாண்டு கோட்டை, 150 அடி ஆழமுள்ள குகைகள் - Gandikota பள்ளத்தாக்கின் வரலாறு என்ன?

இந்த மாளிகையில் பொம்மைகள் அப்படியே தான் இருக்கிறது. இந்த பொம்மைகள் என்றாவது ஒரு நாள் உயிர்பெறும் என்றும் கதைகள் கூறப்படுகிறது. இதனால் இந்த பகுதிக்கு மக்கள் வருவதை நிறுத்திக்கொண்டனர்.

பேய் பிசாசுகள் மேல் ஆர்வம் கொண்டவர்களும், பேய் ஓட்டிகளும் தான் தற்போது இந்த இடத்திற்கு செல்கின்றனர்.

இதுவெல்லாம் ஒரு புறம் இருந்தாலும், புதுல்பரி மாளிகை ஒரு பழமையான கட்டிடம் என்பதாலும், இது கொல்கத்தாவின் அடையாளங்களில் ஒன்றாக இருப்பதாலும் அரசு இந்த மாளிகையை புணரமைக்கும் திட்டத்தில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

Putulbari: ’பொம்மைகளின் வீடு’ -  கொல்கத்தா ‘சந்திரமுகி’ மாளிகையின் அமானுஷ்ய பின்னனி என்ன?
Malcha Mahal: இந்திய தலைநகரில் அமைந்திருக்கும் இந்த அமானுஷ்ய மாளிகை பற்றி தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com