Ashwin: சர்ச்சை ட்விட்டர் பதிவிற்கு இந்திய வீரர் பதில் - இணையத்தில் வைரலாகும் Thug Reply

பொதுவாகவே இந்திய கிரிக்கெட் அணியின் மீதான சாடல்களுக்கும், விமர்சனங்களுக்கும், கேலிகளுக்கும், பேசுபவர் வாயை அடைக்கும்படியாக நகைச்சுவை கலந்து இருக்கும் இவரது பதில்கள்.
Ashwin
Ashwinட்விட்டர்
Published on

ட்விட்டர் பயனர் ஒருவரின் சர்ச்சைக்குறிய பதிவு ஒன்றிற்கு நகைச்சுவையாக இந்திய கிரிக்கெட் வீரர் அஷ்வின் அளித்த பதில் அனைவரது பாராட்டுகளையும் கவனத்தையும் பெற்று வருகிறது.

மைதானத்தில் பந்துவீச்சில் மட்டுமல்லாமல், நிஜ வாழ்க்கையிலும், அஷ்வின் ஆஸ்திரேலிய வீரர்களை சொற்களால் பந்தாடுவது நாம் அறிந்ததே.

ஒரு முறை நிருபர் ஒருவர், உங்களுக்கும் மேக்ஸ்வெல்லுக்கும் என்ன பிரச்னை என்று கேட்டபோது, “வாய்க்கா தகராறு” என்று தக் ரிப்ளை கொடுத்திருந்தார் அஷ்வின்.

அது மட்டுமல்ல, பொதுவாகவே இந்திய கிரிக்கெட் அணி மீதான சாடல்களுக்கும், விமர்சனங்களுக்கும், கேலிகளுக்கும், பேசுபவர் வாயை அடைக்கும்படியாக நகைச்சுவை கலந்து இருக்கும் இவரது பதில்கள்.

Keerthanaa Ravikumar

அந்த வகையில் ட்விட்டர் பக்கம் ஒன்றில், பயனர் ஒருவர் ட்வீட் ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில், “Boys only need one thing and that starts with B" என்று இருந்தது.

இதனை கவனித்த அஷ்வின், இதற்கு பதிலளிக்கும் விதமாக, தன் ட்விட்டரில், “Border- Gavaskar Trophy" என்ரு பதிவிட்டிருந்தார். அஷ்வினின் இந்த சமயோஜித பதில், அனைவரது கவனத்தை பெற்றுள்ளது.

Ashwin
”தோனி உலகக்கோப்பை வென்றுவிட்டால்?” ரசிகர்களின் வாயை அடைத்த அஷ்வின் - என்ன பேசினார்?

Border- Gavaskar Trophy என்பது என்ன?

இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு இடையில் நடைபெறும் பார்டர் கவாஸ்கர் டிராஃபி தொடருக்கு காலம் காலமாகவே கிரிக்கெட் உலகினர், ரசிகர்கள் அதிக ஆவலோடு காத்திருப்பார்கள்.

ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர் மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரை பெருமைப்படுத்தும் விதமாக இந்த தொடர் விளையாடப்படுகிறது.

1996ல் தொடங்கியதிலிருந்து, இதுவரை நடந்த இந்த பிஜிடி எனப்படும் பார்டர் கவாஸ்கர் டிராபியில் இந்திய அணி தான் அதிக வெற்றி சதவிகிதத்தைக் கொண்டுள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு நடைப்பெற்ற தொடரை இந்தியா கைப்பற்றி, முன்னிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி சார்பில், இந்த தொடரில் அதிக ரன்களை சச்சின் டெண்டுல்கரும், அதிக விக்கெட்களை அணில் கும்ப்ளேவும் வைத்திருக்கிறார்கள். வரும் பிப்ரவரி 9 ஆம் தேதி தொடங்குகிறது இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர்.

Ashwin
"தோனி மட்டும் தான் என்னிடம் பேசினார்" - மனம் திறந்த விராட் கோலி

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com