காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாரத் ஜோடோ என்ற பெயரில் காஷ்மீர் முதல் கன்னியாக்குமரி வரை நடைபயணம் மேற்கொள்கிறார். காங்கிரஸ் கட்சி இருக்கும் மோசமான நிலையில் தொண்டர்களுக்கு உற்சாகமளிக்கவும் மக்களிடையே மதிப்பைப் பெறவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது இந்திய ஒற்றுமை நடைபயணம் என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த பயணத்தின் போது ராகுல் காந்தி அணிந்த சட்டை சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த சட்டையின் விலை குறித்த ஸ்க்ரீன் ஷாட் உடன் பாஜக ஒரு ட்வீட்டை வெளியிட்டிருக்கிறது.
"பாரதமே, பார்" எனத் தலைப்பிட்டு பகிரப்பட்ட அந்த ட்வீட்டில் ராகுல் காந்தி அணிந்திருக்கும் டி-சர்ட் விலை ரூ.41,257 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பயணத்தின் போது செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி இந்த டி-சர்ட்டை அணிந்திருந்தார். பாஜக ஏற்படுத்திய இந்த சர்ச்சைக்கு பதிலடிக் கொடுத்திருக்கிறது காங்கிரஸ்.
இந்த ட்வீட்டை ரீட்விட் செய்த காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கம், "பாரத் ஜோடோ யாத்திரைக்கு சேரும் கூட்டத்தைப் பார்த்து அஞ்சுகிறீர்களா?" என ஒரு பதிவை வெளியிட்டுள்ளது.
"பிரச்னைகள் குறித்து பேசுங்கள்... வேலையில்லா திண்டாட்டம் குறித்து பணவீக்கம் குறித்து பேசுங்கள்
நாம் மற்ற உடைகளைப் பற்றி விவாதிக்கலாம். மோடிஜியின் ஆடை 10 லட்சம் ரூபாய், கண்ணாடி 1.5 லட்சம் ரூபாய்.
என்ன செய்யலாம் கூறுங்கள்" என பாஜகவை கேட்டுள்ளது காங்கிரஸ்.
இந்தியாவின் முக்கியமான தேசிய கட்சிகளின் டிவிட்டர் சண்டை இணையத்தை பற்றவைத்துள்ளது. இரு கட்சி தொண்டர்களும் ஆதரவாளர்களும் தங்களது கருத்துக்களை கூறிவருகின்றனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust