Raksha Bandhan: சகோதரத்துவத்தை போற்றும் ரக்ஷா பந்தன் ஏன் கொண்டாடப்படுகிறது?

ஒரு பெண், தனது சகோதரனுக்கு அல்லது அவர் சகோதரனாகக் கருதும் நபருக்கு ராக்கி எனப்படும் புனித நூல் கட்டுவதும், அதற்கு அந்த சகோதரன், “உன்னை நான் என் சகோதரியாக ஏற்றுக் கொள்கிறேன். நான் உன்னை இனி பாதுகாக்கும் அறனாக இருப்பேன்.” எனக் கூறும் நாளாக ரக்‌ஷா பந்தன் தினம் பார்க்கப்படுகிறது.
Raksha Bandhan
Raksha BandhanTwitter
Published on

ரக்ஷா பந்தன் பொதுவாக வட மாநிலங்களில் விமர்சையாக கொண்டாடப்படும் பண்டிகை. ஆனால் தற்போது நாடு முழுவதும் சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் விதமாக இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.

உடன் பிறந்தவர்கள் அல்லது சகோதரத்துவ இணைப்பு உள்ளவர்கள் இந்த பண்டிகையைக் கொண்டாடுகின்றனர்.

ரக்ஷா பந்தன் கொண்டாட்டம்

ரக்ஷா பந்தன் அன்று பெண்கள் ஒரு தட்டில் மஞ்சள் குங்குமம் சந்தன பூக்கள் மற்றும் ராக்கி கயிறு வைத்து தனது சகோதரனுக்கு ஆரத்தி எடுத்து இனிப்புகள் ஊட்டி அவருடைய கையில் ராக்கி கயிறு கட்டி பரிசும், ஆசியும் பெறுவார்.

ஒரு பெண், தனது சகோதரனுக்கோ அல்லது அவர் சகோதரனாகக் கருதும் நபருக்கு ராக்கி எனப்படும் புனித நூல் கட்டுவதும், அதற்கு அந்த சகோதரன், “உன்னை நான் என் சகோதரியாக ஏற்றுக் கொள்கிறேன். நான் உன்னை இனி பாதுகாக்கும் அறனாக இருப்பேன்.” எனக் கூறும் நாளாக ரக்ஷா பந்தன் தினம் பார்க்கப்படுகிறது.

Raksha Bandhan
தாஜ்மஹால் : ஷாஜகான் மும்தாஜ் காதல் மற்றும் சோகத்தின் கதை - ஒரு வரலாற்று பயணம்

புராணத்தில் தொடங்கிய ரக்ஷா பந்தன்

இந்த சகோதரத்துவ உணர்வு இன்று நேற்று வந்ததல்ல. காலம் காலமாக உள்ள இந்த பந்தம், மகாபாரத காலத்திலேயே தொடங்கப்பட்டது என்று புராணக் கதைகள் கூறுகின்றன.

மகாபாரதம்

மகாபாரத புராணத்தின்படி ஒருமுறை கிருஷ்ணன் காத்தாடி விட்டுக் கொண்டிருந்தபோது அந்த நூல் அவருடைய விரலைக் காயப்படுத்தி விடுகிறது. கிருஷ்ணனின் விரலில் இருந்து ரத்தம் வருவதைக் கண்ட திரெளபதி, வேதனை அடைந்து உடனடியாக தன்னுடைய சேலையின் ஒரு பகுதியைக் கிழித்து கிருஷ்ணரின் மணிக்கட்டில் கட்டினார்.

இது கிருஷ்ணரின் ஆழ்மனதைத் தொட்டதால், அவர் திரௌபதியைத் தனது சகோதரியாக ஏற்றுக்கொண்டு அவரை எல்லா தீயசக்திகளிடமிருந்தும், பிரச்னைகளிலிருந்தும் பாதுகாப்பதாக அவருக்கு உறுதியளித்தார்.

அதன்படி திரௌபதியைக் காப்பாற்றும் விதமாக, சூதாட்டத்தில் கௌரவர்களிடம் பாண்டவர்கள் தோற்று, திரௌபதியை துகிலுரிய முயன்றபோது, அவரை கிருஷ்ணர் காப்பாற்றினார்.

Raksha Bandhan
தங்கம் மனம் கொண்ட சிங்கம் டா தனுஷ்... பாசத்தை அள்ளி தெளிக்கும் அண்ணன் செல்வராகவன்

கர்ணாவதி அனுப்பிய நூல்

இதற்கு மற்றுமொரு கதையும் உண்டு. ராஜஸ்தான் மாநிலத்தின் சித்தூர் நாட்டை ஆண்டு வந்தவர் கர்ணாவதி என்ற ராணி. சித்தூர் நாட்டைக் கைப்பற்றும் விதமாக குஜராத்தை ஆண்ட சுல்தான் பகதூர் ஷா சித்தூர் மீது போர் தொடுத்தார்.

இதை அறிந்துகொண்ட கர்ணாவதி, முகலாய பேரரசர் ஹுமாயுனுக்கு ‘ராக்கி’ எனும் புனித நூலை அனுப்பி தனக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டார். இதனால் பாச உணர்வு கொண்ட ஹுமாயுன், கர்ணாவதி ராஜ்ஜியத்தைக் காக்க முற்பட்டார். ஆனால் அதற்குள் ராணியை வென்று, பகதூர் ஷா வெற்றிக்கொடி நாட்டினார்.

இவ்வாறு பல புராண கதைகள் இருப்பினும், குறிப்பிட்ட சமூகம் மற்றும் இடங்கள் கடந்து சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் விதமாக இந்த பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com