தாஜ்மஹால் : ஷாஜகான் மும்தாஜ் காதல் மற்றும் சோகத்தின் கதை - ஒரு வரலாற்று பயணம்

முகலாய அரசர் ஷாஜகானின் காதல் மனைவி மும்தாஜ் தன் கணவரிடம் வைத்த மூன்று கோரிக்கைகளில் ஒன்று தான், தான் தன் கணவரோடு கொண்டிருக்கும் காதலை நினைவு கூரும் விதமாக ஒரு நினைவுச் சின்னத்தை அவர் உருவாக்கவேண்டும் என்பது.
ஷாஜகான் மும்தாஜ்
ஷாஜகான் மும்தாஜ்Twitter
Published on

தாஜ்மஹால் என்றதும் நினைவுக்கு வருவது ஒரு அழகிய காதல் கதை. உலகிலேயே காதலுக்காகக் கட்டப்பட்ட ஒரு பிரம்மாண்டமான அழகான சின்னம் என்றால் அது தாஜ்மஹால்தான். அதைக் கட்டிய முகலாயப் பேரரசர் ஷாஜகான் தனது மனைவியான மும்தாஜை எவ்வளவு நேசித்தார் என்பதற்கு அளவே இல்லை என்று காட்டும் நினைவுச் சின்னம்தான் தாஜ்மஹால்.

ஷாஜகான் மற்றும் மும்தாஜ் ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகள் நிறைய எழுதப்பட்டிருக்கின்றன.

மும்தாஜ் எப்படி ,எங்கே இறந்தாள்? அவர்களுக்கு எத்தனை குழந்தைகள்? தாஜ்மஹால் ஏன் கட்டப்பட்டது? மும்தாஜ் தாஜ் மஹாலைப் பார்த்தாரா? போன்ற கேள்விகள் தாஜ் மஹாலை பற்றி சிந்திப்பவர்களுக்கு எழும்.

1592 ஆம் ஆண்டு பேரரசர் ஜஹாங்கிர் மற்றும் இந்து அன்னை ஜோதாபாய் ஆகியோருக்கு இளவரசர் ஷஹாபுதீன் முகம்மது குராம் பிறந்தார். அவர் "உலகப் பேரரசர்" என்பதைக் குறிக்கும் ஷாஜகான் என்ற பட்டப் பெயரைப் பெற்றார். அவர் ஒரு ராஜகுமாரனுக்குரிய அனைத்துப் பயிற்சிகளையும் பெற்றார். மற்றும் சிறந்த அறிஞர்களிடம் இறையியல் மற்றும் கல்வியைப் படித்தார். அவரது தாத்தா அக்பர் அவர் மீது அளவற்ற அன்பைப் பொழிந்தார்.

ஷாஜகான் மும்தாஜ்
ஷாஜகான் மும்தாஜ்Twitter

ஷாஜகான் மும்தாஜ் மஹாலை எப்படி சந்தித்தார்?

ஒருமுறை, வழக்கம் போல், ஆக்ரா கோட்டையின் புகழ்பெற்ற மீனா பஜாரில் உலா வந்தபோது, ஷாஜகான் ​​ஒரு அழகான பாரசீகப் பெண், கைவினைப்பொருட்கள் மற்றும் நகைகளை எடுத்துச் செல்வதைக் கண்டார். இந்த அழகின் முதல் பார்வை அவருடைய காதல் உணர்வைத் தூண்டியது. மீனா பஜாரில் உள்ள பெண்கள் தங்களுடைய ஸ்டால்களில் உள்ள விலையுயர்ந்த பொருட்களை ஷாப்பிங் செய்வது மிகவும் வழக்கமாக இருந்தது. ஏனெனில் அரசகுல பெண்கள் அங்கே பொருட்களை வாங்கிச் செல்வது வழக்கம்.

காதல் வயப்பட்ட இளவரசனால் இரண்டு நாட்கள் உறங்க முடியவில்லை. விசாரித்துப் பார்த்தால், இந்தப் பெண் வேறு யாருமல்ல, அவரது மாற்றாந்தாய் நூர்-ஜஹானின் மருமகளும், ஆசப் கானின் மகள் என்பதும் தெரிய வந்தது. இவ்விதமாக 1607 ஆம் ஆண்டு இருவருக்கும் ஏறக்குறைய 15 வயது இருக்கும் போது காதல் கதை தொடங்கியது. காலம் செல்லச் செல்ல, இருவர் உள்ளங்களிலும் இந்த நேசம் பெருகி, இறுதியாக 5 வருடங்கள் கழித்து அவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. இவ்வாறு இருவரும் 1612 ஆம் ஆண்டு சட்டப்பூர்வமாக திருமண பந்தத்தில் இணைக்கப்பட்டு தமது காதல் வாழ்வைத் தொடங்கினர்.

ஷாஜகான் மும்தாஜ்
ஷாஜகான் மும்தாஜ்Twitter

ஷாஜகான் மும்தாஜ் மஹால் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை

இந்த ஜோடி சுமார் 19 வருட திருமண வாழ்க்கையை ஒரு இலட்சியத் தம்பதி போல வாழ்ந்தனர். ஷாஜகான் பேரரசராக ஆட்சி செய்தபோது, அரசு உத்தரவுகளை ஆணையிடும் போது, இராணுவ பயணங்களை வழிநடத்தும் போது, அனைத்திலும் மும்தாஜும் ஒரு நிழல் போல அவரைப் பின் தொடர்ந்தார். இந்த காதல் வாழ்க்கையில் மும்தாஜ் 13 குழந்தைகளைப் பெற்றெடுத்தார். அவருக்கு வாரிசாக மூத்த மகன் தாராவை வழங்கினார். ஷாஜகான் - மும்தாஜ் தம்பதியினரின் மற்ற 3 மகன்களை இந்தியாவின் பல்வேறு மாகாணங்களின் ஆளுநராக நியமிக்கப்பட்டனர்.

ஷாஜகான் மும்தாஜ்
ஷாஜகான் மும்தாஜ்Twitter

ஷாஜகான் மும்தாஜ் காதல் கதையின் இருண்ட கட்டம்

ஷாஜகான் ஆட்சியில் இருந்தபோது அவர் ஒரு அரசராக பரபரப்பாக இயங்கினார். அவர் தனது மூத்த மகன் தாராவை வாரிசாக அறிவித்தார். மற்ற மூன்று மகன்களை புறக்கணித்த ஷாஜகான் மூத்த மகன் தாரா மீது அளவுகடந்த அன்பைப் பொழிந்தார். இதன் காரணமாக மற்ற மகன்களில் ஒருவரான ஔரங்கசீப் தனது தந்தையிடம் மெல்ல மெல்ல முரண்படத் துவங்கினார். இதை ஷாஜகான் புரிந்து கொள்ளவில்லை.

இதற்கிடையே ஔரங்கசீப் வெற்றிகரமான இராணுவப் படையெடுப்புகளுக்குத் தலைமை தாங்கினார். பல வெற்றிகளை ஔரங்கசீப் பெற்றாலும் நாளுக்கு நாள் தனது தந்தையை வெறுக்கத் துவங்கினார். அதே நேரத்தில், கான்-இ-ஜஹான் லோடி என்பவர் ஷாஜகானை எதிர்த்து கிளர்ச்சி செய்ய ஆரம்பித்தார். அவரை அடக்குவதற்கு ஷாஜகான் தனது இராணுவத்தை தெற்கு நோக்கி வழி நடத்தத் துவங்கினார். அப்போது மனைவி மும்தாஜ் கர்ப்பமாக இருந்தபோதிலும், உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோதிலும் கணவர் ஷாஜகானுடன் செல்ல முடிவு செய்தார்.

ஷாஜகான் மும்தாஜ்
டிஜிட்டல் மீடியா : மக்களிடையே பிளவை ஏற்படுத்துகிறதா? - உண்மை என்ன?

மும்தாஜ் மஹால் எங்கே, எப்படி இறந்தார்?

ஷாஜகான் கிட்டத்தட்ட 800 கிலோமீட்டர் பயணம் சென்ற பிறகு தனது இராணுவத்தை புர்ஹான்பூரில் முகாமிட உத்தரவிட்டார். லோடியைத் தாக்குவதற்கு ஷாஜகான் இராணுவம் தயாராக இருந்தது. இரண்டு நாட்களுக்குப் பிறகு லோடி தோற்கடிக்கப்பட்டார். இந்த வெற்றியில் ஷாஜஹானும் அவரது தளபதிகளும் மகிழ்ச்சி அடைந்தாலும் எதிர்காலத்தில் என்ன நடக்கப் போகிறது என்பதை அவர்கள் உணரவில்லை.

போர் நடந்த பகுதியில் ஷாஜகானது இராணுவம் பல முகாம்களை அமைத்திருந்தது. அதில் ஒரு முகாமில் தங்கிய மும்தாஜ் தனது காதல் கணவரும் முகலாய பேரரசரும் தன்னுடன் அதிக நேரத்தை செலவழிப்பார் என எதிர்பார்த்தார். போர் நடக்கும் இடத்தில் கூட தனது கணவனோடு பயணிக்கும் வண்ணம் அவரது காதல் ஆழமாக இருந்தது.

ஷாஜகான் மும்தாஜ்
ஷாஜகான் மும்தாஜ்Twitter

ஷாஜகானுக்கு சூஃபி துறவி எச்சரிக்கை

அதே நேரத்தில் ஒரு சூஃபி துறவி ஷாஜகானை சந்திக்க வந்தார். பேரரசருக்கு சில ஆப்பிள்களை வழங்கிய அந்த துறவி கறுப்பு கண்கள் மற்றும் வெள்ளை தோலுடன் உள்ள நபரிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு பேரரசரை எச்சரித்தார். ஷாஜகான் அந்த எச்சரிக்கையை கண்டு கொள்ளவில்லை . சூஃபி துறவி எச்சரித்த நபர் வேறு யாருமல்ல. ஷாஜகானது மூன்றாவது மகனான ஔரங்கசீப்தான். ஔரங்கசீப் கருப்பு கண்கள் மற்றும் வெள்ளை தோல் கொண்டவராக இருந்தார். அவர்தான் தனது தந்தைக்கு எதிராக எதிர்காலத்தில் சதி செய்யும் நபராக மாறுகிறார்.

இறக்கும் போது மும்தாஜ் மஹாலுடன் இருந்தவர் யார்?

மும்தாஜ் மஹால் தனது கூடாரத்தில் மருத்துவச்சிகள் சூழ இருக்கிறார். மற்றும் மருத்துவர் ஜஹான்-ஆரா அவரது மூத்த மகள் மற்றும் சத்-உல்-நிசா ஆகியோர் அங்கே பிரசவ வேலைகளில் மும்மூரமாக இருக்கிறார்கள். பணிப்பெண்கள் பலர் இருக்கிறார்கள். கூடாரத்திற்கு வெளியே ஷாஜகான் நல்ல செய்திக்காகக் காத்திருக்கிறார்.

ஷாஜகான் மும்தாஜ்
கார்ல் மார்க்ஸ் : யார் இவர்? 200 ஆண்டுகளுக்கு பின்னும் உலகம் இவர் குறித்து பேசுவது ஏன்?

திடீரென்று அவருக்கு ஒரு செய்தி வருகிறது!

பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்த மும்தாஜை பார்க்க அவர் விரைகிறார். ஜஹான் ஆரா, மும்தாஜுக்கு விருப்பமான பணிப்பெண் மற்றும் அரச மருத்துவர் பசீர் கான் ஆகியோரைத் தவிர மற்ற அனைவரும் வெளியேறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

திடீர் அமைதி நிலவுகிறது. மும்தாஜ் மஹால் 35 மணி நேரத்திற்கும் மேலாக பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்தார். அவருடைய பார்வை வெளிறி ஒருவித மயக்க நிலைக்குச் செல்கிறார்.

மும்தாஜ்
மும்தாஜ் Twitter

இறப்பதற்கு முன் ஷாஜஹானிடம் மும்தாஜ் மஹால் என்ன கேட்டார்?

1631 ஆம் ஆண்டு ஜூன் 17 ஆம் தேதி ஒரு மோசமான நாளில், ஷாஜகான் மும்தாஜ் மஹாலுக்கு அருகில் அமர்ந்து, அவள் தலையை அன்புடன் தடவி விடுகிறார். கண்ணீர் மல்க அவர் முணுமுணுத்தவாரே அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்கிறார். மும்தாஜோ சாவின் விளிம்பில் இருப்பதை உணர்ந்தாள். பசீர் கான் ஆதரவற்று நிற்கிறார். இறப்பதற்கு முன், கணவரிடம் தனது ஆசைகளை நிறைவேற்றும்படி மும்தாஜ் கேட்கிறாள். முதல் கோரிக்கை பேரரசர் ஷாஜகான் தனது குழந்தைகளையும், குடிமக்களையும் பாதுகாக்க வேண்டும்.

இரண்டாவதாக, அவர் வேறு பெண்களிடம் குழந்தைகள் பெற்றுக் கொள்ளக் கூடாது. மூன்றாவது தான் தன் கணவரோடு கொண்டிருக்கும் காதலை நினைவு கூர்ந்து ஒரு நினைவுச் சின்னத்தை உருவாக்குமாறு கோருகிறார். அந்நிலையில் அவளுக்கு 14 வது குழந்தை பிறக்கிறது. அப்படியே அவள் இறந்தும் போகிறாள். ஷாஜகான், மும்தாஜின் இரு கரங்களையும் தன் கையால் பற்றிக்கொண்டு, அன்பின் உருவகமான தாஜ்மஹால் எனும் காதல் நினைவுச் சின்னத்தை உருவாக்குவேன் என்று கூறி பிரியா விடைபெறுகிறார்.

ஷாஜகான் மும்தாஜ்
மான்சா மூசா : பில்கேட்ஸ், அமேசான் ஜெஃப் பெசாஸைவிட உலகின் மிகப்பெரிய பணக்கார தங்க அரசன் கதை

தாஜ்மஹால் மும்தாஜ் மஹாலின் முதல் கல்லறையா?

முகலாயர்களின் தலைநகரான ஆக்ராவிலிருந்து புர்ஹான்பூர் கிட்டத்தட்ட 800 கிமீ தொலைவில் இருக்கிறது. ஆக்ரா கோட்டையில் அவரது அரண்மனைக்கு அருகில் மும்தாஜின் கல்லறையை அமைக்க ஷாஜகான் விரும்பியதால், மும்தாஜின் உடல் தற்காலிகமாக புர்ஹான்பூரில் அடக்கம் செய்யப்பட்டது. ஆனால் மும்தாஜின் நினைவுச் சின்னத்தை அவர் ஆக்ரா கோட்டையில் கட்ட விரும்பினார். அதனால் அவர் ஒவ்வொரு நாளும் மும்தாஜின் நினைவிடத்தை எளிதாகப் பார்க்க முடியும். இஸ்லாத்தின் அனைத்து மத நடைமுறைகளுடன் மும்தாஜ் அடக்கம் செய்யப்பட்டார். அதன் பிறகு ஷாஜகான் தனது காதல் மனைவியை இழந்து பெரும் பாரத்துடன் ஆக்ரா திரும்பினார்.

ஷாஜகான் தனது தந்தையைப் போலல்லாமல் நிதானமான தன்மை கொண்டவர். அவர் மென்மையாகவும், கண்ணியமாகவும் பேசுவார். இது கூட மும்தாஜ் உடனான அவரது காதலின் விளைவாக இருக்கலாம். வரலாற்று அறிஞர்கள் அவரை சுய கட்டுப்பாடு உள்ளவராகக் கூறுகிறார்கள். அவர் அரிதாகவே மது அருந்தினார். பின்னர் அந்தப் பழக்கத்தை முற்றிலும் கைவிட்டு விட்டார். இசை நடனத்தில் நாட்டமுடையவராக இருந்தார். பல இசைக்கருவிகள் மற்றும் கவிதைகள் கேட்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

ஷாஜகானுக்கு பல மனைவிகள் இருந்தாலும் மும்தாஜ் மஹால் மீதுதான் அவருக்கு காதல் அதிகம். அவள் சாகும் வரை மனைவியுடன் முழு அர்ப்பணிப்புடன் இருந்தார். அவருடைய மற்ற மனைவிகளுக்கு பெரிய முக்கியத்துவம் ஏதுமில்லை.

taj mahal
taj mahalTwitter

மும்தாஜ் இறப்பதற்கு முன் கடவுள் தனது மனைவியைக் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையில் ஏழைகளுக்கு தானமளித்தார். ஆனால் மும்தாஜ் இறந்து விட்டார். இந்த மரணம் ஷாஜகானை மிகவும் பாதித்தது. அவர் ஒரு வாரம் தனது மாளிகை அறையை விட்டு வெளியே வரவில்லை. இசை, நடனம், பாடல் அனைத்தையும் துறந்தார். பல நாட்கள் அழுதார். மும்தாஜ் இறந்த புதன்கிழமை வரும்போதெல்லாம் வெள்ளை ஆடை மட்டும் அணிவார்.

புர்ஹான்பூரில் உள்ள தப்தி நதிக்கரையில் புதைக்கப்பட்ட மும்தாஜின் உடல் ஆறு மாதங்களுக்குப் பிறகு ஆக்ராவுக்குக் கொண்டு வரப்பட்டு ஜனவரி 8, 1632 அன்று மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது.

இதன் பிறகு மூன்றாவது முறையாக ஷாஜகான் ஒரு கல்லறையை மும்தாஜுக்காக கட்டினார். அதற்கு ரவுசா இ முனவ்வரா என்று பெயரிட்டார். இதுதான் பின்னர் தாஜ்மஹால் என்று அழைக்கப்பட்டது. இந்தக் கல்லறையைக் கட்டும் பொறுப்பு மிர் அப்துல் கரீம் மற்றும் மகர்மத் கான் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

தாஜ்மஹால் இருக்கும் இடம் அமைதியாக இருக்க வேண்டும், ஆக்ரா நகரத்திலிருந்து விலகி இருக்க வேண்டும், அதன் தோட்டங்களுக்கு நீர் பற்றாக்குறை ஏற்படாத வண்ணம் யமுனை நதிக்கு அருகில் இருக்க வேண்டும் என்று ஷாஜகான் விரும்பினார். முக்கியமாக தான் வாழும் ஆக்ரா கோட்டையில் இருந்து தாஜ்மஹால் தெரியும் படி இருக்க வேண்டும் என்பதற்காக கோட்டையில் இருந்து ஒன்றரை மைல் தொலைவில் அதை உருவாக்கினார்.

தாஜ்மஹால் பெரும் பொருட் செலவில் கட்டப்பட்டது. பல கட்டிடக் கலைஞர்கள், தொழிலாளிகள் பங்கேற்றனர். பளிங்குக் கற்கள் 200 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து பெரும் காளை மாடு வண்டிகளில் எடுத்து வரப்பட்டன. பல நாடுகளில் இருந்து விலை உயர்ந்த கற்கள், ரத்தினங்கள் வரவழைக்கப்பட்டு கட்டிடத்தில் பதிக்கப்பட்டன.

1659 இல் ஷாஜகானின் மகன் ஔரங்கசீப் தனது தந்தையைச் சிறையில் அடைத்த போது சில நாட்களுக்குப் பிறகு அவர் நோய்வாய்ப்பட்டார். தன் மகனிடம் தான் எப்போதும் தாஜ்மஹாலை பார்க்கும் வண்ணம் ஒரு பால்கனியில் இருக்க வேண்டும் என்ற விருப்பத்தை வெளிப்படுத்தினார். அதே பால்கனியில் 1666 ஜனவரி அன்று ஷாஜகான் இறந்து போனார். அவரது உடல் தாஜ்மஹாலில் அவரது மும்தாஜ் மஹாலுக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டது

ஷாஜகான் மும்தாஜ்
UAE : யார் இந்த Sheikh Khalifa bin Zayed Al Nahyan - இவர் அரபு அமீரகத்துக்கு செய்தது என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:


Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com