பூச்சிகளை உண்ணும் அரிய வகை தாவர இனம் : பல ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடிப்பு - எங்கு? எப்படி?

கொசுக்கள், சிறிய பூச்சிகளைப் பிடித்து உணவாக்கிக் கொள்வதற்காக, இந்த செடி வகை பயன்படுத்தப்படுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இந்த அரிதான தாவர இனமானது மேற்கு இமயமலைப் பகுதியில் முதன்முறையாகக் கண்டறியப்பட்டுள்ளது.
Rare plant
Rare plant twitter
Published on

சாமோலி மாவட்டத்தில் அமைந்துள்ள அழகிய பள்ளத்தாக்கில் உத்தரகாண்ட் வனத்துறையின் ஆராய்ச்சிக் குழு அரிய வகை உயிரினங்களைக் கண்டறிந்ததாகத் தலைமை வனத்துறை ஆராய்ச்சியாளர் சஞ்சீவ் சதுர்வேதி தெரிவித்தார்.

யூட்ரிகுலேரியா பர்செல்லாட்டா' (Utricularia Furcellata) எனப்படும் மிகவும் அரிதான தாவர இனமானது மேற்கு இமயமலைப் பகுதியில் முதன்முறையாகக் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Himalaya
HimalayaCanva

இதே போல, இதுவரை வெவ்வேறு வகைகளைச் சேர்ந்த சுமார் 20 தாவர இனங்கள் உத்தரகாண்ட் வனத்துறை ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்டுள்ளன.

தாவரவியல் துறையில் மிகவும் மதிப்புமிக்க பத்திரிகைகளில் ஒன்றாகக் கருதப்படும் ஜப்பானியத் தாவரவியல் இதழிலும் இந்த கண்டுபிடிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த அரிய வகை தாவரம், உத்தரகாண்ட் மட்டுமல்லாமல் மேற்கு இமயமலைப் பகுதி முழுவதும் இருப்பது இதுவே முதல்முறை என்று கூறுகின்றனர். ஏனெனில், 1986 க்குப் பிறகு, நம் நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தும் இந்த தாவர இனங்கள் சேகரிக்கப்படவில்லை.

Rare plant
250 மில்லியன் ஆண்டுகள் பழமையான உயிரினம் : புதை படிமம் கண்டுபிடிப்பு - ஆச்சர்ய தகவல்
Lipstick plant
Lipstick plant Twitte

கொசுக்கள், சிறிய பூச்சிகளைப் பிடித்து உணவாக்கிக் கொள்வதற்காக, இந்த செடி வகை பயன்படுத்தப்படுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

இதற்கு முன்பு அருணாசலப் பிரதேசத்தின் வனப்பகுதியில் 110 ஆண்டுகளுக்கும் பழமையான லிப்ஸ்டிக் தாவரத்தை, இந்தியத் தாவரவியல் ஆராய்ச்சி துறையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தது குறிப்பிடத்தக்கது.

Rare plant
110 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட 'லிப்ஸ்டிக் தாவரம்' - அப்படி என்ன சிறப்பு

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com