"நாங்கள் இந்துக்கள் அல்ல" - பழங்குடி மக்கள் கிளர்ச்சி செய்வது ஏன்?

ஜூன் 30, 1855ல் ஆங்கிலேயர்களை எதிர்த்து சந்தல் பழங்குடி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 6 மாதம் தொடர்ந்த இந்த போராட்டத்தில் 10000-க்கும் மேற்பட்ட பழங்குடி கிராமங்கள் சிதைக்கப்பட்டன. கிட்டத்தட்ட 15000 பேர் இறந்த இந்த போராட்டத்தை நினைவு கூறும் வகையில் பழங்குடி மக்கள் நேற்றைய தினத்தை தேர்ந்தெடுத்தனர்.
Tribes of India
Tribes of IndiaPexels

ஜார்கண்ட், ஒடிசா, அசாம் உள்ளிட்ட 5 மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடி மக்கள் தங்கள் மதம் சார்ந்த ஒரு கோரிக்கையை மத்திய அரசிடம் வலியுறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று நடந்த இந்த போராட்டத்துக்காக ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். பழங்குடி மக்களின் மதத்தை சர்னா மதமாக அங்கீகரிக்க வேண்டும் என அவர்கள் அரசை வலியுறுத்தினர்.

இதற்காக சந்தல் மந்தரில் தங்களது தெய்வங்கள் மற்றும் தலைவர்களிடம் ஆசியை வேண்டி மாபெரும் பிரார்த்தனையை நடத்தினர்.'சர்ண தர்ம நெறிமுறை'யை அரசு அங்கீகரிக்க வேண்டுமென அவர்கள் கோரிக்கையை அரசிடம் கொண்டு சென்றனர்.

ஜூன் 30, 1855ல் ஆங்கிலேயர்களை எதிர்த்து சந்தல் பழங்குடி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 6 மாதம் தொடர்ந்த இந்த போராட்டத்தில் 10,000-க்கும் மேற்பட்ட பழங்குடி கிராமங்கள் சிதைக்கப்பட்டன. கிட்டத்தட்ட 15,000 பேர் இறந்த இந்த போராட்டத்தை நினைவு கூறும் வகையில் பழங்குடி மக்கள் நேற்றைய தினத்தை (ஜூன் 30) தேர்ந்தெடுத்தனர்.

அதிவாசி செங்கல் அபியான் (adivasi sengel abhiyan) என்ற பழங்குடி மக்கள் அமைப்பு சார்பில் ஜார்கண்ட், அசாம், ஒடிசா, பீகார் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் 50 மாவட்டத்தைச் சேர்ந்த 250 தொகுதியிலிருந்து மக்கள் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Salkhan Murmu
Salkhan MurmuCanva

இது குறித்து ஊடகங்களிடம் பேசிய ஜார்கண்டின் முக்கிய பழங்குடித் தலைவரும், முன்னாள் எம்.பி-யுமான சல்கான் முர்மு, "வரும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் எங்களை இந்துக்களாக இல்லாமல் 'சர்னா' மதத்தவராக அங்கீகரித்து கணக்கீடு செய்ய வேண்டும் என கேட்பதற்காக நாங்கள் இங்கு கூடியிருக்கிறோம்" என்றார்.

``இது தொடர்பாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் எங்கள் மதத்தை `சர்னா'-வாக அங்கீகரிக்க வலியுறுத்த விரும்பினோம், ஆனால் அவரைச் சந்திக்கும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைக்கவில்லை. அதையடுத்து, எங்கள் கோரிக்கைகள் அடங்கிய கோப்புகளை காவல்துறை மூலம் குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பித்தோம்." எனவும் கூறினார்.

Tribes of India
'பழங்குடி மாணவர்களின் Master ' - 2 ரூபாய்க்கு டியூஷன் எடுக்கும் 78 வயது ஆசிரியர் சுஜீத்

1998 முதல் 2004 வரை ஒடிசாவின் மயூர்பஞ்ச் தொகுதியில் பாஜக எம்பியாக செயல் பட்ட முர்மு, "ஆதிவாசிகளான எங்களுக்கு தனிப்பட்ட மத நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் மற்றும் கலாச்சாரம் இருக்கிறது ஆனால், அது அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படவில்லை." என்றார்.

Tribes of India
Tribes of IndiaPexels

"ஆதிவாசிகளான நாங்கள் இந்துக்களோ அல்லது கிறிஸ்தவர்களோ இல்லை. எங்கள் சமூகத்தில் வர்ண அமைப்பு இல்லை. அதாவது எந்த ஏற்றத்தாழ்வுகளும் இல்லை" என முர்மு கூறினார்.

அத்துடன் அவர் பழங்குடி மதத்துக்கு அரசு முறையான அங்கீகாரம் வழங்காததால் அவர்கள் மற்ற மதங்களை நோக்கி இழுக்கப்படுகின்றனர் என்றும் கூறினார்.

"இந்தியாவில் 12 கோடி பழங்குடி மக்கள் இருக்கிறோம். நாங்கள் பட்டியலிடப்பட்ட பழங்குடி மக்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளோம். ஆனால் அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்ட எங்கள் மதம் இன்னும் அங்கீகரிக்கப்படாமல் இருக்கிறது" என அவர் பேசினார்.

Tribes of India
பிர்சா முண்டா : உலகம் கொண்டாட வேண்டிய ஒரு நிஜ நாயகன் குறித்த சில தகவல்கள்

"பழங்குடிகளின் இயற்கை வழிபாடும், மத சிந்தனைகள், நடைமுறைகள், கலாச்சாரம் மற்றும் பழக்கவழக்கங்கள் மற்ற மதத்திலிருந்து வேறுபட்டிருப்பதால் எங்கள் 'சர்னா' மதம் அங்கீகரிக்கப்பட வேண்டும்."

சர்னா என்ற வார்த்தைக்கு சந்தல் மொழியில் வழிபாட்டுத் தலம் என்று பொருள். இதனால் பழங்குடி மக்களுக்கு இடையில் பல்வேறு தனித்துவமான மதங்கள் இருந்தாலும் சர்னாவை எல்லா பழங்குடி மக்களுக்குமான ஒரே மதமாக அங்கீகரிக்கலாம் என முர்மு பேசினார்.

இந்தியாவிலிருக்கும் பழங்குடி மக்கள் பல ஆண்டு காலமாக தங்களது மத அங்கீகாரத்துக்காக போராடி வருவது குறிப்பிடத்தக்கது.

Tribes of India
வறண்ட நதி, வெளியே தெரிந்த 3000 ஆண்டு பழமையான நகரம் - ஓர் ஆச்சர்ய வரலாறு

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com