குரல் மூலம் கொரோனாவை கண்டறியும் செல்போன் செயலி : விஞ்ஞானிகளின் அசத்தல் சாதனை!

பிற பரிசோதனை முறைகளை ஒப்பிடுகையில் மிகவும் மலிவானது என்றும், குறைவான வருவாய் கொண்ட நாடுகளில் இவற்றை எளிதாகப் பயன்படுத்தலாம் என்றும் கூறியுள்ளனர்.
Smart phone
Smart phone Twitter
Published on

மக்களின் குரலை வைத்து COVID-19 தொற்றை எளிமையாகக் கண்டறிய ஸ்மார்ட்போன் செயலி ஒன்றை நெதர்லாந்தில் உள்ள மாஸ்ட்ரிக்ட் பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ளது.

கொரோனாவின் தாக்கம் பல்வேறு இடங்களில் குறைந்து வந்தாலும், மக்கள் தற்போது வைரஸுடன் வாழக் கற்றுக்கொண்டுள்ளனர்.

​​​​கொரோனா வைரஸ் பரவல் இன்னும் சில இடங்களில் இருக்கத் தான் செய்கிறது. எனினும் மக்கள் கோவிட் சோதனைகளைச் செய்ய வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் தற்போது இல்லை. பல வீட்டுப் பரிசோதனைக் கருவிகள் வந்துவிட்டன.

Corona
CoronaNewsSense

ஸ்மார்ட்போன் செயலி

இப்போது, ​​ஸ்மார்ட்போன் செயலியில் கோவிட் பரிசோதனை செய்ய முடியும் என்று சொன்னால்? ஆம்! ஸ்மார்ட்போன் செயலி மூலம் தொற்றை எளிமையாகக் கண்டறிய முடியும் என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

நெதர்லாந்தில் உள்ள மாஸ்ட்ரிக்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மக்களின் குரலை வைத்து COVID-19 தொற்றை எளிமையாகக் கண்டறிய ஸ்மார்ட்போன் செயலி ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

குறிப்பிட்ட நபரின் மருத்துவ வரலாறு, புகைபிடிக்கும் நிலை போன்ற சில அடிப்படைத் தகவல்களைப் பதிவு செய்து, பின்னர் அவர்களின் சில சுவாச ஒலிகளையும் பதிவு செய்ய வேண்டும்.

Smart phone
டோலோ 650 ஊழல் : வழக்கறிஞர் சொன்ன பகீர் தகவல் - அதிர்ந்த நீதிபதிகள்

மலிவான விலையில் சோதனை

இவற்றின் மூலம் குறிப்பிட்ட அந்த நபருக்கு தொற்று இருக்கிறதா? என்பதைத் துல்லியமாக இந்த செயலி தெரிவிக்கும் என நெதர்லாந்தைச் சேர்ந்த ஆய்வாளர் வபா அல்பவி தெரிவித்தார்.

இந்த செயலி 89 சதவீதம் அளவுக்குத் துல்லியமாக முடிவை காட்டும் எனத் தெரிவித்த விஞ்ஞானிகள், பிற பரிசோதனை முறைகளை ஒப்பிடுகையில் மிகவும் மலிவானது என்றும், குறைவான வருவாய் கொண்ட நாடுகளில் இவற்றை எளிதாகப் பயன்படுத்தலாம் என்றும் கூறியுள்ளனர்.

Smart phone
மதிய உணவில் கைவைத்த கொரோனா: Lunchflation குறித்து தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com