உலகில் உள்ள கோட்டைகள், கோவில்கள், கட்டிட கலையை உலக பராம்பரிய சின்னங்களாக அறிவித்துள்ளது யுனெஸ்கோ. அந்த வகையில் இந்தியாவில் உள்ள சில புனித தலங்களை யுனெஸ்கோ அங்கீகரித்துள்ளது, அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பீகார் போத்கயாவில் உள்ள மகாபோதி கோயில் கி.பி 5 மற்றும் 6 ஆம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்டது.
இந்த தலம் பௌத்த யாத்ரீகர்களுக்கான புனித தலமாக உள்ளது. இது 2002 இல் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக நியமிக்கப்பட்டது.
யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பட்டியலில் கர்நாடகாவின் ஹொய்சாள கோயில் இடம்பெற்றுள்ளது.
இங்கு உள்ள கட்டிடக்கலைக்காக 2014 முதல் யுனெஸ்கோவின் பட்டியலில் இணைந்தது.
சூரியனுக்கு என்று தேர் வடிவில் அமைக்கப்பட்ட இந்த கோயில் 24 நான்கு மணி நேரத்தை குறிக்கும் வகையில் இதன் அமைப்பு இருக்கும். தற்போது இது பழமையானதாக இருப்பதால் மறு சீரமைப்பு செய்யப்பட்டு வருகிறது.
மத்திய பிரதேசம் சாஞ்சியில் இருக்கும் தூண்கள், மடங்கள் கட்டிடக்கலை மிகவும் அற்புதமானது. இங்கு உள்ள புத்தமத நினைவு சின்னங்கள் உள்ளே இருக்கு கோயில்கள் கிமு 200-100க்கு முன்பு உள்ளது என கூறப்படுகிறது. இந்த புனித தலம் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
போர்த்துகீசிய காலனித்துவ ஆட்சியின் போது 16 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளில் கோவாவில் பல தேவாலயங்கள் அமைக்கப்பட்டது, இதன் கட்டிடக் கலைக்காக 1986 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவில் இணைந்தது. இங்கு உள்ள புனித பிரான்சிஸ் சேவியரின் நினைவுச்சின்னங்கள் இயேசுவின் பசிலிக்கா ஆகியவை மிகவும் பழமையானவை ஆகும்
பாறையின் மூலமாக குகைகளை குடைந்து உருவாக்கப்பட்ட மடங்கள் மற்றும் கோயில்களுடன், எல்லோரா குகைகள் உள்ளது. சமணம், பௌத்தம் மற்றும் இந்து மதம் ஆகியவற்றை குறிக்கும் சிலை அமைப்புகள் உள்ளது. இந்த இடம் 1983 இல் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அங்கீகரிக்கப்பட்டது.
பல்லவர்கள் காலத்தில் காஞ்சியில் எழுப்பிய கற்தூண்கள் மிகவும் பிரபலமானது பழமையானது. சீன அதிபரும் இந்திய பிரதமர் மோடியும் இங்குதான் சந்தித்தனர். பாறைகளில் உள்ள சிலைகள் தேர்வடிவிலான சிற்பங்கள் ஆகியவை பல்லவர்களின் கட்டிடக்கலைக்கு உதாரணம். இந்த இடம் 1984 ல் யுனஸ்கோவில் இணைந்தது.
புகழ்பெற்ற விருபாக்ஷா கோயிலை மையமாகக் கொண்டு, ஹம்பி இந்துக்களின் முக்கிய புனித தலமாக உள்ளது . 1986 இல் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அங்கீகரித்தது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust