சாரா சன்னி: உச்ச நீதிமன்றத்தில் சைகை மொழியில் வாதாடிய முதல் பெண்மணி - யார் இவர்?

தனக்கு கனவு நனவான தருணம் என்றும் தன்னைப் போன்ற மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுதாரணமாக இருக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார் சாரா.
சாரா சன்னி
சாரா சன்னிட்விட்டர்
Published on

சாரா சன்னி என்ற பெண் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி வரலாறு படைத்துள்ளார். அவரது கனவு நனவானது மட்டுமல்லாமல் அவரைப் போன்ற பலருக்கு இது உத்வேகம் அளித்துள்ளது. சாரா ஒரு காதுகேளாத பெண்மணி. உச்ச நீதிமன்றம் முதன்முதலாக சைகை மொழியில் வாதாடுவதற்கு அனுமதி அளித்துள்ளது.

கடந்த வெள்ளி அன்று உச்ச நீதிமன்றத்தில் இருந்த சாராவுக்கு அவரது சைகை மொழி மொழிபெயர்பாளர் அனைத்து வாதங்களையும் விளக்கினார். முதலில் சாரா சார்பில் சஞ்சிதா ஐன் என்ற வழக்கறிஞர் ஆஜராகி இந்திய தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட்டிடம் சாராவின் சைகை மொழிப்பெயர்பாளரை அனுமதிக்கும் படி கேட்டுக்கொண்டார்.

நீதிபதி அனுமதி வழங்கியதையடுத்து மொழிபெயர்ப்பாளர் நாள் முழுவதும் சாராவுக்காக சைகைகளை வழங்கினார்.

இந்தியாவின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மொழிபெயர்பாளரின் உழைப்பைப் பாராட்டினார். மேலும் இது வரவேற்கத்தக்க நிகழ்வு என்றும் கூறியுள்ளார்.

சஞ்சிதா ஐன் சாரா குறித்து, "சாரா ஒரு திறமையான பெண் மற்றும் அவள் தனது கனவுகளை அடைய விரும்புகிறாள். என்னால் முடிந்த வழிகளில் நான் அவளை ஆதரிக்கிறேன். காது கேளாதவர்களுக்காக இந்தியாவில் இத்தகைய உள்கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று நான் எப்போதுமே ஆசைப்பட்டேன்". என இந்தியா டுடே தளத்துக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

சாரா சன்னி
ஜெயஸ்ரீ: படுகர் சமுகத்தின் முதல் பெண் விமானி - யார் இவர்?

"மொழிப்பெயர்பாளரின் உதவியுடன் நான் தைரியமாக வாதாட கற்றுக்கொள்கிறேன்" என சாரா வழக்கு விசாரணைக்குப் பிறகு பேசியுள்ளார்.

மேலும் அவர், ஒரு மொழிப்பெயர்பாளரால் தொடர்ந்து 1 மணி நேரம் மட்டுமே வாதாடுவதை விளக்க முடியும் என்றும் ஒரு முழுமையான விசாரணைக்கு 2 மொழிபெயர்பாளர்கள் தேவைப்படுகிறார்கள் என்றும் கூறியுள்ளார்.

அத்துடன் மொழிபெயர்பாளர்கள் ஒருமணி நேரத்துக்கு 1000 ரூபாய் வசூலிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தனக்கு ஒரு கனவு நனவான தருணம் என்றும் தன்னைப் போன்ற மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுதாரணமாக இருக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

சாரா சன்னி
ஒடிசா: பெண் அர்ச்சகர்கள் பூஜை செய்யும் அம்மன் கோவில் - இங்கு ஆண்களுக்கு ஏன் அனுமதி இல்லை?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com