அருணாச்சல பிரதேசத்தில் புதிய வகை ’இசை தவளை’ கண்டுபிடிப்பு - விஞ்ஞானிகள் சொல்வதென்ன?

இந்த இசை தவளைகளில் மூன்று ஆண் மற்றும் இரண்டு பெண்களை சேகரித்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். ஜப்பான், தைவான், சீனா, வியட்நாம், லாவோஸ் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் தான் Nidirana இனங்கள் காணப்படும் என கூறுகின்றனர்.
Scientists discover new species of 'music frog' in Arunachal
Scientists discover new species of 'music frog' in ArunachalTwitter

அருணாச்சல பிரதேசத்தில் புதிய வகை 'இசை தவளை'யை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

பொதுவாக ஆண் தவளைகள் மட்டுமே சத்தம் எழுப்பும், ஆனால் இந்த புதிய வகை தவளை இனத்தின் (நிடிரானா நோடிஹிங்) சிறப்பு என்னவென்றால் ஆண், பெண் இருபாலரும் குரல் எழுப்புகின்றன.

நோவா ஆற்றின் அருகே உள்ள சதுப்பு நிலத்திலிருந்து சத்தம் கேட்டதாகவும் அந்த சத்தம் காட்டு வாத்து இனங்களைப் போன்று இருந்ததாகவும், ஜூடாக்சா இதழின் நவம்பர் 15 பதிப்பில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில் விஞ்ஞானிகளால் குறிப்பிடப்பட்டுள்ளது.

விஞ்ஞானிகள் பிதுபன் போருவா, வி தீபக் மற்றும் அபிஜித் தாஸ் ஆகியோர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை அருணாச்சல பிரதேச மாநிலத்தின் சாங்லாங் மற்றும் லோஹித் மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொண்டனர்.

அதில் 6 சென்டிமீட்டர் வரை வளரும், வெளிர் கிரீம் நிறத்தில் காணப்படும், ஆழமற்ற நீர்க்குளங்களில் இருக்கும் தவளைகளைக் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.

இந்த இசை தவளைகளில் மூன்று ஆண் மற்றும் இரண்டு பெண்களை சேகரித்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர். ஆண் தவளைகளின் நீளம் தோராயமாக 1.8 முதல் 2.3 அங்குலங்கள் வரை இருந்ததாகவும், பெண் தவளைகளின் நீளம் 2.4 முதல் 2.6 அங்குலங்கள் வரை இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

ஜப்பான், தைவான், சீனா, வியட்நாம், லாவோஸ் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் தான் Nidirana இனங்கள் காணப்படும். விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, புதிய இனமான நிடிரானா இனம் இந்தியாவில் முதல்முறையாக கண்டுபிடிக்கப்பட்டது உறுதியானது.

ஆய்வின் படி, தவளைகளின் தொண்டை, முன்கைகள், தொடைகள் மற்றும் கீழ் கால்கள் வெளிர் பழுப்பு மற்றும் இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ளன. அவற்றின் இடுப்பு மற்றும் தொடைகளின் வெளிப்புறம் வெளிர் மஞ்சள் நிறத்திலும், வயிறு தங்க நிறத்தைக் கொண்டுள்ளது.

Scientists discover new species of 'music frog' in Arunachal
கண்ணாடி போல் உடலை மாற்றும் தவளை : ரகசியத்தை கண்டறிந்த ஆராய்ச்சியாளர்கள் - எப்படி தெரியுமா?

நிடிரானா தவளை இனங்கள் சதுப்பு நிலங்கள், குளங்கள் மற்றும் நெல் வயல்களில் வசிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அவை பெரும்பாலும் முட்டையிடுவதற்கு கூடுகளை உருவாக்குகின்றன என்று ஆய்வு கூறுகிறது.

மியூசிக் தவளைகள் மற்ற உயிரினங்களிலிருந்து அவற்றின் அளவு, ஓவல் கால் நுனிகள் ஆகியவற்றால் வேறுபடுகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

இந்த கண்டுபிடிப்பு இந்தியாவில் நிடிரானா இனத்தின் இருப்பை உறுதிப்படுத்திருக்கிறது. சதுப்பு நிலங்கள் போன்ற வாழ்விடங்களை ஆராய்வதன் முக்கியத்துவத்தை இது வலியுறுத்துகிறது.

Scientists discover new species of 'music frog' in Arunachal
நேபாளம்: மனித உயிரை காவு வாங்கும் அரிய வகை தேன்! இதனை Mad Honey என்று அழைக்க என்ன காரணம்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com