பொதுவாக பச்சோந்திகள் தான் எதிரிகளிடம் இருந்து தப்பிக்க சுற்றுப்புறத்திற்கு ஏற்ப நிறத்தை மாற்றிக் கொள்ளும்.
ஆனால் தவளை இனங்கள் கூட இவ்வாறு தங்கள் தோற்றத்தை மாற்றும் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?
தெற்கு மற்றும் மத்திய அமெரிக்காவில் காணப்படும் சில தவளை இனங்கள் பகலில் தங்கள் உடலை பாதுகாத்துக்கொள்ள கண்ணாடி போல மாற்றிக்கொள்கிறது.
தவளை இனங்கள் மற்ற விலங்குகளிடமிருந்து தப்பிக்க தன் உடலை 61% ஒளி ஊடுருவக் கூடியதாக்கி, கண்ணாடி போல் மாற்றிக் கொண்டு இலையோடு இலையாக மறைந்து விடுகிறது.
இந்தத் தவளைகளைத் திருப்பிப் போட்டால், அவற்றின் இதயம் துடிப்பதை பார்க்க முடியும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
கண்ணாடித் தவளைகள் குறித்து ஆராய்ச்சியாளர்கள் அறிந்திருந்தாலும், அவை தன் உடலை கண்ணாடி போல் மாற்றுவது குறித்து நீண்ட காலமாக ஆய்வு மேற்கொண்டனர்.
அந்த ஆராய்ச்சியில் அதன் காரணத்தை கண்டுபிடித்துள்ளனர்.
அவை, தங்களது உடலில் உள்ள ரத்தம் உறையாமல், ரத்த அணுக்களை ஒரே இடத்தில் சேகரிப்பதன் மூலமே இவ்வாறு மாறுவதாக தற்போதைய ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
இதன் மூலம் மனித உடலில் ரத்தம் உறைவது எப்படி என்பதை புரிந்து கொள்ள முடியும் என்று கூறுகின்றனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust