நேபாளம்: மனித உயிரை காவு வாங்கும் அரிய வகை தேன்! இதனை Mad Honey என்று அழைக்க என்ன காரணம்?

அளவு அதிகமாக ஆக தலைச்சுற்றல், வாந்தி உணர்வு, சித்த பிரமை ஏற்படும். அதையும் விட அதிக அளவில் இந்த தேனை சாப்பிட்டால் சில சமயங்களில் இதய பிரச்சினை, அல்லது மரணம் வரை இது நம்மை கொண்டு சென்றுவிடும்.
நேபாளம்: மனித உயிரை காவு வாங்கும் அரிய வகை தேன்! இதனை Mad Honey என்று அழைக்க என்ன காரணம்?
நேபாளம்: மனித உயிரை காவு வாங்கும் அரிய வகை தேன்! இதனை Mad Honey என்று அழைக்க என்ன காரணம்?ட்விட்டர்

நேபாளத்தின் கலே கான்வ் என்கிற கிராமத்தில் மனிதர்கள் உயிரை பறிக்கும் அரிய வகை தேன் ஒன்று கிடைக்கிறதாம்.

சரியாக தான் படித்தீர்கள். இந்த தேனை சாப்பிடுபவர்களுக்கு வாந்தி, தலைச்சுற்றல், இதய பிரச்சினை, ஒரு கட்டத்தில் மரணம் கூட ஏற்படுகிறதாம்.

ஆனாலும் இந்த தேன் தான் இந்த கிராமத்தின் அடையாளம். மிகவும் சிரமப்பட்டு இந்த தேனை எடுக்கின்றனர்.

ஏன்?

mad honey என்ற பாகல் மாஹ்

நேபாளத்தில் பெரிதும் பிரபலமாக அறியப்படாத கிராமங்களில் ஒன்று தான் இந்த கலே கான்வ் என்கிற கிராமம். இங்கு ஒரு வகை தேன் கிடைக்கிறது.

இதனை mad honey அல்லது உள்ளூர் பாசையில் பாகல் மாஹ் என்று அழைக்கின்றனர். இந்தியில் பாகல் என்றால், பைத்தியம் அல்லது மூளை குழம்பியவர் என்று பொருள்படுகிறது.

இந்த தேன் சாப்பிடுபவர்களுக்கு மூளை குழம்பலாம் என்பதால் இந்த பெயர் வந்துள்ளது.

நேபாளம்: மனித உயிரை காவு வாங்கும் அரிய வகை தேன்! இதனை Mad Honey என்று அழைக்க என்ன காரணம்?
நேபாளம்: இங்கு இந்திய ரூபாய் செல்லுமா? அண்டை நாடு குறித்து அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்கள்

ஏன் இதனை mad honey என்று அழைக்கின்றனர்?

தேனீக்கள் ரோடோடென்ரான் பூக்களின் தேனை உண்கின்றன. இதில் இருக்கும் குறிப்பிட்ட பொருட்கள் தான் இந்த தேனை தனித்துவமாக்குகிறது.

அதாவது இப்பகுதியில் உள்ள ரோடோடென்ட்ரான் பூக்களின் தேன் இயற்கையான நியூரோடாக்சின்களின் குழுவான கிரேயனோடாக்சின்களைக் கொண்டுள்ளது. தேனீக்கள் இந்தப் பூக்களிலிருந்து தேனை சேகரித்து அதன் கூட்டில் வைக்கும் போது​​இந்த நச்சுகள் தேனில் தக்கவைக்கப்படுகின்றன.

நேபாளம்: மனித உயிரை காவு வாங்கும் அரிய வகை தேன்! இதனை Mad Honey என்று அழைக்க என்ன காரணம்?
இந்தியாவின் Bachelor கிராமம் இது தான்! 50 ஆண்டுகளாக இங்கு யாருக்கும் திருமணமாகாதது ஏன்?

எப்படி சேகரிக்கப்படுகிறது?

இந்த mad honey கலே கான்வின் மலைப்பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படுகிறது. சுமார் 800 அடி உயரத்தில் இருந்து கிராமவாசிகள் கயிறுகள் கட்டி, மலையேறி, உயிரை பணயம் வைத்து தான் சேகரிக்கின்றனர்.

இந்த கிராமத்தினரை தவிர வேறு யாராலும் லாவகமாகவும் பாதுகாப்பாகவும் இந்த தேனை அவ்வளவு எளிதில் பெற முடியாதாம்!

நேபாளம்: மனித உயிரை காவு வாங்கும் அரிய வகை தேன்! இதனை Mad Honey என்று அழைக்க என்ன காரணம்?
நேபாள் Sky Caves: மனிதனால் உருவாக்கப்பட்ட குகைகளில் ஒளிந்திருக்கும் மர்மங்கள் என்ன?

mad honey சாப்பிட்டால் உயிர் போகுமா?

இந்த தேனை சாப்பிட்டால் உயிர் போகும் என்று பதிவின் தொடக்கத்தில் கூறியிருந்தோம் அல்லவா?

அது நாம் சாப்பிடும் அளவை பொருத்தது. குறைவான அளவில் தேனை எடுத்துக்கொண்டால், ஒரு விதமான ரிலாக்ஸான பரவசமடைந்த உணர்வை தருகிறது.

அளவு அதிகமாக ஆக தலைச்சுற்றல், வாந்தி உணர்வு, சித்த பிரமை ஏற்படும். அதையும் விட அதிக அளவில் இந்த தேனை சாப்பிட்டால் சில சமயங்களில் இதய பிரச்சினை, அல்லது மரணம் வரை இது நம்மை கொண்டு சென்றுவிடும்.

இந்த தேனை சாப்பிட்டால் ஒரு சில உடல்நலக் குறைபாடுகள் குணமாவதாக கிராமவாசிகள் நம்புகின்றனர். ஆனால் இதற்கு அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் இல்லை.

இந்த தேனை அதிகமாக உட்கொண்டாலும், அளவு குறைவாக எடுத்துக்கொண்டாலும் ஆபத்து என்பதால், மேற்பார்வையின்றி இதனை உட்கொள்ள யாருக்கும் அனுமதியும் இல்லை.

இந்த தேனில் இவ்வளவு சிக்கல்கள் உள்ளதால், இதன் விற்பனையிலும் கண்காணிப்புகள் தீவிரமாக உள்ளது

நேபாளம்: மனித உயிரை காவு வாங்கும் அரிய வகை தேன்! இதனை Mad Honey என்று அழைக்க என்ன காரணம்?
தேன் எத்தனை நாட்கள் வரை கெடாது? பயன்பாடுகளும், நன்மைகளும்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com