தஞ்சாவூர் சுவை : சட்னி முதல் அசோகா வரை - பாரம்பரிய உணவுகளின் வரலாறு தெரியுமா?

தஞ்சாவூர் பிராமணர்கள், தென்னிந்தியாவில் இருந்து வந்த பாண்டியர்கள், மராத்திய மன்னர் குடும்பத்தினர், சோழர்கள் என பலரது கலாச்சாரக் கூறுகள் கலந்த ஒரு நகரம். எனவே தஞ்சாவுரின் சுற்றுவட்டார பகுதிகள் ஒவ்வொன்றும் தனிச் சுவையைக் கொண்டிருக்கும்.
தஞ்சாவூர் சுவை : சட்னி முதல் அசோகா வரை - உணவுகளின் வரலாறு தெரியுமா?
தஞ்சாவூர் சுவை : சட்னி முதல் அசோகா வரை - உணவுகளின் வரலாறு தெரியுமா?Twitter
Published on

தென்னிந்திய உணவுகள் மிகவும் தனித்துவமானவை. உலக அரங்கில் தனி இடம் பிடித்திருக்கின்றன. தென்னிந்திய உணவுகள் என நாம் கூறிவிட்டாலும் மாநிலத்துக்கு மாநிலம், மாவட்டத்துக்கு மாவட்டம், ஊருக்கு ஊர் உணவில் வேறுபாடு இருக்கிறது.

ஒவ்வொரு நிலப்பரப்பின் தன்மை, சூழலியல், வரலாற்றுக் கூறுகள், வந்து செல்லும் மனிதர்கள் யாவரும் உணவில் பிரதிபலிக்கின்றனர். அப்படி பல காரணிகளால் செப்பனிடப்பட்ட உணவுமுறை தஞ்சாவூரினுடையது.

காவிரி டெல்டா பகுதியில் அமைந்திருக்கும் தஞ்சாவூர், காலம் தொடங்கியது முதலே இசை, விவசாயம், நடனம் மற்றும் கலை என பல பண்பாட்டுக் கூறுகளுக்காக அறியப்பட்டு வருகிறது. இப்போது தஞ்சாவூரின் சுவையும் பிரபலமாகி வருகிறது.

தஞ்சாவூர் பிராமணர்கள், தென்னிந்தியாவில் இருந்து வந்த பாண்டியர்கள், மராத்திய மன்னர் குடும்பத்தினர், சோழர்கள் என பலரது கலாச்சாரக் கூறுகள் கலந்த ஒரு நகரம். எனவே தஞ்சாவுரின் சுற்றுவட்டார பகுதிகள் ஒவ்வொன்றும் தனிச் சுவையைக் கொண்டிருக்கும்.

1675 முதல் 1855 வரை மராத்திய ஆட்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருந்தது தஞ்சை. அப்போது அவர்களின் உணவுமுறை இந்த மண்ணில் பாதிப்பை ஏற்படுத்தியது.

தஞ்சை மராட்டிய உணவுகள் பற்றிய இந்த கதையை கேள்விப்பட்டிருப்பீர்கள். மன்னர் ஷாஜி அவரது உறவினரான ஷம்பாஜியை சந்திக்க தஞ்சை வந்தபோது அவருக்காக மராத்திய அமிதி முறையில் உணவு தயாரிக்கப்பட்டது. அப்படி தயாரான உணவு தான் சாம்பார் என ஒரு கதை கூறுகிறது. இன்று தென்னிந்தியா முழுவதும் விரும்பி உண்ணப்படும் ஒன்றாக இருக்கிறது.

ராஜா செர்ஃபோஜி என்ற அறிஞர் மராத்திய வம்சத்தின் சாதனைகளை உன்னிப்பாக ஆராய்ந்து ஆவணப்படுத்தியவர். அவரது ஆவணம் கூறுவதன்படி, மராத்திய மன்னர்களின் அரண்மனையில் பல சமையலறைகள் இருக்குமாம்.

மராத்திய சமையல் (அசைவம்), பிராமண சமையல் (சைவம்), அங்ரேஜி (ஆங்கிலேய சமையல்) மற்றும் சில சிறிய சமையலறைகளும் இருக்குமாம். உதாரணமாக பால் சார்ந்த உணவுகளுக்காக தட்டிமஹால் இருந்ததாம்.

தஞ்சாவூர் உணவுகள் மிளகாய், மல்லி, மிளகு, தேங்காய் மற்றும் கடுகு என அங்கு ஃப்ரெஷாக கிடைக்கக் கூடிய மசாலாக்களைக் கொண்டே தயாரிக்கப்படுகின்றன.

தஞ்சாவூர் மண்ணின் பானங்களான பானகம் மற்றும் வசந்த நீர் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். பானகம், வெல்லம், சுக்கு, ஏலக்காய் மற்றும் எலுமிச்சையுடன் தயாரிக்கப்படும். வசந்த நீர் என்பது இளநீர் மற்றும் புதினா கொண்டு தயாரிக்கப்படும்.

இந்த பானங்கள் ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவற்றை குளுகோஸுக்கு நிகராக கருதலாம். பானகம் செரிமானத்தை அதிகரிக்க உதவும்.

தஞ்சாவூரில் காரம் குறைவான தமிழ்-பிராமண உணவுகள், சாத்விக ஐயங்கார், ஐயர் உணவுகள் என ஒரு லிஸ்ட் தயாரிக்கலாம். தவளை அடைக்கு தேங்காய் சட்னி அல்லது ரசம் வைத்து சாப்பிடும் சுவையை வேறெங்கும் கச்சிதமாக பெற முடியாது.

தஞ்சாவூர் சுவை : சட்னி முதல் அசோகா வரை - உணவுகளின் வரலாறு தெரியுமா?
இந்தியாவின் இந்த பாரம்பரிய கிராமங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா? இங்கு என்ன ஸ்பெஷல்?

ரசவாங்கி, பிட்லா என தமிழ்-மராத்திய உணவுகள் எல்லாவற்றுக்கும் தமிழ் அல்லாத பெயர்களே வழங்கப்படுகின்றன. நம் தினசரி உணவுகளில் ஒன்றான சட்னி கூட தமிழ் வார்த்தை இல்லை!

இப்போது கோலா உருண்டை என நாம் அழைக்கும் உணவு மராத்திய உணவான சுங்க்டி கபாப்-ல் இருந்து வந்ததாம். தஞ்சாவூரில் கிடைக்கும் புலவு முதல் கும்பகோணம் கடப்பா வரை மராத்திய உணவுகள் தாக்கத்தால் உருவானவை ஏராளம்.

தஞ்சாவூர் சுவை : சட்னி முதல் அசோகா வரை - உணவுகளின் வரலாறு தெரியுமா?
உலகிலேயே ஆரோக்கியமான சாப்பாடு இது தான்! - அறிவியல் சொல்வதென்ன?

தஞ்சாவூரில் கிடைக்கும் இனிப்புகள் என்றொரு தலைப்புக்குள் சென்றால் தனிக்கட்டுரையே எழுதலாம். தேங்கா திரட்டு பால், பூரான் பொலி, கச கச பாயசம், சுருள் பொலி, அக்காரவடிசல், சூர்ய கலா என எழுதும் போதே நாக்கில் எச்சில் ஊறி தாடையில் திகட்டத் தொடங்குகிறது.

தஞ்சாவூர் வீட்டுத் தேவைகளில் மறக்காது இடம் பெறும் அசோகா, பருப்பு, கோதுமை மாவு, சர்க்கரை, நெய், முந்திரி, பிஸ்தா, ஏலக்காய் கொண்டு செய்யப்படும் யாரும் மிஸ் செய்யக் கூடாத உணவாகும்.

தஞ்சாவூர் சுவை : சட்னி முதல் அசோகா வரை - உணவுகளின் வரலாறு தெரியுமா?
ஆண்மையை அதிகரிக்க உதவும் அன்றாட உணவுகள்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com