நாட்டில் நடக்கக் கூடிய அநீதிகளிலிருந்து மக்களைக் காக்க அரசாங்கம் காவல்துறையை பயன்படுத்துக்கிறது. ஆனால் கேரளாவின் இடுக்கியில் உள்ள ஒரு காவல் நிலையமே தங்களுக்கு வந்த பிரச்னையிலிருந்து காத்துக்கொள்ள ரப்பர் பாம்புகளைப் பயன்படுத்தி வருவது கவனம் பெற்று வருகிறது.
அந்த காவல் நிலையத்தியில் குரங்குகளின் அச்சுறுத்தல் அதிகமாக இருந்ததனால் சீனாவில் தயாரிக்கப்படும் ரப்பர் பாம்புகளை காவல் நிலையத்தைச் சுற்றி இருக்கும் படி வைத்திருக்கின்றனர்.
கும்பமேடு காவல் நிலையம் தமிழ்நாடு - கேரளா எல்லையில் வனப்பகுதியின் விளிம்பில் இருக்கிறது. பல ஆண்டுகளாக அங்கு நிலவி வந்த குரங்குத் தொல்லையில் இருந்து இப்போது ரப்பர் பாம்புகள் சிறப்பாகவே காத்து வருவதாக கூறுகின்றனர்.
அந்த காவல்நிலையத்தை சுற்றியிருக்கும் மரங்கள், கம்பிகள், கட்டடங்களில் பாம்பு பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன. அங்கு வரும் குரங்குகள் அவற்றை உண்மையான பாம்பு என நம்பி தப்பி ஓடுகின்றன. இதனால் காவல் நிலையத்தில் உள்ள முக்கிய கோப்புகள் காக்கப்படுவதுடன் காவலர்களும் நிம்மதியாக இருக்க முடிகிறது.
"ஊருல பெரிய பெரிய ரௌடியெல்லாம் அப்பாவ பாத்து பயப்படுவாங்க" என்று சொல்லும் போலீஸ்காரரிடம் "அப்போ சின்ன சின்ன கொசு எல்லாம்?" என்று மகன் கேட்கும் விளம்பரப் படம் போல இருக்கிறது இந்த குரங்கு கதை.
காவல்நிலையத்துக்கு அருகில் இருந்த தோட்டத்து உரிமையாளர் கொடுத்த ஐடியாவின் படி இதனைச் செய்ததாக காவலர்கள் கூறியிருக்கின்றனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust