தற்கொலைகளில் தமிழ்நாடு இரண்டாவது இடம் - முதலிடத்தில் எந்த மாநிலம்?

அதிக மக்கள் தொகையைக் கொண்ட மாநிலம் உத்திரபிரதேசம். நாட்டின் மக்கள் தொகையில் 16.9% பங்கு வகிக்கும் அந்த மாநிலத்தில் குறைவான தற்கொலைகளே நடைபெற்றிருக்கின்றன.
மன அழுத்தம்
மன அழுத்தம்Pixabay
Published on

தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி இந்தியாவில் கடந்த 2021ம் ஆண்டில் மட்டும் 1 லட்சத்து 64 ஆயிரத்து 33 தற்கொலைகள் பதிவாகியிருக்கின்றன.

கடந்த 1967 முதல் இந்த குற்ற ஆவணக் காப்பகத்தில் பதிவுகள் இருக்கின்றன. அப்போதிலிருந்து இன்று வரை உள்ள அறிக்கைகளின் படி, 2021ம் ஆண்டு தான் இந்தியாவில் அதிக தற்கொலைகள் பதிவாகியிருக்கின்றன. இதற்கு முன்னதாக 2010ம் ஆண்டு அதிக தற்கொலைகள் பதிவாகியிருந்தன.

இந்த அதிகரிப்புக்கு கொரோனா பரவல் முக்கியப் பிரச்னையாக இருக்கலாம் என்றுக் கூறப்படுகிறது.

தற்கொலைக்கான காரணங்கள்

தற்கொலை செய்துகொள்வதற்கான முக்கிய காரணங்களை அந்த அறிக்கை பட்டியலிட்டுள்ளது.

ஒருவரின் வேலை அல்லது தொழில் தொடர்பான பிரச்னைகள், தனிமை, அப்யூஸ்(வன்கொடுமை), வன்முறை, குடும்பங்களில் மோதல், மனநோய், குடிப்பழக்கம், பண இழப்பு மற்றும் நாள்பட்ட வலி ஆகியக் காரணங்களுக்காக அதிக தற்கொலைகள் நடந்ததாக கூறப்படுகிறது.

எந்தெந்த மாநிலங்களில் அதிக தற்கொலைகள் நடந்திருக்கின்றன?

முதலிடத்தில் இருக்கும் மஹாராஷ்டிராவில் 22,207 (13.5%) சம்பவங்கள், அதைத் தொடர்ந்து இரண்டாவதாக 18,925 (11,5%) சம்பவங்கள் தமிழகத்தில் நடந்திருக்கின்றன. மத்திய பிரதேசத்தில் 14,965 (9.1%), மேற்கு வங்கதில் 13,500 (8.2%) மற்றும் கர்நாடகாவில் 13,056 (8%).

மொத்தமாக இந்த ஐந்து மாநிலங்களில் மட்டுமே 50.4% தற்கொலைகள் நடைபெற்றிருக்கின்றன. மற்ற 23 மாநிலங்களும் 8 யூனியன் பிரதேசங்களும் 49.6% தற்கொலைகளுக்கு பொறுப்பேற்கின்றன.

மன அழுத்தம்
வெளிநாட்டு கணவர், சித்ரவதை சந்திக்கும் பெண் - குடும்ப வன்முறையை கையாளுவதற்கான வழி என்ன?

மாணவர்கள் தற்கொலை அதிகரிப்பு

இந்தியாவில் தற்கொலைகள் 2020ஐ (1,53,052) விட 7.2 மடங்கு அதிகரித்திருக்கின்றன. லட்சம் பேருக்கு எத்தனைத் தற்கொலைகள் என்ற தற்கொலை ரேட் 12 என அதிகரித்திருக்கிறது. இது 2020ஐ ஒப்பிடுகையில் 6.2% அதிகம்.

மாணவர்கள் மற்றும் சிறு தொழில்முனைவோர் அதிக தற்கொலை செய்வதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளாது.

ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய்க்கும் குறைவான வருமானம் உள்ள மக்களே அதிகம் தற்கொலை செய்துகொண்டதாக அறிக்கை கூறுகிறது. ஒட்டுமொத்த தற்கொலையில் 3ல் 2பங்கு இந்த வகுப்பினைச் சார்ந்தவர்களே.

அதிக மக்கள் தொகையைக் கொண்ட மாநிலம் உத்திரபிரதேசம். நாட்டின் மக்கள் தொகையில் 16.9% பங்கு வகிக்கும் அந்த மாநிலத்தில் குறைவான தற்கொலைகளே நடைபெற்றிருக்கின்றன.

மன அழுத்தம்
இந்தியாவில் பாலுறவு : ஆண்களை விட பெண்களுக்கு அதிக பாலுறவு கூட்டாளிகள் - ஆய்வு கூறும் தகவல்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com