இந்தியாவில் பாலுறவு : ஆண்களை விட பெண்களுக்கு அதிக பாலுறவு கூட்டாளிகள் - ஆய்வு கூறும் தகவல்

கிராமப்புறங்களைப் பொறுத்தமட்டில் நகர்ப்புறத்தை விட அதிக பாலுறவுக் கூட்டாளிகளை ஆண்களும் பெண்களும் பெற்றிருக்கின்றனர். கிராமப்புற பெண்கள் தமது வாழ்நாளில் பெற்றுள்ள பாலுறவுக் கூட்டாளிகளின் எண்ணிக்கை 1.8 ஆகும். அது நகர்ப்புற பெண்களின் எண்ணிக்கையை விட அதிகம்.
இந்தியாவில் பாலுறவு
இந்தியாவில் பாலுறவுIstock
Published on

பாலுறவில் ஆண்களுக்குப் பல கூட்டாளிகள் இருப்பார்கள், என்பதுதான் காலம் காலமாக இந்தியாவில் நம்பப்பட்டு வந்த கருத்து. இதை 2019-20இல் தேசிய குடும்ப நல ஆய்வு மூலம் எடுக்கப்பட்ட சர்வே தகர்த்திருக்கிறது. இந்த சர்வேயில் கிடைத்த தரவுகள் அந்த உண்மையை எடுத்துரைக்கின்றன.

அதன்படி இந்தியாவின் நகர்ப்புற பெண்கள் ஆண்களை விடப் பின்தங்கிவிடவில்லை என்பது தெரிய வந்திருக்கிறது. அதாவது ஒரு ஆணுக்கு தனது வாழ்நாளில் 1.7 பாலுறவு கூட்டாளிகள் என்றால் அது பெண்ணுக்கு 1.5 என இருக்கிறது. ராஜஸ்தான், ஹரியானா, ஜம்மு & காஷ்மீர், மத்தியப் பிரதேசம், அசாம், தமிழ்நாடு மற்றும் கேராளா ஆகிய மாநிலங்களில் ஆண்களை விடப் பெண்களே அதிக பாலுறவுக் கூட்டாளிகளைப் பெற்றுள்ளனர்.

கிராமப்புறங்களைப் பொறுத்தமட்டில் நகர்ப்புறத்தை விட அதிக பாலுறவுக் கூட்டாளிகளை ஆண்களும் பெண்களும் பெற்றிருக்கின்றனர். கிராமப்புற பெண்கள் தமது வாழ்நாளில் பெற்றுள்ள பாலுறவுக் கூட்டாளிகளின் எண்ணிக்கை 1.8 ஆகும். அது நகர்ப்புற பெண்களின் எண்ணிக்கையை விட அதிகம்.

Love
LoveTwitter

இந்த சர்வே பாலுறவின் போது மக்கள் பாதுகாப்பாகச் செயல்படுகிறார்களா, ஆணுறைகளை எவ்வளவு பயன்படுத்துகிறார்கள் என்பதை அறியும் முயற்சிக்காக நடத்தப்பட்டது. ஏனெனில் பாதுகாப்பில்லாத பாலுறவு எச்.ஐ.வி எனும் எய்ட்ஸ் நோயை அதிகம் பரப்பும் என்பதால் இந்த சர்வே அது குறித்து எடுக்கப்பட்டது. சர்வேயில் 1,10,000 பெண்களும், 1,00,000 ஆண்களும் பங்கேற்றனர்.

பொதுவில் மக்கள் தமது பாலுறவு வாழ்க்கை குறித்து வெளிப்படையாகப் பேசுவார்களா என்பதைக் கற்பனை செய்வதே கடினம். ஆனால் சர்வேயில் பங்கேற்றவர்கள் குறிப்பாகப் பெண்கள் தமது பாலுறவு கூட்டாளிகளையும், மணவாழ்க்கைக்கு வெளியே உறவு வைத்திருப்பது குறித்தும் வெளிப்படையாகப் பேச முன்வந்தார்கள். ஆயினும் இதில் உண்மையிலேயே பெண்கள் குறித்த நிலை குறைவாகவும், ஆண்கள் தமது பாலுறவு வாழ்க்கையைச் சற்று மிகைப்படுத்தியும் கூறியிருக்கலாம். அதாவது பெண்கள் தமது உள்ளக்கிடக்கையைக் கூறுவது குறைவாகவும் ஆண்கள் அதே விசயத்தைப் பெருமையாகவும் கூறுவதாகும். இது பொதுவில் நமது சமூகத்தின் இன்றைய நிலையைக் காட்டுகிறது.

Love
LovePexels

இந்த சர்வேயில் கடந்த 12 மாதங்களில் எத்தனை பெண்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பாலுறவுக் கூட்டாளிகளோடு உறவு வைத்தார்கள் என்ற தரவுகளையும் கொண்டிருக்கிறது. சர்வேயில் பங்கேற்ற பெண்களில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கூட்டாளிகளைக் கொண்டிருப்பதாகக் கூறியதில் நகர்ப்புறத்துப் பெண்களை விடக் கிராமப்புறத்துப் பெண்களின் விகிதம் சற்றே அதிகம். அதே போன்று விவாகரத்து, விதவை, கணவனிடமிருந்து பிரிந்து வாழ்தல் மற்றும் திருமணம் ஆகாதவர் போன்ற பிரிவுகளில் வரும் பெண்களை விடத் திருமணமான பெண்களே அதிக பாலுறவுக் கூட்டாளிகளை வைத்திருக்கின்றனர். கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்ற கருத்தும் மக்களிடம் மாறி வருகிறது என்று தெரிகிறது.

இந்தியாவில் பாலுறவு
"என் பாலியல் வாழ்க்கை அவ்வளவு சுவாரஸ்யமானது அல்ல" - நடிகை டாப்ஸி கூறியது ஏன்?

சர்வேயின் மொத்த தரவுகளின் படி அதிக ஆபத்துள்ள பாலுறவில் ஆண்கள் மிக அதிகமாக இருக்கின்றனர். அதே போன்று ஆபத்தான பாலுறவில் ஆணுறைகளைப் பயன்படுத்தும் பெண்களை விடச் சற்றே அதிக எண்ணிக்கையில் ஆண்கள் உள்ளனர்.

சமூக அடிப்படையில் பார்த்தால் முந்தைய 12 மாதங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட பாலுறவுக் கூட்டாளிகளோடு உறவு கொண்டதில் பௌத்தர்கள், நவ பௌத்தர்கள் மற்றும் சீக்கிய சமூகத்தினர் அதிக பங்கைக் கொண்டிருக்கின்றனர். இத்தகைய உறவில் ஜெயின் சமூகத்தினர் மற்றும் முஸ்லீம்கள் குறைவான பங்கைக் கொண்டிருப்பதாக சர்வேயின் தரவுகள் காட்டுகின்றது.

இந்தியாவில் பாலுறவு
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : உடலுறவும் மன உளைச்சலை தரலாம்! - 1

அதே போன்று முந்தைய 12 மாதங்களில் யாரெல்லாம் பாலுறவு வைத்துக் கொண்டார்கள் என்பதில் திருமணம் ஆகாத ஆண்களும் பெண்களும் அதிகமிருந்தனர்.

இந்தியாவில் பாலுறவு
உடலுறவு எவ்வளவு நேரம் நீடிக்க வேண்டும்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com