சூப்பர் ஸ்டார் முதல் சச்சின் வரை - பிரபலங்கள் வாங்கிய முதல் கார் என்ன தெரியுமா?

முதல் என்ற விஷயம் எல்லோருக்கும், எல்லா இடத்திலும் நேரங்களிலும் ஸ்பெஷல் தான். அதிலும் முக்கியமாக, நம் எல்லோருக்குமே முதல் கார் என்பது இன்னும் ஸ்பெஷல். சாதாரண நபர்களை தாண்டி, பிரபலங்களுக்கும் அவர்களது முதல் கார் மனதிற்கு நெருக்கமானதாக தான் இருக்கிறது.
Car
CarPexels

உலகின் பெரும்பாலானவர்களுக்கு, தாங்கள் முதன் முதலாக வாங்கிய பொருட்கள் எப்போதுமே ஒரு சிறந்த, மனதிற்கு நெருக்கமான நினைவாக நிற்கும். அதிலும் குறிப்பாக ’முதல் கார்’ நினைவைத் தாண்டி, அது உணர்வுப் பூர்வமான ஒன்றாகவும் இருக்கிறது.

ஏனெனில் உலகின் ஒவ்வொரு சராசரி மனிதனுக்கும் இருக்கும் ஆசைகளில் முதலில் இருப்பது சொந்த வீடு என்றால், அடுத்ததாக எல்லோரின் கனவாகவும் விருப்பமாகவும் இருப்பது ’கார்’ தான். சாதாரண மனிதர்கள் தாண்டி, பிரபலங்களுக்கு கூட முதல் கார் வாங்கிய நினைவு என்பது அவர்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக நிலைத்து விடுகிறது. சில பிரபலங்களின் முதல் கார் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை இங்கே காண்போம்.

பிரீமியர் பத்மினி
பிரீமியர் பத்மினி

ரஜினிகாந்த் - பிரீமியர் பத்மினி :

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் எப்பொழுதும் எளிமையான கார்களையே விரும்புபவர். இப்போது அவர் நீண்ட காலமாக டொயோட்டா இன்னோவாவை வைத்திருக்கிறார். இன்னோவா இல்லாமல் மேலும், பிஎம்டபிள்யூ எக்ஸ்5 உட்பட இரண்டு சொகுசு எஸ்யூவிகளையும் வைத்திருக்கிறார். ஆனால் அவரது முதல் கார் பிரீமியர் பத்மினி ஆகும். தான் வைத்திருக்கும் கார்களிலேயே அந்த கார் தான் தனக்கு மிகவும் நெருக்கமான ஒன்றென பல மேடைகளில் அவர் கூறியிருக்கிறார். அந்த கார் இப்போதும் வேலை செய்யும் நிலையில் பராமரித்து வருகிறார்.

மாருதி 1000
மாருதி 1000

கஜோல் – மாருதி 1000 :

மாருதி 1000 என்பது நாட்டின் முதல் சொகுசு கார் வகையில் ஒன்றாகும். இந்த மாடலானது சாதாரண மனிதர்கள் மற்றும் பிரபலங்கள் இருவராலும் சமமாக விரும்பப்பட்டது. பல திரைப்பட பிரபலங்கள் மாருதி 1000 காரை தான், அதன் முதன்மையான காலத்தில் வைத்திருந்தனர். அவர்களில் ஒருவர் தான் பாலிவுட் நடிகை கஜோல். அவரின் முதல் காராக சாம்பல் நிற மாருதி 1000 -ஐத் தான் வாங்கினார்.

Car
ஆப்பிள் கார்: ஜன்னல்களுக்கு பதிலாக Virtual Reality - அசரவைக்கும் புதிய முயற்சி
ஹோண்டா CR V
ஹோண்டா CR V

சாரா அலி கான் – ஹோண்டா CR V :

பாலிவுட் திரையுலகின் இளம் கதாநாயகிகளில் ஒருவரான சாரா அலி கான், பட்டோடியின் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார். எனவே அவர் வாழ்க்கையில் சொகுசு கார்களுக்கான பஞ்சமே இல்லை. இருப்பினும், ஹோண்டா CR-V காரைத் தான் சாரா இப்போது பயன்படுத்தி வருகிறார். அதுவே சாராவின் முதல் காரும் ஆகும். எப்போது சாரா வெளியில் வந்தாலும், அந்த காரில் வருவதையே அவர் விரும்புகிறார்.

ஆடி Q7
ஆடி Q7

தீபிகா படுகோன் - ஆடி Q7 :

பல திரையுலக நட்சத்திரங்கள் தங்களுடைய முதல் காராக, ஒரு சாதாரண காரையே வாங்கியிருந்தாலும் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் தனது முதல் காராகவே, ஆடி க்யூ7 காரை வாங்கினார். ‘ஓம் சாந்தி ஓம்’ படத்தில் ஷாருக்கானுடன் அறிமுகமான உடனேயே அவர் கருப்பு நிற ஆடி க்யூ7 காரை சொந்தமாக்கினார்.

Car
விக்ரம் : லோகேஷ் கனகராஜுக்கு கமல் பரிசளித்த Lexus கார் குறித்த 10 தகவல்கள்
BMW 7-சீரிஸ்
BMW 7-சீரிஸ்

கங்கனா ரணாவத் - BMW 7-சீரிஸ் :

Mercedes-Benz S கார்களின் சொகுசுக்கும், தரத்திற்கும் ஈடாக வரும் கார்கள் மிகவும் குறைவு. அதைப்போலவே BMW 7-சீரிஸ் கார்கள், அத்தகைய கார்களில் ஒன்றாகும். அதனால்தான் பாலிவுட் பிரபலங்கள் மத்தியில் செடான்களின் அடுத்த பிரபலமான தேர்வாக இது உள்ளது. கங்கனா ரனாவத் தனது திரைப்படங்கள் மூலம் புகழ் பெறத் தொடங்கியபோது, தனது முதல் காராக வெள்ளை நிற BMW 7-சீரிஸ் ஒன்றை வாங்குவதன் மூலம் விலை உயர்ந்த ஒரு பிராண்டுக்குச் சொந்தக்காரர் ஆனார்.

மாருதி 800
மாருதி 800

இம்தியாஸ் அலி - மாருதி 800 :

புகழ்பெற்ற பாலிவுட் திரைப்பட இயக்குநரும், தனது படங்களின் நேர்த்தியான கதை சொல்லும் வித்தைக்காகவும் நன்கு அறியப்பட்டவரான இம்தியாஸ் அலி, தற்போது இரண்டு சொகுசு கார்களை வைத்திருக்கிறார். அவர் தனது முதல் காராக மாருதி சுஸுகி 800 மாடலைத் தான் வாங்கினார். சமீபத்தில் கூட, இம்தியாஸ் அலி தனது இளம் நாட்களின் போது மாருதி சுஸுகி 800 காருடன் இருக்கும் Throwback புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

மாருதி 800
மாருதி 800

சச்சின் டெண்டுல்கர் - மாருதி 800 :


உலகின் தலை சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான சச்சின் டெண்டுல்கர் தனது கிரிக்கெட் திறமைக்காக மட்டுமின்றி, கார்கள் மீதான ரசனைக்காகவும் அறியப்படுகிறார். அவரின் கார் கலெக்ஷன் என்பது பல வகையான கார்களின் பட்டியலால் நிரம்பி இருக்கிறது. இருப்பினும், அவர் தனது முதல் காராக மாருதி 800 -ஐத் தான் வாங்கினார். 1980-களில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மாருதி 800 வாகன வகையில், SS80 மாடல் வெளிவந்த உடன் வாங்கினார்.

Car
வயது தடை இல்லை: 85 வயதில் முதல் காரை வாங்கிய முதியவர் - இன்ஸ்டாவில் பெருமிதம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com