Ramji: சிறுவயதில் பற்றிய நெருப்பு; ISRO-வுக்கு சிறிய ராக்கெட்டுகள் செய்யும் முதியவரின் கதை

40 வயதிலேயே ரிடயர்மென்டுக்கு ஏங்கும் மனிதர்களுக்கு நடுவில் என் கடைசி நாள் வரை சுறுசுறுப்பாக இருக்க விரும்புகிறேன் எனக் கூறும் மனிதர். இவரது கதை எல்லாருக்கும் உற்சாகம் அளிப்பதாக அமையும்!
Ramji: சிறுவயதில் பற்றிய நெருப்பு; ISRO-வுக்கு சிறிய ராக்கெட்டுகள் செய்யும் முதியவரின் கதை
Ramji: சிறுவயதில் பற்றிய நெருப்பு; ISRO-வுக்கு சிறிய ராக்கெட்டுகள் செய்யும் முதியவரின் கதைTwitter

வாழ்க்கையில் உங்களுக்கு விருப்பப்பட்ட பாதையைத் தேர்ந்தெடுக்க வயது எப்போதும் ஒரு தடையாக இருக்கக்கூடாது. இந்த செய்தியை அழுத்தமாக கடத்துகிறது சுவாமிநாதன் ராம்ஜி என்ற 79 வயது முதியவரின் கதை.

இஸ்ரோ உள்ளிட்ட நிறுவனங்களுக்கு சிறிய ரக மினியேச்சர் ராக்கெட்டுகளை செய்துகொடுக்கும் கைவினைக் கலைஞராக திகழ்கிறார் ராம்ஜி.

ராம்ஜி சில ஆண்டுகளுக்கு முன்பு தான் கைவினை ராக்கெட்களை செய்யத்தொடங்கியுள்ளார். அவரது படைப்புத்திறனும் பண்பான நடத்தையும் அவரை வளர்த்தெடுத்துள்ளது.

மைசூரில் உள்ள பெல்வாடி என்ற பகுதியில் தான் ராக்கெட் மாதிரிகளை உருவாக்கும் இவரது இடம் இருக்கிறது. இந்த இடம் முழுவது சிறிய ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுகள், செயற்கை கோள்கள், ஆன்டனாக்கள், விமானங்கள், லேண்டர்கள், என பல மாதிரிகள் செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தும் அலுமினிய மாதிரிகளாகும். உண்மையான ராக்கெட்டுகளை விட 300 மடங்கு சிறியவை.

சைக்கிளில் ஏவுதளத்துக்கு கொண்டுசெல்லப்பட்டு ஏவிய ரக்கெட்டுகள் முதல் இன்றைய நவீன செயற்கைகோள்கள் வரை பலவகையான மாதிரிகளை இவர் வடிவமைத்துள்ளார்.

இஸ்ரோவின் சாதனைகளாக கருதப்படும் வானவியல் திட்டங்களின் மாதிரிகளையும் காட்சிக்கு வைத்துள்ளார். ஆர்யபட்டா முதல் சந்திரயான் வரை பல மாதிரிகளை அடுக்கியுள்ளார். இது ஒரு அறிவியல் மியூசியம் போல காட்சியளிக்கிறது.

இந்த மாதிரிகளை அலுமினியம், பித்தளை மற்றும் ஃபைபர் பிளாஸ்டிக் கொண்டு உருவாக்குகிறார். 2018 முதல் இவர் இஸ்ரோவுக்கு மாதிரிகளை செய்துகொடுத்து வருகிறார். கச்சிதமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த மாதிரிகள் ஒரு 79 வயது முதியவரால் உருவாக்கப்பட்டவை என்பதை யாராலும் நம்ப முடியாது.

கிராஃப்டீசியன் என்ற நிறுவனத்தை நிறுவி தினசரி 50 மாடல்களை செய்யத் தொடங்கியிருந்தனர். அப்போது 2 பேர் இருந்த இந்த நிறுவனத்தில் இப்போது 50 பேர் பணியாற்றி தினசரி 2000 மாடல்களை உருவாக்குகின்றனர்.

கேட்பதற்கு அசாதாரணமாக இருக்கும் நிகழ்வுகளுக்கு பின்னால் நிச்சயம் ஒரு கதை இருக்கும். அப்படி சுவாமிநாதன் ராம்ஜிக்கு பின்னால் இருக்கும் கதை என்னவென்று பார்க்கலாம்.

Ramji: சிறுவயதில் பற்றிய நெருப்பு; ISRO-வுக்கு சிறிய ராக்கெட்டுகள் செய்யும் முதியவரின் கதை
தாய்லாந்து: 15 லட்சம் பீர் பாட்டில்களால் உருவான கோவில் - ஒரு சுவாரஸ்ய கதை!

"இது எனக்கு பிடித்த விஷயங்களை செய்வதற்கான காலம்"

ராம்ஜி

1952ம் ஆண்டு சிறுவனாக இருந்த ராம்ஜிக்கு அவரது தந்தை மெக்கானோ விளையாட்டு பொம்மையைப் பரிசளித்துள்ளார். அதன் விலை அப்போதே 40 ரூபாய்.

இந்த விளையாட்டு பொம்மையில் ஒரு வாகனத்தின் உலோக பாகங்கள் கொடுக்கப்படும். அதை சரியாக கோர்க்க வேண்டும். இதில் ராம்ஜிக்கு மிகுந்த ஆர்வம் இருந்துள்ளது. இது வளர வளர 1960களில் இஞ்சின் மாடல்களை உருவாக்க ராம்ஜிக்கு உந்துதலாக இருந்துள்ளது.

இஞ்சினியரான ராம்ஜி ஹோட்டல்கள், மாளிகளைகளில் உள் அலங்காரங்கள் செய்யும் வேலையில் ஈடுபட்டு வந்துள்ளார். 1990ல் புகழ்பெற்ற ஓபெராய் ஹோட்டலில் பணியாற்றியிருக்கிறார்.

பெங்களூரில் இருந்து பணியாற்றிவந்த ராம்ஜிக்கு நஷ்டம் ஏற்படவே 2003ல் மைசூரு வந்தடைந்தார். இறுதியாக 2018ம் ஆண்டு "இது எனக்கு பிடித்த விஷயங்களை செய்வதற்கான காலம்" என உணர்ந்த ராம்ஜி கிராப்டீசியனைத் தொடங்கினார்.

Ramji: சிறுவயதில் பற்றிய நெருப்பு; ISRO-வுக்கு சிறிய ராக்கெட்டுகள் செய்யும் முதியவரின் கதை
Steve Harvey: 30 வயதில் காலி பர்ஸ்; இப்போது ரூ.16,000 கோடி சொத்து- ஊர்குருவி பருந்தான கதை!

எனது கடைசி நாள் வரை சுறுசுறுப்பாக இருக்க விரும்புகிறேன்

ராம்ஜி

ராம்ஜி முதன்முதலாக ஐஎஸ்ஏ நிறுவனத்துக்கு மாதிரிகள் செய்துகொடுத்துள்ளார். இது இஸ்ரோவின் கவனத்தை ஈர்த்தது. இஸ்ரோ ஆன் வீல்ஸ் என்ற திட்டத்தில் இஸ்ரோ உடன் பணியாற்றினார்.

இந்தியன் ரயில்வேஸுக்கும் பல மாதிரிகளை செய்துகொடுத்து உதவியுள்ளார் ராம்ஜி. அதுமட்டுமல்லாமல் கோவையின் பிஎஸ்ஜி, சென்னை சவிதா இஞ்சினியரிங் உள்ளிட்ட கல்விநிலையங்களுடனும் பணியாற்றியுள்ளார்.

Ramji: சிறுவயதில் பற்றிய நெருப்பு; ISRO-வுக்கு சிறிய ராக்கெட்டுகள் செய்யும் முதியவரின் கதை
Google 25: கராஜில் தொடங்கப்பட்ட நிறுவனம் தொழில்நுட்ப ஜாம்பவான் ஆனது எப்படி? சுவாரஸ்ய கதை!

இவரது மாதிரிகள் பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் உத்வேகத்தை ஏற்படுத்தும் என நம்புகிறார். "ஒரு வேலையை செய்வதற்கான உள்ளார்ந்த உந்துதல் தேவை" என்கிறார் ராம்ஜி. அத்தகைய உந்துதல் தான் இந்த வயதிலும் அவரை தினமும் காலை புதிய வாய்ப்புகளைத் தேட வைக்கிறது.

"நான் செய்யவேண்டியதில் 10ல் ஒரு பங்கைத்தான் செய்து முடித்திருக்கிறேன். இன்னும் நான் செய்ய வேண்டியது பல இருக்கிறது. நான் எனது கடைசி நாள் வரை சுறுசுறுப்பாக இருக்க விரும்புகிறேன்" எனக் கூறும் ராம்ஜி நம் அனைவருக்கும் ஆச்சரியமளிப்பவராக இருக்கிறார்.

Ramji: சிறுவயதில் பற்றிய நெருப்பு; ISRO-வுக்கு சிறிய ராக்கெட்டுகள் செய்யும் முதியவரின் கதை
Jhund : இவரின் நிஜ வாழ்க்கை கதைதான் அமிதாப் பச்சனின் ‘ஜுண்ட்’ - Inspiring Story

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com