உலகம் முழுவது நினைவுகூறத்தக்க தினம் இன்று. கூகுளின் 25வது பிறந்தநாள். இப்போது கூகுளாண்டவர் என நாம் அன்புடன் அழைக்கும் அளவு வளர்ந்துவிட்ட பன்னாட்டு நிறுவனம் ஆரம்பத்தில் மிக சாதாரணமாக தொடங்கப்பட்டது.
90களின் இடைப்பகுதியில் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல் முனைவர் பட்ட மாணவர்களாக லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் சந்தித்துக்கொண்டனர்.
அவர்களின் நட்பு உலக டிஜிட்டல் தளத்தில் என்றென்றைக்குமான மாற்றத்தைக் கொண்டுவரும் என்பதை அவர்கள் அறியவில்லை. ஆரம்பத்தில் "BackRub" என்ற திட்டத்தை தொடங்கினர். அது பின்னாளில் கூகுள் என்ற மாபெரும் தேடு பொறியாக (Search Engine) மாறியது.
World Wide Web எனப்படும் உலகலாவிய வலைப்பின்னலின் கணித நுணுக்கங்களை லாரி பேஜ் ஆராய்ந்தார். அவரது தேடலின் விளைவாக கூகுள் என்ற தேடுதல் அல்காரிதத்துக்கான அடித்தளம் கிடைத்தது.
அவர்களது திட்டம் 1998வாக்கில் கூகுள் நிறுவனமாக உருவானது. எண்களில் மிகப் பெரியதை குறிக்கும் Googol என்பதில் இருந்து இந்த பெயர் வந்துள்ளது.
ஆகஸ்ட் 1998, சன் மைக்ரோசிஸ்டம்ஸின் என்ற நிறுவனத்தின் இணை நிறுவனரான Andy Bechtolsheim என்பவர் 1,00,000 டாலருக்கான காசோலையை வழங்கினார். ஸ்டான் ஃபோர்ட் அறையில் இருந்து புறப்பட்டு தங்களது முதல் அலுவலகத்துக்கு இருவரும் இடம் பெயர்ந்தனர்.
கலிஃபோர்னியாவின் மென்லோ பார்கில் இருந்த ஒரு கார் கராஜ் தான் அலுவலகமாக இருந்தது. கணினியும் பிங்பாங் டேபிளும் இருந்த கராஜை தங்கள் வீடாகவே கருதினர். அங்கேயே தங்கி பணியாற்றத் தொடங்கிவிட்டனர். மொத்த இண்டர்நெட்டையும் வரிசைப்படுத்தும் அவர்களது நோக்கத்துக்காக அடுத்த சில ஆண்டுகள் கடினமாக உழைத்தனர்.
ஒரு சிறந்த தேடுபொறி என்பதுடன் நில்லாமல், யூடியூப், கூகுள் மேப்ஸ், ஜி மெயில், ஆண்ட்ராய்டு என நம் வாழ்க்கையில் கலந்துவிட்ட ஒன்றாகிவிட்டது கூகுள்.
2000ம் ஆண்டு யாஹூவின் முதன்மை தேடுபொறியானது கூகுள். அதே ஆண்டில் AdWords தொடங்கப்பட்டது. இது கூகுளின் ஆன்லைன் விளம்பரங்களுக்கான அடித்தளத்தை அமைத்தது.
யாஹு மெயில், மைரோ சாஃப்டின் ஹாட்மெயில் போன்றவற்றுக்கு போட்டியாக அறிமுகப்படுத்தப்பட்டது ஜி மெயில். 2004ம் ஆண்டு ஜி மெயிலில் 1 ஜிபி சேமிப்புத் திறன் இலவசமாக வழங்கப்படும் என கூகுள் அறிவித்த பின்னர் இ-மெயிலில் தனிக்காட்டு ராஜாவாக திகழத் தொடங்கியது.
இப்போது கூகுளுக்கு போட்டியாக பல நிறுவனங்கள் களமிறங்கிவிட்டிருந்தாலும் ஜாம்போவானாக திகழ்கிறது கூகுள். ஏஐ தொழில்நுட்பத்துடன் புதுமையான விஷயங்களை உருவாக்க முயற்சித்து வருகின்றனர்.
கூகுளின் கதை நமக்கு உத்வேகம் அளிக்கக் கூடியதாக இருக்கிறது. உலகத்தில் மிகப் பெரிய ஆதிக்கம் செலுத்தும் தொழில்நுட்ப நிறுவனம் போல நீங்கள் வளர ஆசைப்படலாம், அதற்கான தொடக்கம் கார் கராஜாக இருந்தாலும் தன்னம்பிக்கையுடன் உழையுங்கள்!
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust