"டெலிவரி ஹீரோ" ட்ராஃபிக்கை சரி செய்த ஊழியர் - இணையத்தில் வைரலான நெகிழ்ச்சி வீடியோ!

அவசரமாக உணவை எடுத்துக்கொண்டு செல்வதனால் அவர்கள் சாலை விதிகளை சரிவர கடைபிடிப்பதில்லை எனவும். அதிக உணவு டெலிவரி ஊழியர்களால் சாலையில் நெரிசல் ஏற்படுகிறது எனவும் குற்றச்சாட்டுகள் சொல்லப்படுவது வழக்கமாயிற்று.
"டெலிவரி ஹீரோ" ட்ராஃபிக்கை சரி செய்த ஊழியர்- இணையத்தில் வைரலான நெகிழ்ச்சி வீடியோ!
"டெலிவரி ஹீரோ" ட்ராஃபிக்கை சரி செய்த ஊழியர்- இணையத்தில் வைரலான நெகிழ்ச்சி வீடியோ!Twitter
Published on

ஸ்விக்கி, சோமேட்டோ போன்ற உணவு டெலிவரி நிறுவனங்கள் நமக்கு என்ன தான் சிறப்பாக சேவை செய்தாலும் சாலையில் பயணிக்கும் போது அந்த ஊழியர்கள் மீது நாம் கோவம் கொள்கிறோம்.

அவசரமாக உணவை எடுத்துக்கொண்டு செல்வதனால் அவர்கள் சாலை விதிகளை சரிவர கடைபிடிப்பதில்லை எனவும். அதிக உணவு டெலிவரி ஊழியர்களால் சாலையில் நெரிசல் ஏற்படுகிறது எனவும் குற்றச்சாட்டுகள் சொல்லப்படுவது வழக்கமாயிற்று.

ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை பொய்யாக்கும் வகையில் செயல்பட்டுள்ளார் ஸ்விக்கி ஊழியர் ஒருவர்.

ஶ்ரீஜித் என்பவர் தனது லின்க்ட் இன் பக்கத்தில் அந்த வீடியோவைப் பகிர்ந்திருந்தார்.

அவர் 30 நிமிடங்கள் போக்குவரத்து நெரிசலில் காத்திருந்ததாகவும், பின்னர் மெதுவாக வாகனங்கள் நகரத் தொடங்கி கொஞ்சம் ரிலாக்ஸாக உணர்ந்ததாகவும் கூறியுள்ளார். இதற்கு ஸ்விக்கி டெலிவரி ஊழியர்தான் காரணம் எனத் தெரிந்ததும், ஸ்விக்கி விளம்பரத்தில் வரும் "டெலிவரி ஹீரோ" - ஐ நினைத்துக்கொண்டதாகவும், தினசரி வேலையைத் தாண்டி சிக்கலில்லாத வாழ்க்கைக்கு அவர்கள் உதவுவதாகவும் கூறியிருந்தார் ஶ்ரீஜித்.

"டெலிவரி ஹீரோ" ட்ராஃபிக்கை சரி செய்த ஊழியர்- இணையத்தில் வைரலான நெகிழ்ச்சி வீடியோ!
சோமேட்டோ ஊழியருக்கு உதவிய ஸ்விக்கி ஊழியர் - இணையவாசிகளை நெகிழ வைத்த சம்பவம் |Video

இந்த வீடியோவுக்கு கருத்து தெரிவித்த நெட்டிசன்கள், "இதில் ஸ்விக்கியை பாராட்ட ஒன்றுமே இல்லை. அந்த தனி நபரின் உதவி செய்யும் குணம் தான் காரணம் எனவும், இப்படி ஊழியர்களை செயல்களில் விளம்பரம் தேடிக்கொள்ளும் ஸ்விக்கி அவர்களுக்கு முறையான சம்பளம் கூட அளிப்பது இல்லை." எனவும் கூறி வருகின்றனர்.

"டெலிவரி ஹீரோ" ட்ராஃபிக்கை சரி செய்த ஊழியர்- இணையத்தில் வைரலான நெகிழ்ச்சி வீடியோ!
Swiggy : சூப்பர் டெய்லி சேவையை நிறுத்திய ஸ்விக்கி - காரணம் என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com