தாஜ்மஹால் பகலில் உலக அழகிகளும் தோற்றுவிடும் விதமாக மினுங்கும். பார்க்க கண்கோடி வேண்டுமெனத் தோன்றும் தாஜ்மஹாலை இரவில் பார்த்த அனுபவம் பலருக்கும் கிடைத்திருக்கிறது.
முழுநிலவு நாளில் தாஜ்மஹாலை பார்ப்பது வாழ்நாள் அனுபவமாக இருக்கும் என்கின்றனர். இந்தப் பேரழகை மக்கள் மிஸ் செய்யக் கூடாது என்பதற்காக ஒவ்வொரு மாதமும் 5 நாட்கள் இரவிலும் தாஜ்மஹாலைப் பார்க்க அனுமதிக்கொடுக்கப்படுகிறது.
முழுநிலவு நாளுக்கு முந்தைய இரண்டு இரவுகள், பௌர்ணமி இரவு மற்றும் அதற்கு பிறகான இரண்டு இரவுகள் என 5 நாட்கள் தாஜ்மஹாலைப் பார்க்கலாம்.
இந்த நாட்களில் சூரிய மறவுக்குப் பின்னர் நிலவின் வெளிச்சத்தில் இரவு 8:30 மணி முதல் நல்லிரவு 12:30 மணி வரை தாஜ்மஹாலைப் பார்வையிடலாம்.
ஒவ்வொரு பயணியும் தாஜ்மஹாலில் 30 நிமிடங்களை செலவழிக்கலாம். முழுநிலவு இருந்தாலும் வெள்ளிக்கிழமைகளில் தாஜ்மஹாலை இரவில் பார்வையிட அனுமதி இல்லை. அதேப்போல ரம்ஜான் அன்றும் தாஜ்மஹாலுக்கு விடுமுறை.
தாஜ்மஹாலை இரவில் பார்ப்பதென்பது தனித்துவமான அனுபவம். நிலவு வெளிச்சத்தில் ஒளிரும் பளிங்கு மாயஜாலமான காட்சியை வழங்கும். இரவில் தாஜ் மஹாலைப் பார்வையிட குறைந்த நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். இரவில் தாஜ்மஹாலைப் பார்க்க முன்பதிவு செய்ய வேண்டியது அவசியம்.
முழுநிலவு நாளில் மட்டும் தான் தாஜ்மஹாலைப் பார்வையிட முடியும் என்பதனால் குறிப்பிட்ட தேதிகளை சொல்ல முடியாது. துல்லியமாக தெரிந்துகொள்ள தாஜ்மஹால் வலைத்தளத்தைப் பார்வையிடலாம்.
தேதியை கண்டரிந்த பின்னர் அதற்கு முந்தைய நாளில் டிக்கெட் பதிவுசெய்ய வேண்டும்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust