விக் கலாச்சாரம் ஆரம்பத்திலிருந்து இருந்தாலும், தற்போது அதன் மீதான க்ரேஷ் பிரபலமாகி ஃபேஷனாகி வருகிறது.
சரி அந்த விக் தயாரிக்க அவர்களுக்கு எப்படி முடி கிடைக்கிறது என்று என்றாவது யோசித்திருக்கிறீர்களா?
உலகம் முழுவதும் இந்த மனித முடி ஒரு லாபகரமான வணிகமாக இருக்கிறது, அதில் முக்கிய பங்கு இந்தியாவிற்கு இருக்கிறது என்பது குறித்து உங்களுக்கு தெரியுமா? வாருங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
முடி என்பது மனிதனின் அழகுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதால் அழகுகலை வியபாரத்தில் இந்திய முடிகளுக்கு பெரும் வரவேற்பு உள்ளது.
இந்தியர்களின் முடிகள் அதிக செழுமையாக இருப்பதால் டோப்பாக்களாக அவற்றை பயன்படுத்துகின்றனர்.
விக் விற்பனையில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. இங்கு பல கோயில்களில் முடி காணிக்கை அளிப்பது வழக்கமாக இருப்பதால் முடி சந்தையில் இந்தியா பெரும் பங்கு வகிக்கிறது.
கடந்த 2018 மற்றும் 2019 ஆண்டில் மட்டும் இந்தியாவின் முடி ஏற்றுமதி 22 சதவீதம் அதிகரித்துள்ளது.
தென்னிந்திய கோயில்களில் முடிகளின் மூலமாக அதிக வருமானம் ஈட்டும் கோயிலாக திருப்பதி உள்ளது. இது உலகின் பணக்காரக் கோயில்களில் ஒன்றாக உள்ளது.
திருப்பதியில் தினமும் சராசரியாக ஒரு நாளைக்கு குறைந்த பட்சமாக 50,000 முதல் 100,000 பக்தர்கள் தங்கள் முடியினை காணிக்கையாக செலுத்துகின்றனர்.
பக்தர்களுக்கு மொட்டையடிக்க 500 முதல் 600 முடிதிருத்தும் தொழிலாளர்கள் சுழற்சி முறையில் பணிபுரிகின்றனர்.
ஒவ்வொரு ஆறு மணி நேரத்திற்கு ஒரு முறையும் முடிதிருத்தும் இடத்திலிருந்து பக்தர்களின் முடிகள் சேகரிக்கப்பட்டு தனியாக ஒரு கூடத்தில் மிகவும் பத்திரமாக வைக்கப்படுகிறது .
பின்னர் பக்தர்களின் முடிகள் தனியாக பிரிக்கப்பட்டு வெளிநாடுகளில் விக் விற்பனைக்காக ஏற்றுமதி செய்யப்படுகிறது.
உதாரணமாக மிக நீளமானதாக உள்ள முடிகள் அதாவது 18 அங்குலத்திற்கு மேல் உள்ளவை தோராயமாக ஒரு கிலோவிற்கு $300- $450 டாலர்களுக்கு விற்கப்படுகிறது.
செழுமையான முடி சில நேரங்களில் ஒரு கிலோவிற்கு $800 டாலர்கள்வரை விற்கப்படுகிறது. குட்டையான முடி, மெத்தைகளுக்குள் அடைக்கவும், எண்ணெய் வடிகட்டிகளை உருவாக்கவும் பயன்படுகிறது.
இந்த முடிகளை எல்லாம் Great Lengths International என்ற அழகு சாதன நிறுவனம் வாங்குகிறது. இது இத்தாலி நாட்டினை தலைமையிடமாக கொண்ட முடி அலங்கார நிறுவனமாகும். இது தனது கிளைகளை 60 நாடுகளில் வைத்துள்ளதாம்.
இந்த விற்பனையில் முக்கிய பங்கு வகிக்கும் திருப்பதி கோயிலுக்கு மட்டும் ஆண்டுக்கு 100 மில்லியனுக்கும் அதிகமான டாலர்கள் கிடைத்து வருமானத்தை கொடுக்கிறதாம்.
இந்த வருமானத்தை கொண்டு மருத்துவ உதவி, கல்வி முறைகள் மற்றும் பிற முக்கியமான உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காக பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.
அதே சமயம் திருப்பதிக்கு வந்து தங்களின் முடிகளை காணிக்கையாக கொடுக்கும் பல லட்ச மக்களுக்கு தெரிவதில்லை தங்களின் தலை முடிகளின் விலை பல லட்சங்கள் என்று.
திருப்பதிக்கு வருமானத்தை கொடுப்பது லட்டு மட்டும் அல்ல பக்தர்கள் காணிக்கையாக கொடுக்கும் முடியிலும் நமக்கு தெரியாத ஒரு பெரும் சந்தை விற்பனை உள்ளது என்பதுதான் மறுக்க முடியாத உண்மை!
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust