Nestle, ONGC விட அதிக சொத்து; திருப்பதி கோவிலின் சொத்து மதிப்பு என்ன தெரியுமா?

இரண்டு டஜன் நிறுவனங்கள் மட்டுமே கோயில் அறக்கட்டளையின் நிகர மதிப்பை விட பெரிய சந்தை மதிப்பீட்டைக் கொண்டுள்ளன.
திருப்பதி
திருப்பதி டிவிட்டர்

உலகப் புகழ் பெற்ற திருப்பதி வெங்கடேஸ்வரா கோவிலின் நிகர மதிப்பு ரூ.2.5 லட்சம் கோடி என திருப்பதி தேவஸ்தானம் அறிக்கை கொடுத்துள்ளது. இது, ஐ டி சேவை நிறுவனமான விப்ரோ, நெஸ்லே, எண்ணெய் நிறுவனங்களான  ஓ.என்.ஜி.சி மற்றும் ஐ.ஓ.சி ஆகியவற்றின் சந்தை மதிப்பை விட அதிகம்.

1933ல் நிறுவப்பட்டதிலிருந்து, முதல் முறையாக TTD நிர்வாகம் திருப்பதி கோவில் நிகர மதிப்பை வெளியிட்டுள்ளது

திருப்பதி
Khaby Lame: ஒரு போஸ்டுக்கு 6 கோடி வருமானமா? டிக் டாக் பிரபலத்தின் சொத்து மதிப்பு என்ன?

வங்கிகளில் 10.3 டன் டெபாசிட் செய்யப்பட்ட தங்கம் (ரூ.5,300 கோடி மதிப்பு) மற்றும் 15,938 கோடி ரூபாய் பணமும், கோவிலுக்குச் சொந்தமாக 960 சொத்துக்களும் இருப்பதாக தெரிவித்துள்ளது. இவ்வனைத்தின் மொத்த மதிப்பு 2.5 லட்சம் கோடிக்கும் மேல் உள்ளது. இது பல இந்திய ப்ளூ சிப் நிறுவனங்களை விட அதிகம் என பங்கு சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.

கடந்த வெள்ளிக்கிழமை அன்றின் வர்த்தக முடிவில், விப்ரோ ₹ 2.14 லட்சம் கோடி சந்தை மதிப்பைக் கொண்டிருந்தது, அதே நேரத்தில் அல்ட்ராடெக் சிமெண்ட் ₹ 1.99 லட்சம் கோடி சந்தை மதிப்பைக் கொண்டிருந்தது.

இதே போல நெஸ்லேவின் நிகர மதிப்பு 1.96 லட்சம் கோடி. அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனங்களான ஓஎன்ஜிசி மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஐஓசி ஆகியவையும் கோயில் அறக்கட்டளையை விட குறைவாகவே சந்தை மதிப்பை கொண்டுள்ளது என டைம்ஸ் நவ் தளம் தெரிவிக்கிறது.

இரண்டு டஜன் நிறுவனங்கள் மட்டுமே கோயில் அறக்கட்டளையின் நிகர மதிப்பை விட பெரிய சந்தை மதிப்பீட்டைக் கொண்டுள்ளன.

அவற்றில், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ்  (₹17.53 லட்சம் கோடி), டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (₹11.76 லட்சம் கோடி), எச்.டி.எஃப்.சி வங்கி (₹8.34 லட்சம் கோடி), உள்ளிட்ட நிறுவனங்கள் அடங்கும். கோவிலுக்கு பக்தர்கள் அளிக்கும் காணிக்கைகள், தங்க நகைகளின் வரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் வங்கியில் இருக்கும் fixed depositகளும் அதிக வருமானத்தை ஈட்டி வருவதாகவும் கோயில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த அறிக்கையை டிடிடி நிர்வாகம் வெளியிட்டதிலிருந்து இணையத்தில் பலரை ஆச்சரியப்படுத்தி வருகிறது. பலரும் அவர்கள் ஈட்டும் வருமானத்தை எப்படி உபயோகமாக பயன்படுத்தலாம் என கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, தெலங்கானா, ஒடிசா, ஹரியானா, மகாராஷ்டிரா மற்றும் டெல்லியில் ஏராளமான கோயில்களை திருப்பதி தேவஸ்தானம் நிர்வகித்து வருவது குறிப்பிடத்தக்கது

திருப்பதி
ரிஷி சுனக் மனைவியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? அவரின் இந்த ஆண்டு வருமானம் இவ்வளவா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com