190 கிமீ, 20 மணி நேர பயணம்: இன்றும் தனியார் கட்டுப்பாட்டில் ஓர் இந்திய ரயில் பாதை- எங்கே?

இந்தியா ஆங்கிலேயர்களிடம் இருந்து 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றது. 1952 ஆம் ஆண்டு முதல் ரயில் பாதைகள் அனைத்தும் அரசுடைமையாக்கப்பட்டன. ஆனால், இந்த யாவத்மால் - முர்ஜிதாபூர் ரயில் பாதை இன்றும் மீட்டர் கேஜ் ரயில்பாதையாகவே இருக்கிறது. அரசுடைமை ஆகவில்லை
190 கிமீ, 20 மணி நேர பயணம்: இன்றும் தனியார் கட்டுப்பாட்டில் ஓர் இந்திய ரயில் பாதை- எங்கே?
190 கிமீ, 20 மணி நேர பயணம்: இன்றும் தனியார் கட்டுப்பாட்டில் ஓர் இந்திய ரயில் பாதை- எங்கே? ட்விட்டர்

பிரிட்டிஷ் காலத்தில் இந்தியாவில் தொடங்கப்பட்ட ரயில் பாதை ஒன்று இன்றும் அரசுக்கு சொந்தமாகாமல் தனியார் கட்டுப்பாட்டிலேயே செயல்பட்டு வருகிறது.

உலகின் மிகப்பெரிய ரயில்வே நெட்வர்க்குகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவில் ரயில் சேவை தொடங்கப்பட்டு 150 ஆண்டுகளுக்கும் மேல் ஆகியுள்ள நிலையில், பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட ஒரு தனியார் ரயில் சேவை இன்றும் அதே பெயரில் செயல்பட்டு வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலம் யாவத்மால் - முர்ஜிதாபூருக்கு இடையே சுமார் 190 கிமீ தூரத்துக்கு ரயில் பாதை ஒன்று அமைக்கப்பட்டது. சகுந்தலா ரயில்வே என்ற தனியார் நிறுவனத்தால் இந்த பாதை ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது. இன்றும் ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே ரயில் சேவை வழங்கப்படுகிறது

இந்தியா ஆங்கிலேயர்களிடம் இருந்து 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றது. 1952 ஆம் ஆண்டு முதல் ரயில் பாதைகள் அனைத்தும் அரசுடைமையாக்கப்பட்டன. ஆனால், இந்த யாவத்மால் - முர்ஜிதாபூர் ரயில் பாதை இன்றும் மீட்டர் கேஜ் ரயில்பாதையாகவே இருக்கிறது. அரசுடைமை ஆகவில்லை

ஆங்கிலேயர்கள் காலத்தில் தி கிரேட் இந்தியன் பெனின்சுலார் ரயில்வேஸ் இந்த பாதை வழியாக ரயில்களை இயக்கியது

190 கிமீ, 20 மணி நேர பயணம்: இன்றும் தனியார் கட்டுப்பாட்டில் ஓர் இந்திய ரயில் பாதை- எங்கே?
Indian Railways : 90 கன்டெய்னர்களுடன் புறப்பட்ட சரக்கு ரயில் காணாமல் போனதா? - Fact Check

1910 ஆம் ஆண்டு கில்லிக் நிக்சன் என்ற தனியார் பிரிட்டிஷ் நிறுவனம் சகுந்தலா ரயில்வே சேவையை நிறுவியது.

இங்கிலாந்தின் மான்செஸ்டரில் வடிவமைக்கப்பட்ட நீராவி எஞ்சினை பயன்படுத்தி 1923 முதல் 70 ஆண்டுகள் சகுந்தலா ரயில் நிறுவனம் சேவையை வழங்கி வந்தது. அதன் பிறகு இந்திய ரயில்வே தற்போது டீசல் எஞ்சினை இயக்கி வருகிறது.

அமராவதி மாவட்டம் யாவத்மால் அச்சல்பூர் இடையே இயக்கப்படும் இந்த ரயிலுக்கு கட்டணம் ரூ.150. இந்த 190 கிமீ தூரத்தை கடக்க 20 மணி நேரமாகிறது.

இந்த சகுந்தலா ரயில்வே கம்பனிக்கு இந்திய அரசாங்கம் ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் வழங்குவதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அதனை அரசு மறுத்துள்ளதாக சிஎன்என் செய்தி தளம் கூறுகிறது.

190 கிமீ, 20 மணி நேர பயணம்: இன்றும் தனியார் கட்டுப்பாட்டில் ஓர் இந்திய ரயில் பாதை- எங்கே?
இந்தியாவின் முதல் ’அமைதியான’ ரயில் நிலையமாக மாறிய சென்னை சென்ட்ரல் - காரணம் என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com