குறுகிய நேரத்தில் இந்தியர்கள் சுற்றுலா செல்லக் கூடிய 5 நாடுகள் பற்றி தெரியுமா?

கொஞ்ச நாட்களுக்கு நாம் டிரிப் பிளான் செய்கிறோமானால் இந்த 5 நாடுகளுக்கு சென்று தனித்துவமான அனுபவத்தை பெறலாம். குறுகிய நேரத்தில் இந்தியர்கள் சுற்றுலா செல்லக் கூடிய 5 நாடுகளை தற்போது காணலாம்.
ஓமன்
ஓமன்twitter

பயணங்கள் ஒருவருக்கு புத்துணர்வு அளிக்கிறது. கொஞ்ச நாட்களுக்கு நாம் டிரிப் பிளான் செய்கிறோமானால் இந்த 5 நாடுகளுக்கு செல்லலாம்.

குறுகிய நேரத்தில் இந்தியர்கள் சுற்றுலா செல்லக் கூடிய 5 நாடுகளை தற்போது காணலாம்.

தாய்லாந்து
தாய்லாந்துTwitter

தாய்லாந்து

தாய்லாந்து மீது இந்தியர்களுக்கு எப்போதுமே ஒரு பயணக்காதல் உண்டு. குறிப்பாக இந்திய குடிமக்களுக்கு இ-விசா-ஆன்-அரைவல் சேவையை தாய்லாந்து வழங்குகிறது. மேலும் இங்கு உள்ள பயண வழிகாட்டிகள் எளிய ஆங்கிலத்தில் பேசுகின்றனர். எனவே இது இந்திய சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் வசதியாக உள்ளது.

மேலும் பெரும்பாலான பெரிய வங்கிகள் மற்றும் பணப் பரிமாற்ற மையங்களில் இந்திய ரூபாயை எளிதாக மாற்றலாம்.

சராசரி விமான நேரம் : 3-4 மணி நேரம்

விசா : வருகையின் போது விசா (15 நாட்கள் செல்லுபடியாகும்)

சீஷெல்ஸ்

சீஷெல்ஸ் என்பது ஒரு தீவுக்கூட்டமும். இந்தியப் பெருங்கடலில் உள்ள 115 தீவுகளைக் கொண்ட ஒரு தீவு நாடாகும். இதன் தலைநகர் விக்டோரியா. சீஷெல்ஸின் தெற்கே கொமொரோசு, மயோட்டே, மடகாசுகர், ரீயூனியன், மொரிசியசு ஆகிய நாடுகள் உள்ளன.

கிட்டத்தட்ட 93,000 மக்கள்தொகையைக் கொண்டுள்ள சீஷெல்ஸ் ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள மிகக்குறைந்த மக்கள்தொகையைக் கொண்ட நாடாகும்.

மேலும் இந்த பகுதி இந்தியர்களுக்கு ஒரு சிறந்த விடுமுறை இடமாகும். மும்பையில் இருந்து மாஹே வழியாக சீஷெல்ஸ் பகுதியை அடையளாம்.

இங்கு அதிகாரப்பூர்வ மொழிகள் Seychellois Creole என்றாலும், ஆங்கிலம் பரவலாக பேசப்படுகிறது. எனவே மொழி தடையாக இருக்காது. பயணிகள் அங்கீகரிக்கப்பட்ட கவுண்டர்களில் இந்திய ரூபாயை எளிதாக மாற்றலாம். இங்கு 115 தீவு கூட்டம் இருப்பதால் உங்களுக்கு புதிய அனுபவம் கிடைக்கலாம்.

சராசரி விமான நேரம் : 4 மணி நேரம்

விசா : இந்தியர்களுக்கு இல்லை

வியட்நாம்

வியட்நாம் ஒரு தென்கிழக்கு ஆசிய நாடாகும். ஆசிய நாடுகளிலேயே அழகான நாடாக திகழ்கிறது இது. வியட்நாம் நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. பச்சை பசேலென்ற காடுகள், நீலம் விரிந்துகிடக்கும் கடல், செங்குத்து மலைகள் அடுக்கடுக்கான நீர்வீழ்ச்சிகள், பிரம்மாண்டமான சின்னங்கள் என வாழ்வை நிறைவானதாக்கும் விஷயங்களால் வியக்க வைக்கிறது வியட்நாம் நாடு.

இந்தியர்கள் வியட்நாமை சுற்றி பார்க்க இ-விசா ஆன்லைனில் விண்ணப்பித்து நான்கு நாட்களில் பெறலாம்.

சராசரி விமான நேரம்: 4.5 மணி நேரம்

விசா : வருகையின் போது விசா (30 நாட்கள் செல்லுபடியாகும்)

ஓமன்
Vietnam : வியக்க வைக்கும் வியட்நாம் - 8 அற்புத தலங்கள்!

ஓமன்

சாகச பயணத்தை அனுபவிக்க நீங்கள் ஓமனை தேர்ந்தெடுக்கலாம். கடல் உணவுகளுக்குப் பிரபலமான மஸ்கட், பாறை ஏறுதல், மலையேற்றம், டால்பின்களைக் கடலில் காணுதல் உங்களுக்கு தனி அனுபவத்தை கொடுக்கும்.

100 க்கும் மேற்பட்ட அழிந்து வரும் பருந்துகள் மற்றும் பச்சை கடல் ஆமைகளை இங்கு காணலாம். ஓமன் இந்திய குடிமக்களுக்கு இ விசாவை வழங்குகிறது.

சராசரி விமான நேரம் : 3 மணி நேரம்

விசா : இ-விசா விண்ணப்பம் (30 நாட்கள் செல்லுபடியாகும்)

மொரீஷியஸ்

நீங்கள் இந்தியாவிலிருந்து மொரிஷியஸுக்குப் பயணிக்கும்போது அழகிய கடற்கரைகள் மற்றும் பல்லுயிர் நிறைந்த மலைக்காடுகள் உங்களுக்காகக் காத்திருக்கின்றன .

தேனிலவு மற்றும் குடும்ப விடுமுறைக்கு ஏற்ற இடம் என்றே சொல்லலாம்.

சராசரி விமான நேரம் : 6-7 மணி நேரம்

விசா : வருகையின் போது விசா (60 நாட்கள் செல்லுபடியாகும்)

ஓமன்
ஒரு முஸ்லீம் மதத்தவர் கூட இல்லாத ஒரே நாடு குறித்து தெரியுமா? சுவாரஸ்ய தகவல்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com