எண்களின் பெயர்கள் வைக்கப்பட்டுள்ள இடங்கள் - அதன் அர்த்தம் என்ன தெரியுமா?

இந்த தனித்துவம் என்பது அதன் வரலற்றில் மட்டுமல்லாமல், அதன் பெயர்களிலும் கூட இருக்கிறது எனலாம். அப்படி இந்தியாவின் சில இடங்களுக்கு எண்களால் பெயர் சூட்டியுள்ளனர். அந்த இடங்கள், அதன் பெயர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்தியாவின் இந்த இடங்களுக்கு எண்களின் பெயர்கள்
இந்தியாவின் இந்த இடங்களுக்கு எண்களின் பெயர்கள்canva

இந்தியா அதன் பாரம்பரியம், பன்முகத்தனமை போன்றவற்றிற்காக அறியப்படுகிறது. அதில் ஒன்று, இங்கிருக்கும் இடங்கள், அதன் தனித்துவங்கள்.

இந்த தனித்துவம் அதன் வரலற்றில் மட்டுமல்லாமல், அதன் பெயர்களிலும் கூட இருக்கிறது எனலாம். அப்படி இந்தியாவின் சில இடங்களுக்கு எண்களால் பெயர் சூட்டியுள்ளனர். அந்த இடங்கள், அதன் பெயர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

சதரா, மகாராஷ்டிரா

இது மராத்திய ராஜ்ஜியத்தின் முன்னாள் தலைநகர் ஆக இருந்தது. மகாராஷ்டிராவின் ஆஃப் பீட் தலமான இது வரலாற்று சிறப்பை கொண்டுள்ளது. இந்த நகரமானது முற்றிலும் 17 கோட்டைச் சுவர்களால் சூழப்பட்டுள்ளது.

இதனாலேயே இதனை சதரா என்று அழைக்கின்றனர். சதரா என்றால் இந்தி, மராத்திய மொழிகளில் 17 என்று பொருள்

பஞ்சகனி, மகாராஷ்டிரா

மகாராஷ்டிராவில் அமைந்திருக்கும் ஒரு சற்றே வித்தியாசமான மலைப்பகுதி தான் பஞ்சகனி. பஞ்சகனி என்றால், ஐந்து கிராமங்களுக்கு நடுவில் உள்ள நிலம் என்று பொருள்படுகிறது.

பஞ்சகனி, மலைவாசஸ்தலமாக மாறுவதற்கு முன்பு, தண்டேகர், கோதாவலி, அம்ப்ரல், கிங்கர் மற்றும் தைகாட் ஆகிய ஐந்து கிராமங்களால் சூழப்பட்ட பெயரற்ற இடமாக இருந்தது.

செவன் சிஸ்டர்ஸ் நீர்வீழ்ச்சி, மெகாலயா

சிராபுஞ்சியின் பேர் அழகுகளில் ஒன்று இந்த நீர்வீழ்ச்சி. இது கிழக்கு காசி மலை மாவட்டத்தில், மாவ்சமாய் கிராமத்தில் அமைந்துள்ளது. உள்ளூர்வாசிகள் இதனை நோஷன்கிதியாங் என்று அழைக்கின்றனர். இந்த நீர்வீழ்ச்சி ஏழு பாகங்களாக உள்ளதால் இந்த பெயர் வந்தது.

இந்த நீர்வீழ்ச்சியை ஆண்டு முழுவதுமே கண்டு ரசிக்கலாம் என்றாலும், பருவமழை சமயத்தில் இன்னும் அழகான வடிவம் எடுக்கும்.

அஷ்டமுடி ஏரி, கேரளா

கேரளாவின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று இந்த அஷ்டமுடி ஏரி. இயற்கை நம்மை அதிசயிக்க வைக்க தவறுவதில்லை, அதற்கு இந்த அஷ்டமுடி ஏரியே சாட்சி எனலாம்.

அஷ்டமுடி என்றால், 8 சடைகள் என்று மலையாளத்தில் பொருள்படுகிறது. 8 நதிகள் கூடும் இடத்தில் இந்த ஏரி அமைந்துள்ளது.

அஷ்டமுடி ஏரி கேரளாவின் உப்பங்கழியின் நுழைவாயில் என்றும் அழைக்கப்படுகிறது.

ஜீரோ மைல் ஸ்டோன், மகாராஷ்டிரா

நாக்பூர் நகரில் அமைந்துள்ளது இந்த இடம். 1907ல் நாக்பூரில் இந்தியாவின் பெரிய முக்கோணவியல் ஆய்வு, Great Trigonometrical Survey of India in 1907 in Nagpur, நடைபெற்றது. அப்போது இந்த திட்டத்தின் கீழ், மலைகள் உட்பட, இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு அடையாளமும் அளவிடப்பட்டது.

இங்குள்ள மணற்கல் தூண் GTS ஸ்டாண்டர்ட் பெஞ்ச் குறியைப் பிரதிநிதித்துவப்படுத்துவதால் ஜீரோ மைல் ஸ்டோன் என்று அறியப்பட்டது.

இந்த இடம் இந்தியாவின் சரியான மையத்தைக் குறிக்கிறது என்று கூறப்படுகிறது.

எனினும், பிரிவினைக்குப் பிறகு, மத்தியப் பிரதேசத்தில் உள்ள கரௌண்டி கிராமம் இந்தியாவின் புவியியல் மையமாக மாறியது.

இந்தியாவின் இந்த இடங்களுக்கு எண்களின் பெயர்கள்
மனிதர்கள் செல்ல தடை செய்யப்பட்ட பகுதிகள்: இந்தியாவில் எங்கே? என்ன ஆபத்து இருக்கிறது?

நௌகுச்சியாடல், உத்தரகாண்ட்

உத்தரகாண்டில் அமைந்துள்ள மற்றுமொரு ஏரியாகும் இந்த நௌகுச்சியாடல். ஆனால் நைனிதால் ஏரி போன்று பிரபலமாக இல்லை இந்த இடம்.

நகரின் முக்கிய சுற்றுலாத்தலமான இந்த ஏரியின் நினைவாக நௌகுச்சியாடல் என்று பெயரிடப்பட்டது. ஏரியின் ஒன்பது பக்கவாட்டுகளில் இருந்து அதன் பெயரை பெறுகிறது

உனகோட்டி, திரிபுரா

உனகோட்டியின் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சம், மலைகளின் ஓரத்தில் செதுக்கப்பட்டுள்ள பெரிய பாஸ் ரிலீஸ் ஆகும். உனகோடி என்ற சொல்லுக்கு ஒரு கோடிக்கு குறைவானவர் என்று பொருள்.

உள்ளூர் புராணங்களின்படி, சிவன் மற்றும் அவரது 99, 99, 999 பின்பற்றுபவர்கள் (ஆண் மற்றும் பெண் தெய்வங்கள்) காசிக்குச் சென்று கொண்டிருந்தனர், அவர்கள் செல்லும் வழியில் ஓய்வெடுப்பதற்காக இந்த இடத்தில் நின்றனர்.

மீண்டும் பயணத்தைத் தொடர அனைவரும் அதிகாலையில் எழுந்திருக்கச் சொன்னார் சிவன். காலை வந்தது, அவருடைய சீடர்கள் தூங்கிக் கொண்டிருந்தார்கள். அதனால் அவர்கள் மீது சாபம் இட்டு, அனைத்தையும் கல்லாக மாற்றினார்.

இதனை யுனெஸ்கோவின் பாரம்பரிய தலங்களில் ஒன்றாக இணைக்க திட்டமிட்டுள்ளனர்.

இந்தியாவின் இந்த இடங்களுக்கு எண்களின் பெயர்கள்
Travel: இந்தியா முதல் இலங்கை வரை - உலகின் பிரபலமான குகை கோவில்கள்

ஜீரோ பாயிண்ட், சிக்கிம்

ஜீரோ பாயிண்ட் யும்தாங் பள்ளத்தாக்கிலிருந்து (25 கிமீ) ஒன்றரை மணி நேரம் தொலைவில் அமைந்துள்ளது. சிக்கிமில் உள்ள இந்த குறிப்பிட்ட இடம் ஜீரோ பாயிண்ட் என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் இதற்கு அப்பால் பொதுமக்கள் சாலைகள் எதுவும் இல்லை. சிக்கிமில் அதிகம் பார்வையிடப்படும் இடங்களில் இதுவும் ஒன்றாகும்.

இந்தியாவின் இந்த இடங்களுக்கு எண்களின் பெயர்கள்
தாஜ் மஹால் டு மைசூரு பேலஸ் - இந்தியாவில் அதிகம் பார்வையிடப்படும் இடங்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com