மனிதர்கள் செல்ல தடை செய்யப்பட்ட பகுதிகள்: இந்தியாவில் எங்கே? என்ன ஆபத்து இருக்கிறது?

நம் கண்ணில் பட்ட சில மர்மமான இடங்களுக்கு மனிதர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஒரு இடத்துக்கு மனிதர்களே செல்ல வேண்டாம் எனக் கூறுப்படுகிறதென்றால் இயல்பாகவே அந்த இடம் குறித்து அறிந்துகொள்ள நமக்கு ஆர்வம் அதிகரிக்கும்.
மனிதர்கள் செல்ல தடை செய்யப்பட்ட பகுதிகள்: இந்தியாவில் எங்கே? என்ன ஆபத்து இருக்கிறது?
மனிதர்கள் செல்ல தடை செய்யப்பட்ட பகுதிகள்: இந்தியாவில் எங்கே? என்ன ஆபத்து இருக்கிறது?Twitter

நம் பூமியில் தினமும் புதுப் புது விஷயங்களைக் கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறார்கள். பல நூறு ஆண்டுகளாக பூமி முழுவதையும் ஆராய்ந்து அதிசயங்களைக் கண்டுபித்து வருகிறான் மனிதன்,

அப்படி நம் கண்ணில் பட்ட சில மர்மமான இடங்களுக்கு மனிதர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஒரு இடத்துக்கு மனிதர்களே செல்ல வேண்டாம் எனக் கூறுப்படுகிறதென்றால் இயல்பாகவே அந்த இடம் குறித்து அறிந்துகொள்ள நமக்கு ஆர்வம் அதிகரிக்கும்.

மனிதர்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ள 5 இடங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

பாம்பு தீவு, பிரேசில்

பிரேசில் கடற்கரையில் இருக்கும் சிறியத் தீவு பாம்புத்தீவு என அறியப்படுகிறது. இதன் பெயரில் இருந்தே இதிலிருக்கும் ஆபத்து என்னவென்று அறிந்திருப்பீர்கள்.

மனிதர்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய தங்க ஈட்டி தலை பாம்புகள் இங்கு அதிகமாக இருக்கின்றன. இவற்றின் விஷம் மிக மிக அதிகம்.

இந்த அரியவகைப் பாம்புகளைப் பாதுகாக்கவும், பொது மக்களின் பாதுகாப்புக் கருதியும் பிரேசில் அரசு பாம்புத் தீவுக்கு மனிதர்கள் செல்ல தடைவிதித்துள்ளது.

பாம்பு தீவு, பிரேசில்
பாம்பு தீவு, பிரேசில்

செர்னோபில் விலக்கு மண்டலம், உக்ரைன்

1986ம் ஆண்டு நிகழ்ந்த அணுசக்தி பேரழிவுக்குப் பிறகு செர்னோபில் உலகளவில் பேசப்படும் தடை செய்யப்பட்ட பகுதியாக இருக்கிறது.
இன்றளவும் இங்கு கதிர்வீச்சு நீடித்து வருவதனால் தடை செய்யப்பட்ட பகுதியாக இருக்கிறது. எனினும், குறிப்பிட்ட சில காராணங்களுக்காக சிலரை அனுமதிக்கின்றனர்.
அணுவுலைகள் எவ்வளவு ஆபத்தானவை என்பதை அறிந்துகொள்ள இந்த பேய் நகரங்களைப் பார்த்தாலே போதும்.

மனிதர்கள் செல்ல தடை செய்யப்பட்ட பகுதிகள்: இந்தியாவில் எங்கே? என்ன ஆபத்து இருக்கிறது?
Oppenheimer: ஹீரோவா? வில்லனா? - விகடனின் சிறப்புக் கட்டுரை

ஸ்வால்பார்ட் குளோபல் சீட் வால்ட், நார்வே

நார்வே ஆர்டிக் பகுதியில் நிரந்தரமான உறைபனி இருக்கிறது. இங்குள்ள குளோபல் சீட் வால்டில் உலகில் தாவரங்கள் அனைத்தின் விதைகளும் பாதுகாக்கப்படுகின்றன. பேரழிவு காலத்தில் தாவரங்களை நாம் இழந்துவிடக் கூடும் என்பதனால் இந்த ஏற்பாடு.
உலகின் பல்லுயிர்த்தன்மையை பாதுகாப்பதற்காக இந்த இடத்துக்கு மக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள கடுங்குளிரில் விதைகள் பத்திரமாக உறங்கிக்கொண்டிருக்கின்றன.

மனிதர்கள் செல்ல தடை செய்யப்பட்ட பகுதிகள்: இந்தியாவில் எங்கே? என்ன ஆபத்து இருக்கிறது?
இங்கு யாரும் பிறக்கவோ இறக்கவோ முடியாது: உலகிலேயே மகிழ்ச்சியான ஊரின் கதை!

ஏரியா 51, அமெரிக்கா

அமெரிக்க விமானப்படையால் ரகசியமாக பாதுகாக்கப்படும் பகுதி ஏரியா 51 ஆகும். இந்த இடத்தைச் சுற்றி நிறைய கோட்பாடுகள் புனையப்பட்டுள்ளன.
ஏரியா 51 பகுதியில் ஏலியன்கள் இருப்பதாகவும் வதந்திகள் கிளம்புவது வழக்கம்.
நெவாடா பாலைவனத்தில் உள்ள இந்த இடத்துக்குள் நுழைய நினைப்பவர்களை அமெரிக்க விமானப்படையினர் கைது செய்கின்றனர்.
இந்த இடம் பற்றிய அனைத்து தகவல்களும் இரகசியமாக பாதுகாக்கப்படுகின்றன.

மனிதர்கள் செல்ல தடை செய்யப்பட்ட பகுதிகள்: இந்தியாவில் எங்கே? என்ன ஆபத்து இருக்கிறது?
அமெரிக்கா ஏரியா 51 மர்மங்கள் : இங்கு ஏலியன்கள் ஆய்வு நடக்கிறதா? US எதனை மறைக்கிறது?

வட சென்டினென்டல் தீவு, இந்தியா

இந்தியாவின் அந்தமான் தீவுகளில் இருக்கும் வட சென்டினெண்டல் தீவு உலக மக்களுடன் எந்த தொடர்பும் இல்லாமல் வாழும் பழங்குடி மக்களைக் கொண்டிருக்கிறது.

இந்த தீவுக்கு மனிதர்கள் சென்றால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் அந்த மக்கள் நோய்தாக்கத்துக்கு ஆளாக்கப்படுவார்கள் என்பதனால் இது தடை செய்யப்பட்ட பகுதியாக இருக்கிறது.

இந்த தீவுக்கு செல்ல முயன்ற யாரும் இப்போது உயிருடன் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மனிதர்கள் செல்ல தடை செய்யப்பட்ட பகுதிகள்: இந்தியாவில் எங்கே? என்ன ஆபத்து இருக்கிறது?
சென்டினல் தீவு : கால்வைத்த வெளிநபர்கள் உயிருடன் திரும்பியதில்லை - ஒரு திக்திக் பயணம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com