பெங்களூரு: பிரிண்ட் செய்யப்படும் அலுவலகம், வீடுகள் - புதிய டெக்னாலஜி எப்படி செயல்படுகிறது?

3டி கான்கிரீட் பிரிண்டிங் இயந்திரத்தின் மூலம் இந்தக்கட்டடம் பிரிண்ட் செய்யப்படுகிறது. வீடுகளை பிரிண்ட் செய்யும் போதே பிளமிங், எலெக்ட்ரிக் மற்றும் மெக்கானிக்கல் வேலைகளும் முடிந்துவிடுமாம். மொத்தமாக இது தயாராக 45 நாட்கள் எடுத்துக்கொள்ளும்.
பெங்களூரு: பிரிண்ட் செய்யப்படும் அலுவலகம், வீடுகள் - புதிய டெக்னாலஜி எப்படி செயல்படுகிறது?
பெங்களூரு: பிரிண்ட் செய்யப்படும் அலுவலகம், வீடுகள் - புதிய டெக்னாலஜி எப்படி செயல்படுகிறது?Twitter
Published on

பெங்களூருவில் முதல்முறையக 3டியில் பிரிண்ட் செய்யப்பட்ட அஞ்சல் அலுவலகம் வரவுள்ளது.

இப்போது இதற்கான கட்டுமான பணிகள் (பிரிண்டிங்) நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

ஹலசூருவில் உள்ள கேம்பிரிட்ஜ் லே அவுட்டில் எல் அண்ட் டி கன்ஸ்ட்ரக்ஷன் மூலம் புதிய தபால் நிலைய கட்டிடம் பிரிண்ட் செய்யப்பட்டு வருகிறது.

எப்போது தயாராகும்?

3டி கான்கிரீட் பிரிண்டிங் இயந்திரத்தின் மூலம் இந்தக்கட்டடம் பிரிண்ட் செய்யப்படுகிறது. முதன்முதலாக பிரிண்ட் செய்யப்படும் தபால் அலுவலகம் 1000 சதுர அடியில் அமையவுள்ளது.

வீடுகளை பிரிண்ட் செய்யும் போதே பிளமிங், எலெக்ட்ரிக் மற்றும் மெக்கானிக்கல் வேலைகளும் முடிந்துவிடுமாம். மொத்தமாக இது தயாராக 45 நாட்கள் எடுத்துக்கொள்ளும்.

இந்த முறையைப் பயன்படுத்துவது எதனால்?

இப்படி பிரிண்ட் செய்யும் தொழில்நுட்பம், கட்டிட பொருட்கள் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு கவுன்சிலின் (BMTPC) அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறது.

இந்த 3 டி பிரிண்டிங் மூலம் வீடுகள், கடைகள் என எந்த கட்டடத்தையும் பிரிண்ட் செய்து பயன்படுத்த முடியும். இதனால் கட்டுமான பணி விரைவாக நடக்கும். தரமும் மேம்படும் என்றும் எல்&டி நிறுவனம் கூறியுள்ளது.

விரைவில் இந்த தொழில்நுட்பம் கட்டுமானதுறையில் மாற்றங்களைக் கொண்டுவரும் என எதிர்பார்க்கலாம்.

பெங்களூரு: பிரிண்ட் செய்யப்படும் அலுவலகம், வீடுகள் - புதிய டெக்னாலஜி எப்படி செயல்படுகிறது?
உலகின் காஸ்ட்லி வைரம் இதுதான் : அதன் சிறப்பு என்ன தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

எப்படி வீடு கட்டப்படுகிறது?

இந்த தொழிநுட்பத்தில் ரோபோடிக் பிரிண்டர் கட்டுமானத்தில் ஈடுபடுகிறது. இதில் நமக்குத் தேவையான வீட்டின் 3டி மாதிரியை உள்ளீடு செய்தால் போதும்.

சரியான பதத்தில் கான்கிரீட்டும் கொடுத்தால் இயந்திரமே நமக்கான வீட்டை பிரிண்ட் செய்துவிடும்.

பெங்களூரு: பிரிண்ட் செய்யப்படும் அலுவலகம், வீடுகள் - புதிய டெக்னாலஜி எப்படி செயல்படுகிறது?
பெங்களூரூ: வாடகைக்கு வீடு கிடைக்கவில்லை - ஜெயில் ரூமையே வீடாக மாற்றிய நபர்

வீடுகள், கட்டடங்கள் மட்டுமில்லாமல் நாற்காலி, கான்கிரீட் இருக்கைகள் கூட இதன் மூலம் பிரிண்ட் செய்ய முடியும்.

கட்டிமுடிக்கப்பட்ட பிறகு இந்த கட்டடம் பெங்களூருவின் அடையாளங்களில் ஒன்றாக மாறுமென எதிர்பார்கப்படுகிறது.

இப்படி பிரிண்ட் செய்து கட்டடங்கள் எழுப்புவதிலும் தமிழகம் தான் முன்னோடியாக இருந்திருக்கிறது. எல்&டி நிறுவனம் காஞ்சிபுரத்தில் 240 சதுர அடியில் ஒரு 1 BHK வீட்டைக் 2019ம் ஆண்டே கட்டியிருக்கின்றனர்.

பெங்களூரு: பிரிண்ட் செய்யப்படும் அலுவலகம், வீடுகள் - புதிய டெக்னாலஜி எப்படி செயல்படுகிறது?
தன்னந்தனியாக கப்பல் வீடு கட்டும் விவசாயி - 13 ஆண்டு கால உழைப்பு எப்போது நிறைவடையும்?

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com