தேவையில்லாமல் வெளியில் போகக்கூடாது, கணவரிடம் ஒரு மணி நேரம் மட்டுமே பேசவேண்டும், உடல் நலக் குறைவு ஏற்பட்டால் கணவனுக்கு தெரிவிக்கக் கூடாது...இப்படி இன்னும் ஏகப்பட்ட கண்டிஷன்ஸ்!
இது எல்லாம் என்ன என்று யோசிக்கிறீகளா? திருமணமாகி வந்த மருமகளுக்கு மாமியார் வீட்டில் போடப்பட்ட கெடுபுடி உத்தரவுகள் இவை. கண்டிஷன்களை படித்தால், இந்த வருடத்தின் மோசமான மாமியார் என்ற பட்டத்தையே தூக்கி கொடுத்துவிடலாம்.
திருமணமாகி மாமியார் வீட்டுக்கு போகும் பெண்களுக்கு மனதில் விவரிக்க முடியாத குழப்பங்கள், வெளியில் சொல்ல முடியாத அச்சங்கள் நிறைய இருக்கும்.
ஆனால், இந்தக் காலத்தில் கணவனின் அல்லது கணவனுடைய அம்மாவின் மைன்செட் மாறிவிட்டதை நாம் அன்றாடம் பார்க்கிறோம் தான்.
இருப்பினும், அங்கும் இங்குமாக ஒரு சில இடங்களில் பெண்களை ஒடுக்கும், ஒரு வட்டத்துக்குள் கட்டுப்படுத்தி, கணவர் வீட்டாருக்கு கீழ்படிந்து நடக்கவேண்டும் என்ற மனநிலையுடன் இருப்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்
தன் கணவன் வீட்டில் அவருக்கு போடப்பட்ட நிபந்தனைகளை தாங்கிக்கொள்ள முடியாமல் திருமண வாழ்க்கையை முறித்துக்கொண்டுள்ளார் ஒரு பெண்.
வைரலாகி வரும் இந்த சம்பவம் எங்கு நடந்தது என்ற விவரங்கள் இல்லை. இந்த ட்வீட்டை அந்த பெண்ணின் வழக்கறிஞர், ‘நீலகருசிவப்பு’ என்ற தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்
1.வீட்டின் Main gate சாவி தரமுடியாது
2.மாமியார் பேசாவிட்டாலும், மருமகள் சென்று அவளுடன் பேசவேண்டும்
3. காலை 8 மணிக்கெல்லாம் அறையிலிருந்து கீழே வந்துவிடவேண்டும்
4. மாவு அரைப்பது உள்பட வீட்டு வேலைகள் அனைத்துமே மருமகள் தான் செய்யவேண்டும்
5. குளிக்க, கழிவறை பயன்படுத்த, மேல் உள்ள அறைக்கு செல்ல, எல்லாவற்றிற்கும் மாமியாரிடம் அனுமதி பெறவேண்டும்
6.பெண்ணின் பெற்றோர், பெண் வீட்டார் யாரும் வீட்டிற்கு வந்து மகளை சந்திக்கக்கூடாது
7.மொபைல் ஃபோன் பயன்படுத்தக்கூடாது (பெற்றோர் மற்றும் உறவினரிடம் பேசக்கூடாது)
8.கணவனுடன் ஒருமணி நேரம் தான் பேசவேண்டும். அதுவும் தன்னைப் பற்றி மட்டும் தான் பேசிக்கொள்ளவேண்டும், மாமியாரை பற்றி பேசக்கூடாது
9. தனக்கோ தன் குழந்தைக்கோ உடல்நிலை சரியில்லை என்றால், கணவரிடம் சொல்லக்கூடாது
10.உடல்நிலை சரியில்லை என்றால் அம்மா வீட்டிற்கு சென்றுவிட வேண்டும், கணவர் வீட்டில் இருக்ககூடாது.
11. தன்னுடைய தேவைகளை மாமியாரிடம் தான் கூறவேண்டும். கணவரிடம் கூறக்கூடாது
12. துவைத்த துணி காயவைக்க மொட்டை மாடியின் சாவி கொடுக்க முடியாது
13. வெளியில் செல்ல முறையான காரணம் இருந்தால் மட்டுமே அனுமதி. சாப்பாடு வாங்கக்கூட தேவையில்லாமல் வெளியில் செல்லக்கூடாது
14. பெற்றோர், உடன்பிறந்தவர், உறவினர்கள் யாரும் வீட்டிற்கு வரக்கூடாது
இந்த கண்டிஷன்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த நெட்டிசன்களும், சமூதாயம் இன்னும் மாறவில்லை என்பதற்கு இதுவே சான்று எனக் கருத்துகள் தெரிவித்து வருகின்றனர்.
ஒரு வேளை தன் கணவர் அவரது வீட்டை விட்டு தனியாக வந்தால் சேர்ந்து வாழ சம்மதம் என அந்த பெண் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust