TJ's: சிறை கைதிகள் நடத்தும் மில்லியன் டாலர் நிறுவனம் - கைதிகளின் வருமானம் என்ன தெரியுமா?

கைதிகள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் போது ஒவ்வொரு சிறைச்சாலையும் ஏதோ ஒரு வகையில் பொருளாதாரத்தை ஈட்டும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.
TJ's: சிறை கைதிகள் நடத்தும் மில்லியன் டாலர் நிறுவனம் - கைதிகளின் வருமானம் என்ன தெரியுமா?
TJ's: சிறை கைதிகள் நடத்தும் மில்லியன் டாலர் நிறுவனம் - கைதிகளின் வருமானம் என்ன தெரியுமா?Twitter
Published on

TJ's பலவகையான பொருட்களை உற்பத்தி செய்யும் பிராண்ட் ஆகும். திகார் சிறையில் இருந்து இயங்கிவரும் இந்த நிறுவனம் பலவகையான பொருட்களை உற்பத்தி செய்கிறது.

பிரட், ஆடை, வீட்டு உபயோகப் பொருட்கள், காகித பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்கள் இங்கிருந்து வினியோகம் ஆகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த நிறுவனம் முழுக்க முழுக்க சிறை கைதிகளாலேயே நடத்தப்படுகிறது.

1961ம் ஆண்டு சிறைக்குள் தொழிற்சாலை திறக்கப்பட்ட இந்த TJ's நிறுவனம் பற்றி பல சுவாரஸ்யமான தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம்.

சிறைச்சாலையில் இருக்கும் கைதிகளை சமூகத்துக்கும் உதவும் மனிதர்களாக மாற்றுவது தான் இந்த முன்னெடுப்பின் அடிப்படை நோக்கமாக இருந்தது.

மற்றொருபக்கம், 2021ம் ஆண்டு நிலவரப்படி, இந்தியாவில் 1319 சிறைகள் இருந்தன. இதில் 4,25,609 கைதிகளை அடைத்து வைக்க முடியும்.

ஆனால் சிறையில் இருக்கும் கைதிகளின் எண்ணிக்கை 5,54,034 ஆக இருந்தது. சிறைக்கைதிகள் 130.2% சிறைகளை அடைத்திருக்கின்றனர்.

இப்படி கைதிகள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் போது ஒவ்வொரு சிறைச்சாலையும் ஏதோ ஒரு வகையில் பொருளாதாரத்தை ஈட்டும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.

TJ's: சிறை கைதிகள் நடத்தும் மில்லியன் டாலர் நிறுவனம் - கைதிகளின் வருமானம் என்ன தெரியுமா?
உலகை உலுக்கிய ஒரு வழக்கு : 23 ஆண்டுகள் சிறை வைக்கப்பட்ட சையத் - சினிமாவை விஞ்சும் நிஜ கதை

2021 ஜூலை நிலவரப்படி, TJ's பொருட்கள் விற்பனையிலிருந்து 5 மில்லியன் டாலர்கள் லாபம் கிடைத்திருக்கிறது.

TJ's தயாரிப்புகள் திகார் ஹாட், ரிலையன்ஸ் போன்ற பெரிய சில்லறை விற்பனை நிலையங்களில் கிடைக்கிறது. விரைவில் ஆன்லைனில் விற்பனை செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

TJ's லாபத்திலிருந்து பெரும்பகுதி மீண்டும் பொருட்கள் வாங்கவும், கைதிகளுக்கு சம்பளம் வழங்கவும், ஜெயில் பட்ஜெட்டில் செலவு செய்யவும் பயன்படுகிறது.

TJ's: சிறை கைதிகள் நடத்தும் மில்லியன் டாலர் நிறுவனம் - கைதிகளின் வருமானம் என்ன தெரியுமா?
எல் சாப்போ: உலகை நடுங்க வைத்த போதை பொருள் மாஃபியாவின் கதை!

TJ's நிறுவனத்தில் பணியாற்றும் ஒரு கைதி ஒரு நாளில் 171 முதல் 308 ரூபாய் வரை சம்பாதிக்க முடியும்.

திகார் சிறையில் உள்ள பெண் கைதிகள் மெழுகுவர்த்தி, ஊறுகாய், மெஹந்தி போன்றவற்றை தயாரிக்கின்றனர். பெண்களின் ஒரு குழு சானிட்டரி நாப்கின்களை தயாரிக்கின்றனர். சிறையில் உள்ள பெண்களுக்கு 6 நாப்கின்கள் வரை இலவசமாக வழங்கப்படுகின்றன.

TJ's: சிறை கைதிகள் நடத்தும் மில்லியன் டாலர் நிறுவனம் - கைதிகளின் வருமானம் என்ன தெரியுமா?
நடுங்க வைக்கும் ஜப்பான் சிறைகள் - என்ன நடக்கிறது அங்கே? - அதிர வைக்கும் தகவல்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com