உக்ரைன் மீது ரஷியா 15வது நாளாக போர் தொடுத்து வருகிறது. தலைநகர் கீவ் உட்பட நாட்டின் கிழக்கு மற்றும் மத்திய பிராந்தியங்களில் உள்ள நகரங்களில் ரஷிய விமானங்கள் இரவில் குண்டுவீசி தாக்குதல் நடத்தியது.
இதுவரை பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 20 லட்சம் பொதுமக்கள் உக்ரைனில் இருந்து வெளியேறியுள்ளனர்.
உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, ஒரு புதிய வீடியோவில், ரஷியாவின் தாக்குதலைத் தொடர்ந்து எதிர்க்குமாறு தனது மக்களை கேட்டுக்கொண்டு உள்ளார். இதற்கிடையில், உக்ரைன் மீதான போருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷியாவின் எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.
இந்த நிலையில் உக்ரைனின் கிழக்கு நகரமான செவரோடோனெட்ஸ்க்-ல் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டனர்.
ரஷியாவை பயங்கரவாத நாடாக அறிவிக்குமாறு உக்ரைன் அதிபர் வலியுறுத்தியுள்ளார்.
இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் காணொலி மூலம் உரையாற்றிய அவர், ரஷியாவுக்கு எதிரான பொருளாதார தடைகளின் அழுத்தத்தை அதிகரித்து அந்நாட்டை பயங்கரவாத நாடாக அறிவிக்க வேண்டும் எனவும், உக்ரைனிய மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
ரஷ்ய படைகளை ஆகாயம், கடல், தரை என மூன்று வழிகளிலும் உக்ரைன் ராணுவம் எதிர்கொண்டு வருவதாக கூறிய ஜெலென்ஸ்கி, தங்கள் வான்பரப்பை விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதி என அறிவித்து, உக்ரைன் வான்பரப்பு பாதுகாப்பானது என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
உக்ரைன் அதிபரின் உரையை பாராட்டிய இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், உக்ரைனுக்கு ஆயுத உதவிகள் உட்பட அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என உறுதியளித்தார்.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக, குமரி மாவட்ட மீனவர்கள் எட்டு பேரை இந்தோனேஷியா கடற்படையினர் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம், துாத்துர் மீனவ கிராமத்தைச் சேர்ந்த மரியா ஜஸ்டின் தாஸ், 34, இம்மானுவேல், உட்பட எட்டு மீனவர்கள், அந்தமான் தீவில், போர்ட் பிளேயர் துறைமுகத்தில் தங்கி ஆழ்கடல் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்தனர்.இவர்கள் இந்தோனேஷியா எல்லைக்கு உட்பட்ட ருஷா தீவில் மீன் பிடித்ததாக, இந்தோனேஷியா கடற்படையினர் கைது செய்தனர்.
இவர்கள் படகிலிருந்து 7,500 கிலோ மீன் பறிமுதல் செய்யப்பட்டது.இந்நிலையில், இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்து மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் ஐந்து பேரை, இந்திய கடலோர பாதுகாப்பு படையினர் நேற்று கைது செய்து, படகை பறிமுதல் செய்தனர்.
கேரளத்தின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள அண்டலூர் காவு பரசுராமன் கோயிலில் நடக்கும் தைய்யம் விழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தத் திருவிழாவின் போது கிஸ்பு என்னும் வட மாநிலப் பெண் கோயில் வாசலில் அமர்ந்திருந்து பலூன் வியாபாரம் செய்துவந்தார். ஏற்கெனவே ஊதி வைத்திருந்த பலூன்களுக்கு இடையில் கிஸ்பு ஒரு மலரைப் போல் இருப்பதைப் பார்த்த புகைப்படக் கலைஞர் அர்ஜுன் கிருஷ்ணன், கிஸ்புவை புகைப்படம் எடுத்தார்.
தான் எடுத்த புகைப்படங்களை கிஸ்புவிடமும், அவரோடு இருந்து பலூன் விற்றுக்கொண்டிருந்த அவரது தாயாரிடமும் காட்ட அவர்களும் அதைப்பார்த்து மகிழ்ச்சியடைந்தனர். அவர்களின் அனுமதியோடு கிஸ்புவின் படத்தை அர்ஜுன் கிருஷ்ணன், தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். அந்தப் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆனது. புகைப்படக் கலைஞர் அர்ஜுன் கிருஷ்ணன் பதிவிட்ட படங்களிலேயே இதுதான் அதிகமாகப் பகிரப்பட்டதால், கிஸ்புவை வைத்து மாடலிங் போட்டோஷூட் நடத்தவும் முடிவு செய்தார். இதற்கு அவரது குடும்பத்தினரும் சம்மதித்தனர்.
ஒப்பனைக் கலைஞர் ரம்யா பிரஜூல் கிஸ்புவை, மாடலிங்குக்கு ஏற்ப அலங்காரம் செய்தார். பின்னர் அந்தப் புகைப்படத்தையும், கிஸ்பு பலூன் விற்றுக் கொண்டிருந்த பழைய புகைப்படத்தையும் இணையவாசிகள் ஆச்சரியத் தோடு பகிர்ந்து வருகின்றனர். இதன்மூலம் கிஸ்புவுக்கு மாடலிங் வாய்ப்புகளும் குவிந்து வருகின்றன. கேரளத்தில் கடந்த வாரம் மம்மிக்கா என்ற 60 வயது கூலித் தொழிலாளி மாடலிங் கலைஞராக அசத்தி னார். இந்த வாரம் பலூன் வியாபாரியான கிஸ்பு மாடலிங் கலைஞராக உருவெடுத்துள்ளார். ஒற்றைப் புகைப்படத்தால் சமூக வலைதளங்கள் மூலம் பலூன் வியாபாரியான கிஸ்பு புகழின் உச்சிக்கே சென்றுள்ளார்.
அமெரிக்காவின் முன்னணி ஹோம்ஓனர்ஷிப் நிறுவனமான Better.com நிறுவன சிஇஓ விஷால் கார்க் 3 மாதங்களுக்கு முன்பு 900 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்த பின்பு அதிகப்படியான எதிர்ப்புகளைச் சந்தித்தார்.
இதைத் தொடர்ந்து ஊழியர்கள் மத்தியில் மன்னிப்பு கேட்ட விஷால் கார்க் பெட்டர்.காம் நிறுவனத்தின் செலவுகளைக் குறைக்க வேண்டும் என முடிவு செய்தார்.
இதன் வாயிலாக அமெரிக்கா மற்றும் இந்தியாவில் இருக்கும் இந்நிறுவன ஊழியர்களில் சுமார் 3000 பேரை வேலை நீக்க ஊதியத்துடன் ஓரே நேரத்தில் பணிநீக்கம் செய்துள்ளார் விஷால் கார்க்.
நியூசிலாந்தில் மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. மித்தாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை விழ்த்தியது.
இந்நிலையில், இந்திய அணி முன்னாள் சாம்பியனான நியூசிலாந்து அணியுடன் இன்று மோதுகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது.
இதையடுத்து நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் களமிறங்கி விளையாடி வருகின்றனர். வலிமையான அணியாக கருதப்படும் நியூசிலாந்து அணி கடந்த போட்டியில் வெஸ்ட் இண்டிஸ் அணியிடம் தோல்வியடைந்தது குறிப்பிடதக்கது.