தக்காளி விற்பனை செய்ய பவுன்சர்களை நியமித்த வியாபாரி - ஒரு அடடே சம்பவம்!

"திண்ணையில கிடந்த பயலுக்கு திடுக்குன்னு நடந்துச்சாம் கல்யாணம்" எனப் பெரியவர்கள் பேசக் கேட்டது நம் கண்முன்னே நடந்துகொண்டிருக்கிறது.
தக்காளி விற்பனை செய்ய பவுன்சர்களை நியமித்த வியாபாரி - ஒரு அடடே சம்பவம்!
தக்காளி விற்பனை செய்ய பவுன்சர்களை நியமித்த வியாபாரி - ஒரு அடடே சம்பவம்!Vikatan
Published on

நாடு முழுவதும் தக்காளி விலை உயர்வு மிகப் பெரிய பிரச்னையாக எழுந்திருக்கிறது. இதற்கு பருவநிலை, எதிர்பாராமல் பெய்த கனமழை என பலக்காரணங்கள் கூறப்படுகிறது.

"திண்ணையில கிடந்த பயலுக்கு திடுக்குன்னு நடந்துச்சாம் கல்யாணம்" எனப் பெரியவர்கள் பேசக் கேட்டது நம் கண்முன்னே நடந்துகொண்டிருக்கிறது.

நாம் சில நாட்களுக்கு முன்பு வரை சாதாரணமாக வாங்கிச் சென்று சட்னி வைத்து சாப்பிட்டுக்கொண்டிருந்த தக்காளி, இன்று ஏதோ தங்கம் போல அரிய பொருளாக மாறிவிட்டது.

தக்காளியை முன்னிட்டு இப்படியான கூத்துகள் எல்லாம் நடக்கும் என நாம் கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டோம். இதில் ஒருபடி மேலே சென்று தனது கடைகளில் தக்காளிகளைப் பாதுகாக்க பவுன்சர்களை நியமித்துள்ளார் ஒரு வியாபாரி.

வாரணாசியைச் சேர்ந்தவர் அஜய் ஃபௌஜி. இவர் லங்கா பகுதியில் காய்கறி வியாபாரம் செய்துவருகிறார். தன்னிடம் தக்காளி வாங்க வருபவர்கள் பேரம் பேசும்போது தகராறு எதுவும் நடக்காமல் இருக்க இந்த நடவடிக்கையை எடுத்ததாக கூறியுள்ளார்.

அஜய் ஃபௌஜி சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்தவர், அந்த கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் பிறந்தநாளில் தக்காளி வடிவ கேக் வெட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

நரேந்திர மோடியின் ஆட்சிக்காலத்தில் பொருட்களின் விலை எப்படி சீரற்று ஏறுகிறது என்பதைக் காட்டும்படி கடையில் ஒரு போர்டும் வைத்துள்ளார்.

பவுன்சர்களை நிறுத்தியுள்ள அவர் அவர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கிறார் என்பது பற்றிக் கூறவில்லை.

தக்காளி விற்பனை செய்ய பவுன்சர்களை நியமித்த வியாபாரி - ஒரு அடடே சம்பவம்!
Hopshoots : ஒரு கிலோ ரூ.1 லட்சமா! உலகிலேயே விலையுர்ந்த காய்கறி - அப்படி என்ன ஸ்பெஷல்?

அஜய் ஃபௌஜியின் கடையில் தக்காளி 140 - 160 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

இவரது கடையின் படத்தை சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பகிர்ந்து, "பிஜேபி தக்காளிகளுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும்" எனப் பதிவிட்டிருந்தார்.

தக்காளி விற்பனை செய்ய பவுன்சர்களை நியமித்த வியாபாரி - ஒரு அடடே சம்பவம்!
Sanjay Dutt : மதுபான பிராண்டை தொடங்கிய லியோ பட நடிகர் - விலை எவ்வளவு தெரியுமா?

தக்காளி விலையேற்றத்தால் தக்காளி இல்லாத ரெசிபிக்களை மக்கள் தேடத் தொடங்கிவிட்டனர். மக்கள் மட்டுமல்ல, டோமினோஸ் போன்ற உணவகங்களே தக்காளியை தவிர்க்கின்றன.

"இந்த தக்காளிக்கெல்லாம் காலம் வரும்போது, நமக்கும் வராதா?" என்பதுதான் இப்போது இளைஞர்களுக்கு மோடிவேஷனல் வரிகளாக இருக்கிறது.

தக்காளி விற்பனை செய்ய பவுன்சர்களை நியமித்த வியாபாரி - ஒரு அடடே சம்பவம்!
தக்காளி இந்தியாவிற்குள் எப்படி வந்தது தெரியுமா? சமையல் ராணி குறித்த சுவாரஸ்ய தகவல்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com