Vande Bharat: சென்னை முதல் ஷீரடி வரை - வந்தே பாரத் ரயில் செல்லும் பாதைகள் இவை தான்!

இந்த வந்தே பாரத் ரயில், இயற்கை எழில் கொஞ்சும் சில அழகிய பாதைகள் வழியாக பயணிக்கின்றன. அந்த வழித்தடங்களை இங்கு பார்க்கலாம்
Vande Bharat
Vande Bharatட்விட்டர்
Published on

கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15ஆம் தொடங்கப்பட்டது வந்தே பாரத் ரயில் சேவை. சமீபத்தில் கிட்ட தட்ட நான்கைந்து முறை வந்தே பாரத் ரயில் விபத்துக்குள்ளான செய்திகளை கூட நாம் படித்திருப்போம்.

எனினும், இந்த வந்தே பாரத் ரயில், இயற்கை எழில் கொஞ்சும் சில அழகிய பாதைகள் வழியாக பயணிக்கின்றன. அந்த வழித்தடங்களை இங்கு பார்க்கலாம்

சென்னை - மைசூரு

479 கி மீ, 6 மணி நேரம் 40 நிமிட இந்த பயணம், அழகிய பச்சை ஆடை போர்த்திய காடுகளுக்கு மத்தியிலும் நம்மை கூட்டிச்செல்கிறது.

இந்த ரயில் புதன் கிழமைகளில் இயங்காது

டெல்லி - வாரணாசி

2019ல் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டபோது ரயில் பயணித்த முதல் வழித்தட்ம் இது. டெல்லி-கான்பூர்-அலகாபாத்- வாரணாசி வழியாக இந்த ரயில் பயணிக்கிறது.

திங்கள் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் இந்த ரயில் சேவை இருக்காது

Vande Bharat
Indian Railways: 73 ஆண்டுகளாக இலவச ரயில் சேவை; தினசரி 800 பயணிகள் - எங்கே?

டெல்லி - கத்ரா

புது டெல்லியிலிருந்து வைஷ்னோ தேவி பேஸ் கேம்ப் வரை 8 மணி நேரத்தில் பயணிக்கிறது இந்த ரயில்.

செவ்வாய் கிழமைகளில் டெல்லி - கத்ரா வந்தே பாரத் ரயில் இயங்காது

காந்திநகர் - மும்பை

செப்டம்பர் 30,2022 அன்று அறிமுகப்படுத்தப்பட்ட வந்தே பாரத் 2.0 வெர்ஷன் ரயில் தான் இந்த வழித்தடத்தில் பயணிக்கிறது. இந்த ரயில் பயணம் அதிவேகமாகவும் அமைதியாகவும், மென்மையானதாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது

ஹவுரா - ஜல்பைகுரி

மல்டா நகரம், போல்பூர் மற்றும் பர்சோயி வழியாக செல்லும் இந்த ரயில் வாரத்தில் 6 நாட்கள் இயங்குகிறது

Vande Bharat
உங்களை பிரமிக்க வைக்கும் 7 இந்திய ரயில் பாதைகள் - நிச்சயம் போய் பாருங்க!

செகந்திராபாத் - விசாகப்பட்டினம்

செகந்திராபாத்திலிருந்து அதிகாலை 3 மணிக்கு புறப்படும் இந்த ரயில், மறுநாள் காலை 11 மணியளவில் வைசாக் செல்கிறது. ஞாயிற்றுக் கிழமைகளை தவிர மற்ற நாட்களில் இயங்கும்

மும்பை - ஷீரடி

சுமார் 5 மணி நேரம் 20 நிமிடங்கள் ஆகிறது இந்த ரயிலில் மும்பையிலிருந்து ஷீரடி செல்ல. செவ்வாய் கிழமைகளை தவிர மற்ற நாட்களில் இயங்கும்.

Vande Bharat
”இந்த பொறப்புதா நல்லா ருசிச்சு சாப்பிட கிடைச்சது”- இந்தியாவின் ஃபேம்ஸ் ரயில் நிலைய உணவுகள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com