கூக்கல் நீர்வீழ்ச்சி முதல் அம்போலி வரை - இந்தியாவில் டிரெக்கிங் செல்ல 5 சிறந்த ஸ்பாட்ஸ்!

சுற்றுலாக்களில் டிரெக்கிங் முக்கிய இடத்தை பிடிக்கிறது. அப்படி இந்தியாவில் டிரெக்கிங் செல்ல ஏதுவான இடங்கள் என்னென்ன என்பதை இங்கு பார்க்கலாம்.
கூக்கல் நீர்வீழ்ச்சி முதல் அம்போலி வரை - இந்தியாவில் டிரெக்கிங் செல்ல 5 சிறந்த ஸ்பாட்ஸ்
கூக்கல் நீர்வீழ்ச்சி முதல் அம்போலி வரை - இந்தியாவில் டிரெக்கிங் செல்ல 5 சிறந்த ஸ்பாட்ஸ்ட்விட்டர்

சுற்றுலாக்கள் செல்ல நம் எல்லோருக்கும் பிடிக்கும். ஸ்கூல் படிக்கும்போது எல்லாம் மறுநாள் எக்ஸ்கர்ஷுனுக்கு ராத்திரி முழுக்க தூங்காமல் இருப்போம்.

அந்த உற்சாகமும் எதிர்பார்ப்பும் நாம் எவ்வளவு பெரியவர்களாக வளர்ந்தாலும் மாறாது. தங்களது தேவைகளுக்கு ஏற்ப பலரும் பலவிதமான பயணங்களை மேற்கொள்வார்கள்.

சிலர் வாழ்க்கையை தேடி, தன்னை தேடிய பயணத்தில், அமைதிக்கான பயணத்தில் இருப்பார்கள், சிலர் அட்வென்சர் விரும்பிகளாக இருப்பார்கள்.

இப்படியான சுற்றுலாக்களில் டிரெக்கிங் முக்கிய இடத்தை பிடிக்கிறது.

அப்படி இந்தியாவில் டிரெக்கிங் செல்ல ஏதுவான இடங்கள் என்னென்ன என்பதை இங்கு பார்க்கலாம்.

கூக்கல் நீர்வீழ்ச்சி, தமிழ்நாடு

கொடைக்கானலில் இருந்து சுமார் 35 கிமீ தூரத்தில் அமைந்திருக்கும் இந்த நீர்வீழ்ச்சிக்கு டிரெக் செய்து தான் செல்லமுடியும். அதிக மக்களால் அறியப்படாத இந்த நீர்வீழ்ச்சிக்கு 6 கிமீ தூரம் வரை டிரெக் செய்யவேண்டிய கட்டாயம் இருக்கிறது.

கூக்கல் கிராமத்தில் இருந்து தொடங்கும் இப்பயணத்தில், வழிநெடுக பச்சை ஆடை போர்த்திய பெரிய மலைகளை காணலாம். சற்றே பயத்தை அளிக்கக்கூடிய கரடு முரடான பாதையை கடந்து அடர் வனத்துக்குள் செல்ல, கூக்கல் நீர்வீழ்ச்சியை அடையலாம்.

கூக்கல் நீர்வீழ்ச்சி முதல் அம்போலி வரை - இந்தியாவில் டிரெக்கிங் செல்ல 5 சிறந்த ஸ்பாட்ஸ்
Travel: புலிகட் ஏரி டு தலகோனா நீர்வீழ்ச்சி - சென்னையை சுற்றியுள்ள 5 வீக்-எண்ட் ஸ்பாட்ஸ்!

ஆகும்பே, கர்நாடகா

கடல்மட்டத்திலிருந்து 3,772 அடி மேலே அமைந்திருக்கிறது நரசிம்ம பர்வதம். இதுவே ஆகும்பேவிலிருக்கும் மிக உயர்ந்த மலைச்சிகரம்.

ராஜநாகங்களின் தலைநகரமான இது மழைக்காடுகளில் ஒன்று

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்திருக்கும் இவ்விடத்துக்கு இரண்டு வழிகளில் செல்லலாம்.

ஒன்று மல்லந்தூர் என்கிற இடத்திலுருந்து செல்வது. இங்கிருந்து நரசிம்ம பர்வதத்துக்கு 13 கி மீ, அதில் முதல் 8 கிமீ தூரம் அடர்ந்த காடுகள், உயர்ந்த மரங்கள் இருக்கும். வழியில் சீதா மற்றும் பர்கான நீரூற்றுகளை காணலாம். அங்கிருந்து 2 கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது நரசிம்ம மலை.

மழைக்காலங்களில் இங்கு அட்டைப் பூச்சிகளின் ஆதிக்கம் அதிகமாகவே இருக்கும்.

இந்த நரசிம்ம மலைக்கு செல்ல மற்றொரு வழி சிருங்கேரியிலிருக்கும் கிக்கா என்கிற இடம் இங்கிருந்து நரசிம்ம மலை 6 கிமீ தொலைவில் இருக்கிறது. குறுகிய மணல் சாலைகள், காடுகள் மற்றும் மலைகளை கடந்து நரசிம்ம பர்வதத்தை அடையலாம்

மல்லந்தூர் வழியை இந்த வழி சற்றே ஆபத்துகள், சிரமங்கள் குறைந்ததாக இருக்கிறது

சைலண்ட் வேலி தேசிய பூங்கா, கேரளா

கேரளாவின் அழகிய மழைக்காடுகளில் ஒன்று சைலண்ட் வேலி தேசிய பூங்கா. சுமார் 89 சதுரடி பரப்பளவு கொண்ட இந்த தேசிய பூங்கா கேரளாவின் குண்டலி மலைகளில் அமைந்திருக்கிறது.

அரிய வகை விலங்குகள், தாவரங்கள் பறவைகள் இங்கு பாதுகாக்கப்படுகின்றன. டிசம்பர் முதல் ஏப்ரல் மாதம் வரை சைலண்ட் வேலி தேசிய பூங்காவிற்கு சென்றுவர சிறந்த தருணமாக இருக்கும்.

இங்கு சஃபாரி, குந்தி நதிக்கு டிரெக்கிங் செல்லலாம்

கூக்கல் நீர்வீழ்ச்சி முதல் அம்போலி வரை - இந்தியாவில் டிரெக்கிங் செல்ல 5 சிறந்த ஸ்பாட்ஸ்
Travel: சுசா முதல் ஏதென்ஸ் வரை - உலகின் பழமையான 5 நகரங்கள்

சிங்கலிலா தேசிய பூங்கா, மேற்கு வங்கம்

இந்தியா - நேபாளம் எல்லைப்பகுதியில் அமைந்திருக்கும் இந்த தேசிய பூங்காவில் அரிய வகை விலங்கினங்களை காணலாம். முக்கியமாக சிவப்பு நிற பாண்டாக்கள் இருக்கும் ஒரு சில இடங்களில் ஒன்று இந்த சிங்கலிலா தேசிய பூங்கா.

இங்குள்ள சண்டக்பூ என்கிற இடத்திற்கு டிரெக்கிங் செல்வது தான் இந்த தேசிய பூங்காவின் சிறப்பம்சமே. சண்டக்பூ தான் மேர்கு வங்கத்தின் மிக உயர்ந்த இடம்.

இங்கிருந்து கஞ்சன்சுங்கா, எவரஸ்ட் மலைச்சிகரங்களை காணமுடியும். வழி எங்கிலும் மடங்கள் அழகிய சிறிய கிராமங்கள் அமைந்திருக்கும் இந்த மலைப்பகுதியானது கடல் மட்டத்திலிருந்து 3636 மீ உயரத்தில் இருக்கிறது.

அம்போலி, மகாராஷ்டிரா

மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்திருக்கும் அம்போலி, இரவு நேர டிரெக்கிங்கிற்கு சிறந்த இடம். இந்த இடத்தை மகாராஷ்டிராவின் சிராபுஞ்சி என்றும் அழைக்கின்றனர்.

இங்கு குகைகள் அதிகம், மற்றும் தவளை இனங்கள் பாம்புகள் ஏராளம். இதனால் இப்பகுதிக்கு டிரெக்கிங் செல்ல சிறப்பு அனுமதி வேண்டும்.

கூக்கல் நீர்வீழ்ச்சி முதல் அம்போலி வரை - இந்தியாவில் டிரெக்கிங் செல்ல 5 சிறந்த ஸ்பாட்ஸ்
Travel: பந்திபூர் தேசிய பூங்கா பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com