ஆட்டோவில் இந்தியாவை சுற்றிய லண்டன் காரர்கள் - என்ன சொல்கிறார்கள்?

இந்தியாவில் ஆட்டோவில் பயணிப்பது குறித்து, "லண்டன் ஓட்டுநர்கள் கொஞ்சம் கோபக்காரர்கள் என்று நினைத்தேன். ஆனால், இந்தியாவில் அடித்த ஹார்ன் சத்தத்தில் எனது வலது காது கேட்காமலேயே போய்விட்டது
ஆட்டோவில் இந்தியாவை சுற்றிய லண்டன் காரர்கள் - என்ன சொல்கிறார்கள்?
ஆட்டோவில் இந்தியாவை சுற்றிய லண்டன் காரர்கள் - என்ன சொல்கிறார்கள்?Twitter
Published on

லண்டனைச் சேர்ந்த இரண்டு நண்பர்கள் மிகவும் வித்தியாசமான முறையில் இந்தியாவைச் சுற்றி வருகின்றனர். ஒருவர் பென், இவர் மலேசிய வம்சாவளியைச் சேர்ந்தவர். மற்றொருவர் டெல்லியைத் தாயகமாக கொண்ட ஜெய். அவர்கள் கொச்சி முதல் கேங்டாக் வரை ஆட்டோவில் சுற்றிவருகின்றனர்.

தங்களது பயணம் குறித்து ஜெய் பேசும் போது, " நாங்கள் இதுவரை 10 நாட்கள் பயணித்திருக்கிறோம், நாங்கள் இப்படி ஆட்டோவில் பயணம் செய்ய இரண்டு காரணங்கள் இருக்கின்றது. ஒன்று இந்தியாவை தனித்துவமான முறையில் அனுபவிக்கலாம், மற்றொருன்று வீடற்றவர்களுக்கான அறக்கட்டளை மற்றும் சுற்றுசூழல் அறக்கட்டளைக்கு நிதி வசூலிப்பது." எனக் கூறினார்.

மேலும் பென்னிடம் கேட்கப்பட்டபோது, "இந்தியா ஒரு அழகான நாடு, அதன் மக்களையும் கலாச்சாரத்தையும் ஆட்டோவில் வித்தியாசமான கோணத்தில் பார்ப்பதும், இரண்டு பெரிய காரியங்களுக்காக நிதி திரட்டுவதும் தான் எங்கள் நோக்கம்" என்றார்.

பென் மற்றும் ஜெய் இருவரும் புதன் கிழமை பாட்னாவுக்கு வந்து சேர்ந்தனர். அரை நாட்கள் கழித்த பிறகு சிலிகுரிக்கு புறப்பட்டுள்ளனர்.

புறப்படுவதற்கு முன், அவர்கள் பாட்னா பள்ளி மாணவர்களுடன் சிறிது நேரம் செலவிட்டு, அவர்களுடன் தங்கள் பயண அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

இந்தியா சாலைகளில் பயணிப்பது இந்தியர்களான நமக்கே சவாலானதாக இருக்கும். லண்டனில் வசித்து வரும் பென் இதுகுறித்து, "நாங்கள் லண்டனில் வசிக்கிறோம். லண்டன் ஓட்டுநர்கள் தான் கொஞ்சம் கோபக்காரர்கள் என்று நினைத்தேன்.

ஆனால், இந்தியாவில் பயணம் செய்வது வித்தியாசமான அனுபவம். நிறைய வழிமுறைகளை ஃபாலோ செய்ய வேண்டும். நான் சில குழந்தைகளுடன் கேலி செய்து விளையாடினேன். எனது வலது காது ஹார்ன் சத்தத்தில் கேட்காமலேயே போய்விட்டது." எனக் கூறினார்.

ஆட்டோவில் இந்தியாவை சுற்றிய லண்டன் காரர்கள் - என்ன சொல்கிறார்கள்?
மணாலி, முசோரி, மசினகுடி, மூணார் : கோடையில் சுற்றி பார்க்க வேண்டிய 20 இடங்கள்!

இதுப்பற்றி ஜெய், "சாலை முழுவதும் கூச்சலாக இருந்தது. மக்களுடன் தொடர்புகொள்வது கடினமாக இருந்தது." என்றார்.

மேலும் இந்தியர்கள் பழகும் விதம் குறித்து, "நாங்கள் பார்த்த அனைவருமே மிகவும் நட்போடு பழகினர். நாம் சரியாக அவர்களிடம் பேச முடியாவிட்டாலும் மக்கள் நமக்கு உதவ முயற்சிக்கிறார்கள்." என்றார்.

ஆட்டோவில் இந்தியாவை சுற்றிய லண்டன் காரர்கள் - என்ன சொல்கிறார்கள்?
வெளிநாடுகளுக்கு Trip போக ஆசையா? விசா இல்லாமல் பயணம் செய்யக் கூடிய ஆசிய நாடுகள் தெரியுமா?

இப்போது மீண்டும் லண்டன் புறப்படும் பென்னும் ஜெய்யும் கூடிய சீக்கிரம் திரும்பவும் இந்தியாவுக்கு வர விரும்புகிறார்களாம். அவர்கள் போதுமான அளவு இந்தியாவை சுற்றிப்பார்த்து அனுபவம் பெறவில்லை என்கின்றனர். லண்டன் தெருக்களில் ஆட்டோ ஓடுவதைப் பார்க்க விரும்புவதாக பென் குறிப்பிட்டார்.

ஆட்டோவில் இந்தியாவை சுற்றிய லண்டன் காரர்கள் - என்ன சொல்கிறார்கள்?
அண்டார்டிகா : லண்டன் நகரம் அளவிலான பனிப்பாறை பிரிந்தது - ஆய்வாளர்கள் உயிருக்கு ஆபத்தா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com