மணாலி, முசோரி, மசினகுடி, மூணார் : கோடையில் சுற்றி பார்க்க வேண்டிய 20 இடங்கள்!

இந்தியாவின் பல்லுயிர் தன்மை, விதவிதமான நிலப்பரப்புகள் குறித்து விளக்க வேண்டியது இல்லை. ஆண்டின் எல்லா நாட்களிலும் சுற்றுலாப்பயணிகளை வரவேற்கும் இடங்கள் இங்கு இருக்கின்றன. குறிப்பாக கோடைக்காலத்தில் நாம் பார்க்க வேண்டிய இடங்களை இங்கு தொகுத்துள்ளேன்.
மணாலி, முசோரி, மசினகுடி, மூணார் : கோடையில் சுற்றி பார்க்க வேண்டிய 20 இடங்கள்!
மணாலி, முசோரி, மசினகுடி, மூணார் : கோடையில் சுற்றி பார்க்க வேண்டிய 20 இடங்கள்!canva
Published on

கோடை வெயிலில் எல்லாருமே கருவாட்டைப் போல சுருங்கத் தொடங்கிவிட்டோம். நம் உடல் மட்டுமல்லாமல் அன்றாட சுழற்சியான ஓட்டத்தினால் மனமும் வாடிப்போகும்.

சம்மர் வந்தாலே அவ்வப்போது பெரிய ட்ரிப் செல்வது தான் வெக்கையில் இருந்து உடலையும் மனதையும் காத்துக்கொள்ளும் சிறந்த வழி!

இந்தியா முழுவதும் வெயில் காலத்தில் குறிப்பாக ஏப்ரலில் நாம் செல்ல வேண்டிய 20 இடங்கள் குறித்துப் பார்க்கலாம். வரவிருக்கும் நீளமான வார இறுதிகள், ரம்ஜான் பண்டிகையைப் பயன்படுத்தி இந்த இடங்களுக்கு சென்றுவந்துவிடலாம்.

ஸ்ரீநகர், ஜம்மு காஷ்மீர்

ஜீலம் நதிக்கரையில் அமைந்திருக்கிறது ஸ்ரீநகர். உயர்ந்த மலைகள், பசுமை, சினார் மரங்கள், படகுகள் மற்றும் அற்புதமான தால் ஏரி என சொர்க்கத்தின் சொச்சம் போல காட்சியளிக்கிறது ஸ்ரீநகர்.

நம் அன்றாட வறட்சியில் இருந்து விடுபட்டு கண்கவரும் பிரம்மாண்டமான இந்திராகாந்தி துலிப் பூந்தோட்டத்தைப் பார்வையிட்டு வரலாம்.

நிஜீன் ஏரி, பீடாப் பள்ளத்தாக்கு, நிஷாத் பாக், முகல் கார்டன் மற்றும் சாஷ்ம்-இ-ஷாஹி கார்டன் ஆகிய இடங்களையும் சுற்றிப்பார்க்கலாம்.

தால் ஏரிக்கரையில் உலாவி சுற்றுவட்டார மக்களின் கலாச்சாரம், பன்பாட்டைத் தெரிந்துகொள்ளலாம்.

மணாலி, ஹிமாச்சல பிரதேசம்

மணாலியின் பசுமையான பள்ளத்தாக்குகள் மற்றும் அமைதியான மலைகளுக்கு சென்றுவிட்டால் அங்கிருந்து திரும்பவே மனம் இருக்காது.

மலையேற்றம், பாராகிளைடிங் மற்றும் பறவைகளைப் பார்வையிடுதல் மற்றும் அற்புதமான கோயில்களுக்கு செல்லுதல் என செய்வதற்கு மணாலியில் பல விஷயங்கள் இருக்கின்றன.

மணாலியில் பகல் வெப்பநிலையே 14-20 டிகிரி செல்சியஸ் தான் இருக்கும். நகரத்தில் கம்பளி ஆடைகள் மற்றும் காலுறைகள் வாங்கிக்கொண்டு, சித்து, கட்டா மற்றும் பாப்ரு போன்ற உள்ளூர் உணவுகளை அனுபவிக்கலாம்.

மணாலி, முசோரி, மசினகுடி, மூணார் : கோடையில் சுற்றி பார்க்க வேண்டிய 20 இடங்கள்!
சிட்னி முதல் தைபே வரை : உலகிலேயே சுத்தமான காற்று இருக்கும் சுற்றுலா தலங்கள் இவைதான்!

தர்மசாலா, ஹிமாச்சல பிரதேசம்

கோடைக் காலத்தில் செல்ல ரம்மியமான இடம் ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள தர்மசாலா. திபெத்திய மற்றும் காங்க்ரா கலாச்சாரங்களின் கலவையை கொண்ட இந்த மலைவாசஸ்தலம் தலாய் லாமாவின் இருப்பிடமாக அறியப்படுகிறது.

ஆன்மீகத்துக்கு மட்டுமல்லாமல் ஆட்டம் பாட்டத்துக்கும் குறை வைக்காத ஊர் தர்மசாலா. இளைஞர்கள் இங்கு மலையேற்றம் செய்யக் குவிவது குறிப்பிடத்தக்கது.

தர்மசாலாவில் ட்ரையண்ட் மலையேற்றம் முக்கியமான செயல்பாடு. வைல்டர்னஸ் சர்ச் மற்றும் கியூட்டோ மடாலயத்தை நிச்சயம் பார்வையிட வேண்டும்.

கசௌலி, ஹிமாச்சலபிரதேசம்
கசௌலி, ஹிமாச்சலபிரதேசம்

கசௌலி, ஹிமாச்சல பிரதேசம்

சிம்லா மற்றும் கல்காவுக்கு இடையில் அமைந்திருக்கிறது கசௌலி. 1842ல் பிரிட்டிஷாரால் உருவாக்கப்பட்டது.

இயற்கை அழகு, பழங்கால காலனித்துவ கட்டிடக்கலை, அழகான கூழாங்கல் சாலைகள் மற்றும் காத்திக் பாணி தேவாலயங்கள் ஆகியவற்றால் இயற்கை எழில் கொஞ்சும் மலைப் பிரதேசமாக கசௌலி விளங்குகிறது.

சாகச விரும்பிகளுக்கும், இயற்கையை ரசிப்பவர்களுக்கும், உணவு மற்றும் பாரம்பரியத்தைத் தேடுபவர்களுக்கும் கசௌலி ஏற்ற இடம்.

மணாலி, முசோரி, மசினகுடி, மூணார் : கோடையில் சுற்றி பார்க்க வேண்டிய 20 இடங்கள்!
இந்தியாவின் 10 சிறந்த வனவிலங்கு சரணாலயங்கள் | Visual Story
முசோரி, உத்தரகாண்ட்
முசோரி, உத்தரகாண்ட்

முசோரி, உத்தரகாண்ட்

தமிழகத்தில் கொடைக்கானலை மலைகளின் ராணி என்பதுபோல முசோரியும் மலைகளின் ராணியாக கருதப்படுகிறது.

நாக் திப்பா மலையேற்றம், போட்டிங், பாறை ஏறுதல் போன்ற சாகச செயல்பாடுகள் முசோரியில் உண்டு. இதுவும் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட மலைநகரமாகும். இங்கு ஆங்கிலேயர்களுக்கும் கோக்ராக்களுக்கு போரெல்லாம் நடந்திருக்கிறது.

நைனிடால், உத்தரகண்ட்
நைனிடால், உத்தரகண்ட்

நைனிடால், உத்தரகண்ட்

மலைநகரமான நைனிடால் மத்தியில் மரகத பச்சை நிறத்தில் கண்ணைப்பறிக்கும் ஏரி இருக்கிறது. அடர்ந்த தோட்டங்கள் மற்றும் அமைதியான சூழலால் சூழப்பட்ட ஒன்பது ஏரிகளின் நகரம் என்று அழைக்கப்படுகிறது.

நைனிடால் ஏரி, முக்தேஷ்வர் கோவில், நைனா சிகரம், பாங்கோட் மற்றும் கில்பரி பறவைகள் சரணாலயம் ஆகிய இடங்களைப் பார்வையிடலாம்.

மணாலி, முசோரி, மசினகுடி, மூணார் : கோடையில் சுற்றி பார்க்க வேண்டிய 20 இடங்கள்!
பெரியார் ஏரி முதல் வோல்டா வரை : உலகெங்கிலும் நீரில் மூழ்கிய காடுகள் குறித்து தெரியுமா?
ஜிம் கோர்பட் தேதிய பூங்கா, உத்தர்கண்ட்
ஜிம் கோர்பட் தேதிய பூங்கா, உத்தர்கண்ட்

ஜிம் கோர்பட் தேசிய பூங்கா, உத்தராகண்ட்

காட்டுக்குள் வனவிலங்குகளை பார்த்தபடி உலாவுவதும், பறவைகளை வேடிக்கைப் பார்ப்பதும் உங்களது பக்கெட் லிஸ்டில் இருந்தால் நிச்சயமாக ஜிம் கோபர்ட் தேசிய பூங்கா உங்களுக்கானது.

கார்பெட் நீர்வீழ்ச்சி, கார்ஜியா கோயில் மற்றும் மீன்பிடித்தல் மற்றும் மலை பைக்கிங் போன்ற நடவடிக்கைகள் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.

ஊட்டி, தமிழ்நாடு
ஊட்டி, தமிழ்நாடு

ஊட்டி, தமிழ்நாடு

ஊட்டியின் அழகை சொல்லித் தெரியவேண்டியதில்லை. பரந்த தேயிலை தோட்டங்கள், நீல நிற மலைகள் மற்றும் புல்வெளிகள் ஊட்டியின் ரம்மியத்தை பறைசாற்றும்.

பைன் காடுகள் மற்றும் யூகலிப்டஸ் மரங்கள், அத்துடன் அழகான நீர்வீழ்ச்சிகள் ஊட்டிக்கு உங்களை நிச்சயமாக ஈர்க்கும்.

தேயிலை மியூசியம், நீலகிரி மலை ரயில்வேயை நிச்சயமாக பார்வையிட வேண்டும்.

மணாலி, முசோரி, மசினகுடி, மூணார் : கோடையில் சுற்றி பார்க்க வேண்டிய 20 இடங்கள்!
Travel: பந்திபூர் தேசிய பூங்கா பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்
மசினகுடி, தமிழ்நாடு
மசினகுடி, தமிழ்நாடு

மசினகுடி, தமிழ்நாடு

நீலகிரியில் அதிகம் ஆர்ப்பாட்டமில்லாத நிசப்தமான மலைப்பகுதி மசினகுடி. ஊட்டியிலிருந்து 1 மணி நேரப் பயணத்தில் இங்கு வந்துவிடலாம்.

இங்கு அடர்ந்த காடுகளைப் பார்க்கலாம். இது முதுமலை வனவிலங்கு சரணாலயத்தின் பகுதியாகும். இயற்கை ஆர்வலர்களுக்கும் புகைப்பட விரும்பிகளுக்கும் மிகவும் பிடித்தமான இடமாக அமையும் மசினகுடி.

பைக்காரா நீர்வீழ்ச்சி, முதுமலை தேசிய பூங்கா, மறவகண்டி அணை மற்றும் மோயார் ஆறு அகியவற்றைப் பார்வையிடலாம்.

மணாலி, முசோரி, மசினகுடி, மூணார் : கோடையில் சுற்றி பார்க்க வேண்டிய 20 இடங்கள்!
Travel: கோவா முதல் கேரளா வரை: கிறிஸ்துமஸை கொண்டாட 5 கூல் டெஸ்டினேஷன்ஸ்!
மூணார்
மூணார்

மூணார், கேரளா

மாட்டுப்பட்டி அணை, குண்டலா ஏரியில் ஷிகாரா சவாரி ஆகியவை மூணாரின் சிறப்புகள் ஆகும்.

அங்குள்ள தெருக்களில் ஷாப்பிங் செய்யலாம், உள்ளூர் பண்டங்களை வாங்கி உண்ணலாம்.

அமைதியான இயற்கைச் சூழலை விரும்புபவர்களுக்கு மூணார் சொர்க்கமாக இருக்கும். மரங்களுக்கு நடுவில் நடப்பதும், அருவிக்கரையில் அமர்ந்து காற்று வாங்குவதும் பிடிக்காதவர்கள் யாராவது இருக்க முடியுமா?

லக்கம் நீர்வீழ்ச்சி, களரி க்ஷேத்ராவையும் நிச்சயம் பார்வையிட வேண்டும்.

மணாலி, முசோரி, மசினகுடி, மூணார் : கோடையில் சுற்றி பார்க்க வேண்டிய 20 இடங்கள்!
Ladakh : சுற்றுலா பயணிகளால் சுடுகாடாகும் லடாக் - தண்ணீர் பஞ்சத்தில் தவிக்கும் மக்கள்

இரண்டாவது பகுதியில் அடுத்த 10 இடங்களைப் பார்க்கலாம்...

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com