நீச்சல் உடை புகைப்படம் பதிவிட்ட கல்லூரி பேராசிரியை - டிஸ்மிஸ் செய்த நிர்வாகம்

தனக்கு ஏற்பட்ட இந்த நெருக்கடிக்குக் காரணமான மாணவனும், தந்தையும் யார் என்று கூட தனக்குத் தெரியாது என்று அந்த பேராசிரியை தெரிவித்துள்ளார். இதுவரையில், அவர்கள் யார் என்ற விவரத்தை தன்னிடம் தெரிவிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
Instagram
InstagramTwitter
Published on

கொல்கத்தாவைச் சேர்ந்த பேராசிரியை ஒருவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் உடையில் உள்ள புகைப்படங்களை வெளியிட்டதற்காக ராஜினாமா செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சேவியர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியரான அவர், தனது பிகினி புகைப்படத்தை சில மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கிறார். அதனைக் காரணம் காட்டி தற்போது அவரை ராஜினாமா செய்யும்படி நிர்ப்பந்திப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த சம்பவத்தால், தான் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், தனது குடும்பத்தினர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், பல்கலைக்கழக நிர்வாகம் தனக்கு எதிராகத் தொடுத்துள்ள 99 கோடி அவதூறு வழக்கையும் அவர் எதிர்த்துப் போராடி வருகிறார்.

Instagram
InstagramPexels

ஒரு மாணவனின் தந்தை, தனது மகன் ஏதோ ஒரு ஆபாசமான புகைப்படத்தைப் பார்த்ததாகக் கூறி பல்கலைக்கழக நிர்வாகத்திடம் புகார் தெரிவித்திருக்கிறார். விசாரணையில் அது, அந்த பேராசிரியின் புகைப்படம் எனத் தெரிய வர, நிர்வாகம் இப்போது இவரை ராஜினாமா செய்யச் சொல்லி இருக்கிறது.

”அந்த புகைப்படங்களை நான் இன்ஸ்டா ஸ்டோரியில் தான் வைத்தேன். அவை எப்படி பொதுவெளிக்கு வந்தன என்பது குறித்து தனக்கு தெரியாது” என்று பேராசிரியை கூறுகிறார். இன்ஸ்டா ஸ்டோரி என்பது, 24 மணி நேரத்தில் மறையும் ஒரு அம்சமாகும்.

”யாரோ தனக்கு எதிரானவர்கள் தான் அந்த புகைப்படங்களின் ஸ்கிரீன்ஷாட்டை எடுத்துப் பரப்பியிருக்க வேண்டும்” என்று பேராசிரியை வாதிடுகிறார். ஆனால் பல்கலைக்கழக நிர்வாகம் அதனை நம்பத் தயாராக இல்லை. மேலும், அந்த புகைப்படங்கள் யாவும் தான் கல்லூரியில் பேராசிரியையாக பணியில் சேர்வதற்கு முன்பு எடுக்கப்பட்டவை என்ற விளக்கத்தையும் நிர்வாகம் ஏற்க மறுத்திருக்கிறது.

Instagram
செலவை குறைப்பதற்காக நாய் உணவை சாப்பிடும் கல்லூரி மாணவர் - ஷாக்கான இணையவாசிகள்
Instagram
InstagramTwitter

”முறையாக அந்த புகைப்படங்கள் மாணவனுக்கு எப்படிக் கிடைத்தன என்று தான் நிர்வாகம் விசாரித்துக் கண்டுபிடித்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் எனக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள்” என்று அந்த பேராசிரியை தெரிவித்துள்ளார்.

மேலும், “"நான் ஆகஸ்ட் மாதம் இந்தப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தேன். பல்கலைக்கழகத்தில் சேர்வதற்கு முன்பு நான் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்களைப் பதிவேற்றியிருந்தேன், அது சட்டப்படி தவறல்ல." என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Instagram
ஜூனியர் மாணவர்களின் கன்னத்தில் அறைந்து ராகிங் செய்த மருத்துவ கல்லூரி மாணவர்கள் | Video

பெற்றோரிடம் இருந்து புகார் வந்த பிறகு, பல்கலைக்கழகத்தால் அமைக்கப்பட்ட குழுவின் முன் ஆஜராகச் சொன்னார்கள். அவர்கள் எனது புகைப்படங்களைக் காட்டி, அது நான்தானா என்று என்னிடம் கேட்டார்கள். இந்தப் படங்கள் மாணவர்களை எப்படிப் பாதிக்கும் என்று தெரியுமா? என்ற கேள்வியை எழுப்பினார்கள்" என்று பேராசிரியை நடந்தவற்றை நினைவு கூர்ந்தார்.

தனக்கு ஏற்பட்ட இந்த நெருக்கடிக்குக் காரணமான மாணவனும், தந்தையும் யார் என்று கூட தனக்குத் தெரியாது என்று அந்த பேராசிரியை தெரிவித்துள்ளார். இதுவரையில், அவர்கள் யார் என்ற விவரத்தை தன்னிடம் தெரிவிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com