7 வருடத்திற்கு முன் கொலை செய்யப்பட்ட பெண்; உயிருடன் இருப்பதை கண்டறிந்த போலீஸ் - எப்படி?

7 ஆண்டுகளுக்கு முன், இளம் பெண் ஒருவரை கடத்தி கொலை செய்த குற்றத்திற்காக விஷ்ணு என்ற இளைஞரை கைது செய்து சிறையில் அடைத்தது உத்திர பிரதேச காவல் துறை.
murder (Rep)
murder (Rep)Canva
Published on

இறந்துவிட்டதாக நினைத்த பெண் உயிருடன் இருப்பதும், திருமணமாகி கணவருடன் வாழ்ந்து வருவதும் சமீபத்தில் தெரியவந்துள்ளது.

அவரை கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட நபர் சிறையில் தண்டனை அனுபவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

7 வருடங்களுக்கு முன் உத்திரபிரதேசத்தின் அலிகார் மாவட்டத்தில், இறந்துவிட்டதாக கூறப்பட்ட பெண் உயிருடன் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Prisoner
PrisonerPexels

7 ஆண்டுகளுக்கு முன், இளம் பெண் ஒருவரை கடத்தி கொலை செய்த குற்றத்திற்காக விஷ்ணு என்ற இளைஞரை கைது செய்து சிறையில் அடைத்தது உத்திர பிரதேச காவல் துறை.

விஷ்ணு சிறையில் தண்டனை அனுபவித்து வரும் நிலையில், அவர் கொன்றதாக கூறப்பட்ட பெண் உண்மையில் இறக்கவில்லை எனவும், உயிருடன் தான் இருக்கிறார் என்பதும் தற்போது தெரியவந்துள்ளது.

மிரர் நவ் செய்தி அறிக்கையின் படி அந்த பெண் தனது நீண்ட நாள் காதலரை திருமணம் செய்துகொண்டு ஹதராஸ் நகரத்திற்கு சென்றுவிட்டார்.

murder (Rep)
உயிருடன் இருப்பவர் இறந்துவிட்டதாக ரெக்கார்ட் - உண்மை வெளிவந்தது எப்படி?

ஆனால், அவர் விஷ்ணு என்பவரால் கடத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டதாக அப்போது நம்பப்பட்டது.

சம்பந்தப்பட்ட பெண்ணின் தந்தையும், மகளின் உடலை அடையாளம் காட்டியதில், குற்றம் நிரூபிக்கப்பட்டு, தண்டனை வழங்கப்பட்டது.

இந்நிலையில் அந்த பெண் உயிருடன் இருக்கும் செய்தி தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அலிகார் நீதிமன்றத்தில் அந்த பெண் ஆஜர்படுத்தப்பட்டார். மேலும், இறந்துவிட்டதாக சந்தேகிக்கும் பெண் இவர் தானா என்பதை அறிய டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள காவல் துறை சார்பில் அனுமதிக் கோரப்பட்டுள்ளது.

Death
DeathTwitter

பெண்ணின் தந்தையும், அவரது மகளை மீண்டும் அடையாளம் காட்டியுள்ள நிலையில், 7 வருடங்களுக்கு முன் அடையாளம் தெரியாத பெண்ணின் உடலை பார்த்து தன் மகள் என அவர் கூறியுள்ளதாக இந்தியா டுடே தளத்தின் அறிக்கை கூறியுள்ளது.

இதற்கிடையில், விஷ்ணுவின் தாயார் சுனிதா குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் தன் மகனுக்கு நியாயம் கிடைக்கவேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்னதாக, கொல்லப்பட்டதாக கூறப்படும் பெண், உயிருடன் இருப்பதாகவும், அவரை குறித்த தகவல்கள் தன்னிடம் இருப்பதாகவும் சொல்லி, அலிகார் உயர் காவல் கண்காணிப்பாளர் கலாநிதி நைதனியை அணுகியுள்ளார் சுனிதா.

அவர் அளித்த தகவலின் அடிப்படையில், விசாரனை மேற்கொண்டபோது தான் இந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

murder (Rep)
Cannibalism: பெண்ணைக் கொலை செய்து உடலை சாப்பிட்ட நபர்; 41 வருடமாக தப்பித்து வாழ்ந்த கதை!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com